கோட் சூட்டில் கலக்கும் சூர்யா விஜய்குருநாதசேதுபதி.. அந்த பீனிக்ஸ் ஓடிடி எப்போ என கேட்கும் ஃபேன்ஸ்!

சென்னை: அப்பா விஜய் சேதுபதி பெயரையே பயன்படுத்த மாட்டேன் என்றும் சூர்யா என்கிற பெயரில் தான் சினிமாவில் சாதிக்கப்போவதாக சூர்யா அறிவித்திருந்தார். கங்குவா படத்துடன் போட்டிப் போடப்போவதாக அறிவித்த நிலையில், கடைசியில், கடந்த ஜூலை 4ம் தேதி தான் பீனிக்ஸ் வீழான் படம் வெளியானது.

ஆனால், பாக்ஸ் ஆபீஸில் எழுந்து நின்று சண்டை செய்ய முடியாமல் விழுந்து விட்டது. ட்ரோல்கள் எல்லாம் தன்னை ஒன்றுமே பண்ணாது என்றும் அடுத்த படத்தை இன்னமும் சிறப்பாக செய்வேன் என உறுதியளித்துள்ள சூர்யா சேதுபதி தற்போது வெளிநாட்டில் கோட் சூட் அணிந்துக் கொண்டு செம கூலான லுக்கில் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Suriya Vijay Gurunatha Sethupathi stuns in Coat Suit latest photos fans asking Phoenix OTT release
Photo Credit:

அப்பா விஜய் சேதுபதியின் ஏஸ் மற்றும் தலைவன் தலைவி படங்களே ஓடிடியில் வெளியான நிலையில், பீனிக்ஸ் வீழான் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விக்ரம் மகன் முதல் விஜய் சேதுபதி மகன் வரை: அந்த காலத்தில் தான் எஸ்.ஏ. சந்திரசேகர் மகன் விஜய் சினிமாவில் பல சோதனைகளை கடந்து வெற்றிப் படங்களை கொடுத்தார் என கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இந்த காலத்திலும் விக்ரம் மகன் துருவ் விக்ரம் முதல் விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி வரை பலரும் முதல் படங்கள் மூலம் வெற்றியை கொடுக்க தவறி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு பல வாரிசுகள் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் யாருக்கும் பெரிதாக வெற்றி கிடைக்கவில்லை.

500 கோடி வசூல் செய்த வாரிசு நடிகர்: அனன்யா பாண்டேவின் சகோதரரும் சுன்கி பாண்டேவின் மகனுமான ஆஹான் பாண்டே இந்த ஆண்டு பாலிவுட்டில் சையாரா படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெற்று 500 கோடி வசூல் பெற்ற படமாக மாறியது. அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் யஷ் ராஜ் சோப்ரா நிறுவனம் வெளியிட்டது. ஆனால், தமிழில் அதர்வா தம்பி ஆகாஷ் முரளி, தனுஷ் மருமகன் பவிஷ், விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா, விஜய் சேதுபதி மகன் சூர்யா உள்ளிட்ட பலர் அறிமுகமான நிலையில், யாருக்குமே கோலிவுட்டில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

கோட் சூட்டில் சூர்யா விஜய்குருநாதசேதுபதி: தனது தந்தை விஜய் சேதுபதியின் பெயரை பயன்படுத்த மாட்டேன் என ஆரம்பத்தில் சொல்லிக் கொண்டிருந்த சூர்யா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூர்யா விஜய்குருநாதசேதுபதி என அப்பாவின் முழுப்பெயரையும் வைத்திருக்கிறார். மேலும், கோட் சூட் அணிந்துக் கொண்டு வெளிநாட்டில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

Suriya Vijay Gurunatha Sethupathi stuns in Coat Suit latest photos fans asking Phoenix OTT release
Photo Credit:

பீனிக்ஸ் ஓடிடி ரிலீஸ் எப்போ?: அனல் அரசு இயக்கத்தில் சூர்யா சேதுபதி, வரலட்சுமி சரத்குமார், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த ஆண்டு ஜூலை 4ம் தேதி வெளியான பீனிக்ஸ் வீழான் திரைப்படம் சுமார் 2 மாதங்கள் கடந்த நிலையிலும் இன்னமும் எந்தவொரு ஓடிடியிலும் வெளியாகவில்லை. அந்த படத்திற்கு பிறகு வெளியான விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி படம் ஓடிடியில் வெளியாகி விட்டது. அடுத்த வாரம் ரஜினிகாந்தின் கூலி படமும் ஓடிடியில் வெளியாகிறது. இந்நிலையில், பீனிக்ஸ் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிக் பாஸ் வருவாரா?: விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சாச்சனா கடந்த சீசனில் பிக் பாஸ் போட்டியாளராக பங்கேற்ற நிலையில், விஜய் சேதுபதி மகன் இந்த 9வது சீசனில் பிக் பாஸ் போட்டியாளராக வந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், அவர் வரவாய்ப்பே இல்லை என்று தான் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X