Coolie OTT: ரஜினி ரசிகர்களே ரெடியா.. நள்ளிரவில் வெளியாகும் கூலி.. எந்த தளத்தில் தெரியுமா?

சென்னை: ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கூட்டணியில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பான் இந்தியன் திரைப்படமாக வெளியான நிலையில், இன்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக கூலி இருந்த நிலையில், கூலி திரைப்படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் கொண்டாடினார்கள். லோகேஷ் கனகராஜூம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இணைந்ததால், மக்கள் இந்த படத்தை பெரிய அளவில் கொண்டாடினார்கள். சன் பிக்சர்ஸ் பெரிய பொருட்செலவில் தயாரித்த இந்த படத்தில், மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று ரசிகர்கள் கருதினர். சத்யராஜ், ஷ்ருதி ஹாசன், நாகார்ஜூனா, உபேந்திரா, ஆமீர் கான், ஷௌபின், ரச்சிதா ராம் ஆகியோர் நடித்தனர். மேலும், அனிருத் இசையில் கூலி திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக பூஜா ஹெக்டே ஆட்டம் போட்ட பாடல் ரசிகர்களை திணறடித்தது.

Superstar Rajinikanth Coolie OTT
Photo Credit:

சாதனை படைத்த வசூல்: கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி கூலி திரைப்படம் உலகம் முழுவதும் பான் இந்திய திரைப்படமாக வெளியானது. ரஜினி ரசிகர்கள் படத்தை கொண்டாடினாலும், கூலி திரைப்படத்தின் முதல் நாள் கலவையான விமர்சனங்கள் வந்ததால், கூலி படம் பெரும்பாலான பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆனால், முதல் நாளே உலக அளவில் 152 கோடி ரூபாய் வசூல் செய்து, முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற மாபெரும் சாதனையை படைத்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் வசூல் குறையத் தொடங்கிய போதும், 4 நாட்களில் கூலி படம் 404 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ஓடிடி ரிலீஸ்: இந்நிலையில் கூலி திரைப்படம் செப்டம்பர் 11ந் தேதி Prime Videoவில் ஸ்ட்ரீம் ஆகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன் படி கூலி படம் சரியாக நள்ளிரவு 12 மணிக்கு Prime Videoவில் வெளியாக உள்ளது. கூலி படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் மட்டுமே பார்க்க முடியும். ஹிந்தி வெளியிட்டு தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. நள்ளிரவில் படம் வெளியாக உள்ளதால், ரஜினி ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X