சூர்யாவின் "எதற்கும் துணிந்தவன்" ரிலீஸ் அப்டேட்!

சென்னை: நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடிகர் சூர்யா மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்த நவரசா ஆந்தாலஜி திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து தனுஷுடன் இணைந்து படங்களில் பணியாற்றி வந்த வெற்றிமாறன் முதல் முறையாக சூர்யாவுடன் கூட்டணி அமைத்து வாடிவாசல் என்ற படத்தை இயக்கி வருகிறார் . கிராமத்து கதை களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் மீண்டும் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் எதற்கும் துணிந்தவன் படம் எப்போது ரிலீஸ் ஆகிறது என்பது பற்றிய முக்கியமான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

உண்மை சம்பவங்களை

உண்மை சம்பவங்களை

நடிகர் சூர்யாவை பொறுத்த வரையிலும் திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்காக மட்டும் அல்லாமல் சமூகத்திற்கு தேவையான பல நல்ல கருத்துக்களையும் அதில் வைக்க வேண்டும் என்பதை தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் பின்பற்றி வருகிறார் . அந்த வகையில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்திருந்த சூரரைப்போற்று திரைப்படம் ஒரு சாதாரண மனிதன் அசாதாரணமான கனவை எப்படி எட்டிப் பிடிக்கிறான் என்பதை உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக முடியாத நிலையில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது . சூர்யாவுடன் இணைந்து நடிக்க முன்னணி நடிகைகள் பலர் போட்டி போட்டுக் கொண்டு இருக்க தமிழ் சினிமாவின் சமீபத்திய வரவாக இருந்த அபர்ணா பாலமுரளி இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். பார்ப்பதற்கு பக்கா மதுரைக்கார பொண்ணு மாதிரியே நடித்து அனைவரையும் வியக்கவைத்த அபர்ணா பாலமுரளியின் பொம்மி கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்திய ரசிகர்களால் கொண்டாடப்பட்டது சூரரைப் போற்று ஆஸ்கர் கதவுகளையும் பலமாக தட்டியது.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

பொல்லாதவன்,ஆடுகளம்,வட சென்னை,அசுரன் என தொடர்ந்து தனுஷுடன் இணைந்து பணியாற்றி வந்த இயக்குனர் வெற்றிமாறன் இப்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். இவரின் திரைப்படங்கள் மொழிகளைத் தாண்டி அனைத்து மொழி ரசிகர்களையும் பேச வைத்திருக்க கடைசியாக வெளியான அசுரன் திரைப்படம் தேசிய விருதுகளை வென்றுள்ளது. எனவே வெற்றிமாறனின் அடுத்தடுத்த படங்களை ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட வாடிவாசல் படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதில் சூர்யா ஹீரோவாக நடிக்க பக்கா வில்லேஜ் கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு பின்னர் சமீபத்தில் வாடிவாசல் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியது. போஸ்டரில் ஜல்லிக்கட்டு காளைக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்கள் இடம்பெற்றிருக்க ஜல்லிக்கட்டு விளையாட்டை பற்றியும் தமிழர் கலாச்சாரம் பற்றியும் பல சுவாரசியமான தகவல்கள் இப்படத்தில் அடங்கி இருக்கும் என கூறப்படுகிறது.

பொள்ளாச்சி பாலியல்

பொள்ளாச்சி பாலியல்

வாடிவாசல் சென்ற ஆண்டே தொடங்கி இருந்தாலும் இப்பொழுது வெற்றிமாறன் விடுதலை படத்தை விறுவிறு வேகத்தில் இயக்கி வருகிறார். இதனால் வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்க சற்று தாமதம் ஆகுமென்பதால் அந்த கேப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் "எதற்கும் துணிந்தவன்" என மாஸான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா அருள்மோகன் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் . இவர்களுடன் இணைந்து சத்யராஜ்,சூரி, ராதிகா சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை,இளவரசு என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. இயக்குனர் பாண்டிராஜின் முந்தைய படங்களைப் போலவே கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசும் படமாக உருவாகி வருகிறது. படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க டி இமான் இசையமைக்கிறார். சூர்யா, டி இமான் இணைவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது

பொங்கல் பண்டிகைக்கு

பொங்கல் பண்டிகைக்கு

கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தடைபட்டு இப்பொழுது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு லாக்டவுனுக்குப் பிறகு இப்போது விறுவிறு வேகத்தில் நடைபெற்று கொண்டுள்ளது. சமீபத்தில் கூட படப்பிடிப்பு தளத்தில் சூர்யா மற்றும் ராதிகா சரத்குமார் இருவரும் அமர்ந்து ஜாலியாக பேசிக்கொண்டு தேநீர் குடித்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. ஏற்கனவே இப்படத்தின் இரண்டு விதமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் எப்போது என்பது பற்றிய தகவல் கிடைத்துள்ளது. வரும் தீபாவளிக்கு திரையரங்குகள் திறக்குமா திறக்காதா என்ற சந்தேகம் இன்று வரை நீடித்துக் கொண்டே இருக்க ஒரேயடியாக எதற்கும் துணிந்தவன் படத்தை பொங்கல் பண்டிகையில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே விரைவில் இறுதி கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்க படக்குழு தயாராகி கொண்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X