Karuppu Release Update: கருப்பு ரிலீஸ் தேதி இதுவா? சூர்யாவின் அதிரடி முடிவா இல்லை அவசர முடிவா?

சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் கருப்பு. இந்த படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்று படத்தின் போஸ்ட் புரெடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. இது சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. விமர்சன ரீதியாக படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. இது மட்டும் இல்லாமல் படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை ஈட்டியது. சூர்யாவின் கங்குவா படம் சிறப்பாக சென்றிருந்தால் அதன் தாக்கம் ரெட்ரோவிலும் எதிரொலித்து இருக்கும். ஆனால் கங்குவா படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய தோல்வியைப் பெற்றது. அதன் தாக்கம் ரெட்ரோவிலும் எதிரொலித்தது.

Suriya Trisha Karuppu ott rights Bagged By Netflix Film Will Release on January 23rd
Photo Credit:

கருப்பு: ரெட்ரோ சூர்யாவுக்கு டீசென்ட்-ஆன கம்பேக் படமாக மாறியது. இதனால் ரசிகர்களுக்கு கருப்பு படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் படம் வருவதால், படத்தை கமர்ஷியல் ஹிட்டாக கட்டாயம் எதிர்பார்க்கலாம் என்பதில் ரசிகர்கள் உறுதியாக உள்ளார்கள். இப்படி இருக்கும்போது, கருப்பு படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி பலருக்கும் இருந்து வந்தது. படத்தின் ஓடிடி ரைட்ஸ் விற்பனை ஆகாமல் இருந்ததால், படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்யாமல் இருந்தனர்.

ஓடிடி உரிமம்: இப்படி இருக்கும்போது படத்தின் ஓடிடி ரைட்ஸை படக்குழு நெட்ஃபிளிக்ஸ் தளத்திற்கு விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படி இருக்கையில் படத்தின் ரிலீஸ் தேதி படக்குழு முடிவும் செய்து விட்டதாக கூறப்படுகிறது. அதாவது படத்தை ஜனவரி மாதத்தில் ரிலீஸ் செய்யலாம் என்ற எண்ணம் ஏற்கனவே இருந்தது என்று தகவல்கள் வெளியாகி இருந்தது.

Suriya Trisha Karuppu ott rights Bagged By Netflix Film Will Release on January 23rd
Photo Credit:

ரிலீஸ் தேதி இதுவா?: இப்படி இருக்கையில் படத்தை ஜனவரி மாதம் 23ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஜனவரி 9ஆம் தேதி விஜய்யின் ஜன நாயகன் படம் வெளியாகவுள்ளது. அதேபோல் ஜனவரி 14ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் வெளியாகவுள்ளது. இப்படி இருக்கும்போது, ஜனவரி 23ஆம் தேதி கருப்பு படம் வெளியானால், மூன்று படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்த பேச்சுக்கள் ஒரே நேரத்தில் இருக்கும் என்பதால் அது சூர்யா மற்றும் ஆர்.ஜே. பாலாஜியின் திரை வாழ்க்கையில் அடுத்த கட்ட நகர்வுக்கு உதவியாக இருக்கும் என்று கணக்கு போடுவதாகவும் கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல், ஜன நாயகன், பராசக்தி படங்களை ரசிகர்கள் பார்த்த பின்னர் கருப்பு படத்தை ரசிகர்கள் பார்க்க கையில் காசு வைத்திருப்பார்களா என்ற கேள்வியை பலரும் கேட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X