Don't Miss!
- News
"நன்றி அண்ணா.. நாம சேர்ந்துட்டோம்.. அவங்களுக்கு பின்னடைவு ஆரம்பம்" - ஸ்டாலினுக்கு தேஜஸ்வி மெசேஜ்!
- Automobiles
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
- Finance
மைக்ரோசாப்ட்: 200 பேர் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
- Technology
கொடுக்குற ஒவ்வொரு ரூபாய்க்கும் 'வொர்த்' ஆன Samsung போன் இந்தியாவில் அறிமுகம்!
- Sports
"ஒருமுறை கூட நோ சொல்லல" செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடு.. முதல்வரை புகழ்ந்துதள்ளிய செஸ் கூட்டமைப்பு தலைவர்
- Lifestyle
வெஜ் சால்னா
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
அடுத்தடுத்து வெளியான படங்கள் ஃப்ளாப்: ஆனாலும் ஓடிடி பிசினஸில் கோடிகளை குவிக்கும் பாகுபலி ஹீரோ!
ஐதராபாத்: 'பாகுபலி' படத்தின் பிரமாண்ட வெற்றியால் தெலுங்கு சினிமா புத்துயிர் பெறத் தொடங்கியது.
சமீபத்திலும் கூட 'புஷ்பா', 'ஆர்.ஆர்.ஆர்' படங்களின் வசூல், ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையே மிரள வைத்தது.
இந்நிலையில், தற்போது மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் பாகுபலி ஹீரோ பிரபாஸின் அடுத்த படம் புதிய சாதனையை படைத்துள்ளது.
இந்த வாரம் தியேட்டர்ஸ், ஓடிடி ரிலீஸ் அப்டேட்: ரசிகர்களோட எதிர்பார்ப்பு எந்த படத்துக்குன்னு பாருங்க

டார்லிங் பிரபாஸ்
டோலிவுட் ரசிகர்களின் டார்லிங் பிரபாஸ், இப்போது தெலுங்கு சினிமாவை கடந்து பான் இந்தியா ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருகிறார். 'பாகுபலி' படத்தின் தாறுமாறான வெற்றி, இவருக்கு இந்தியா முழுவதும் பல கோடி ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது. அதனால், பிரபாஸின் படங்கள் என்றாலே அது பான் இந்தியா ரிலீஸ் என்பது கன்ஃபார்ம் ஆனது.

ஒரேயொரு ஹிட், அடுத்தடுத்து ஃப்ளாப்
'பாகுபலி' படம் பிரபாஸுக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்ததால், அவர் நடிப்பில் அடுத்த வெளியான 'சாகோ' படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதேபோல், 'ராதே ஷ்யாம்' திரைப்படமும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சொல்லிவைத்தாற் போல இந்த இரண்டு படங்களுமே படு தோல்வியடைந்தது. இதனால், பிரபாஸின் நடிப்பில் உருவாகும் சலார், ஆதிபுருஷ் படங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்காது என, விமர்சகர்கள் கூறி வந்தனர்.

எதிர்பார்ப்பில் சலார், ஆதிபுருஷ்
இருந்தாலும் பிரபாஸ் எப்படியும் அசுரத்தனமான கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். பிராசாந்த் நீல் இயக்கத்தில் அவர் நடிக்கும் 'சலார்' படம் நிச்சயம் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுக்கும் என, அவரது ரசிகர்கள் அடித்துக் கூறுகின்றனர். இன்னொருபக்கம் பிரபாஸின் 'ஆதிபுருஷ்' படமும் ஷூட்டிங் முடிந்து, இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. ராமாயணத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படத்தை, ஓம் ராவத் இயக்குகிறார்.

கோடிகளை குவித்த ஆதிபுருஷ்
'ஆதிபுருஷ்' படத்தில் பிரபாஸ் ராமர் கேரக்டரிலும், சஃயிப் அலிகான் ரவணன் கேரக்டரிலும் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள 'ஆதிபுருஷ்' படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை. ஆனால், அதற்குள்ளாகவே இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கிவிட்டதாகத் தெரிகிறது. அதிலும், சுமார் 250 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக வெளியானத் தகவல், திரையுலகையே அதிர வைத்துள்ளது.