ஓடிடி.,யிலும் கலக்க வந்த சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்...சாதனை படைக்குமா?
சென்னை : தியேட்டர்களில் ரிலீசாகி ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் ஓடிடி தளத்திலும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. வலிமை படத்தை போல் இந்த படமும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டு, சாதனை படைக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சத்யராஜ், வினய், சரண்யா பொன்வண்ணன், சூரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார்.

முதல் சூர்யா படம்
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குடும்ப பொழுதுபோக்கு படம் தான் எதற்கும் துணிந்தவன். இந்த படம் மார்ச் 10 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டு, ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. 2019 ம் ஆண்டு சூர்யா நடித்த காப்பான் படத்திற்கு பிறகு, மூன்று ஆண்டுகள் கழித்து, அதுவும் கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு தியேட்டர்களில் வெளியான முதல் சூர்யா படம்.

இத்தனை கோடி வசூலா
சுமார் 75 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட எதற்கும் துணிந்தவன் படம் 179 முதல் 200 கோடிகளை வசூல் செய்தது. ரசிகர்கள் கொண்டாடிய படமாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் பாசிடிவ் விமர்சனங்களை பெற்ற படம். க்ளைமாக்ஸ் வரை ரசிகர்களுக்கு போரடிக்காமல் திரைக்கதையை நகர்த்திச் சென்றது இந்த படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்டாக அமைந்தது.

ஓடிடி.,யிலும் கலக்க வந்தாச்சு
தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்கு பிறகு ஏப்ரல் 7 ம் தேதி அதிகாலை இந்த படம் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. சரியாக நள்ளிரவு 12 மணிக்கு எதற்கும் துணிந்தவன் படம் நெட்ஃபிளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் தளங்களில் வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

சும்மா சுர்ர்ர்ருன்னு
இந்த ஜோடி ஒரு முறை பார்த்தாலே நமது தலையை சும்மா சுர்ர்ர்ருன்னு சுழல வைக்கும் என்ற வாசகத்துடன் நெட்ஃபிளிக்ஸ் இந்தியா நிறவனம், எதற்கும் துணிந்தவன் படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்களைத் தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் படமும் ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ளதால் சூர்யாவின் அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்காக அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











