twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான தி ஃபேமிலி மேன் 2; மீண்டும் சர்ச்சைகள் வெடிக்குமா?

    |

    சென்னை: இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவான தி ஃபேமிலி மேன் 2 அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையையும் பாராட்டுக்களையும் பெற்றது.

    The Family Man 2 now available in Tamil, Telugu and English dubbed version

    சமீபத்தில் சிறந்த வெப்சீரிஸ் நடிகருக்கான விருது மனோஜ் பாஜ்பாய்க்கும், சிறந்த வெப்சீரிஸ் நடிகை விருது சமந்தாவுக்கும் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், வெகுநாட்களாக ரசிகர்கள் ஸ்ரீகாந்த் திவாரி தமிழில் எப்போ பேசுவாருன்னு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தீனிப் போடும் வகையில் தமிழ், தெலுங்கு மற்றும் உலக ரசிகர்களை கவர ஆங்கிலத்திலும் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடர்.

    இந்தி வெப் தொடரான இதில் ஏற்கனவே 60 சதவீதம் தமிழ் மற்றும் 30 சதவீதம் ஆங்கிலம் வெறும் 10 சதவீதம் மட்டுமே இந்தி இருந்த நிலையில், தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கில மொழிகளில் இந்த வெப் தொடர் டப் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது.

    அப்போ ரஷ்யா போகலையா... திடீரென லொக்கேஷனை மாற்றிய பீஸ்ட் படக்குழு அப்போ ரஷ்யா போகலையா... திடீரென லொக்கேஷனை மாற்றிய பீஸ்ட் படக்குழு

    இதனை பார்த்த சில பாலிவுட் ரசிகர்கள் அப்படியே ஒரு இந்தி டப்பிங்கையும் போட்டு விடுங்க புண்ணியமா போகும் என கலாய்த்து வருகின்றனர்.

    இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வசனங்கள் இடம் பெற்ற போதே கடும் சர்ச்சைகளை இந்த வெப் தொடர் சந்தித்து வந்த நிலையில், தமிழில் தற்போது டப் செய்யப்பட்டு உள்ள நிலையில், மீண்டும் சர்ச்சைகள் வெடிக்குமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

    English summary
    The Family Man 2 now available in Tamil, Telugu and English dubbed version in Amazon Prime now.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X