தனுஷை குறிவைக்கிறாரா சிவகார்த்திகேயன்.. இட்லி கடைக்கு போட்டியா களமிறங்கும் மதராஸி.. ஓடிடி தேதி!
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி திரைப்படம் கடந்த மாதம் 5ந் தேதி தியேட்டரில் வெளியாகி, பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி வசூலை அள்ளியது. இத்திரைப்படத்தில் ருக்மிணி வசந்த், பிஜு மேனன், விக்ராந்த், வித்யூத் ஜம்வால் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவான இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், முழுக்க முழுக்க ஒரு அதிரடி ஆக்சன் ஹீரோவாக நடித்திருந்தார். அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில், எப்படியாவது துப்பாக்கி கலாச்சாரத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக படத்தின் வில்லனான வித்யுத் ஜம்வால் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து. ஆறு கண்டெய்னர்கள் நிறைய துப்பாக்கிகளை சென்னைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த துப்பாக்கிகளை எப்படியாவது தமிழகம் முழுவதும் சப்ளை செய்தாக வேண்டும் என்பதற்காக நார்த் இந்தியாவில் இருந்து ஆறு கண்டெய்னர்கள் சென்னைக்குள் வருகின்றன.

மதராஸி : தேசிய பாதுகாப்பு படைகளை சேர்ந்த பிஜுமேனன் தடுத்து நிறுத்துவதற்காக, களத்தில் இறங்குகிறார். ஒரு கட்டத்தில் பிஜூ மேனனின் டீமுக்கு அந்த கண்டெய்னர்கள் எங்கே போனது என்றே தெரியாமல் போய்விடுகிறது. இதனால், ரகசியமாக ஒரு குழுவை அமைந்து, காணாமல் போன கண்டெய்னர்களை கண்டுபிடித்து அழித்து, அந்த துப்பாக்கிகள் தமிழகத்திற்குள் சப்ளை ஆகாமல் அழிக்க வேண்டும் என்பதற்காக பிஜுமேனன் படாத பாடுபடுகிறார். இந்த ஆபத்தான வேலையை செய்து முடிக்க சிவகார்த்திகேயனை களமிறக்கிறார் பிஜு மேனன். அதன் பின் என்ன ஆனது என்பது தான் மதராஸி படத்தின் கதை.
ஓடிடி ரிலீஸ் தேதி: அமரன் திரைப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் முழுக்க முழுக்க இந்த படத்தில் அதிரடியான ஆக்ஷன ஹீரோவாக பட்டையை கிளப்பி உள்ளார். படத்தில் ஆக்ஷன், அடிதடி நடுவே கொஞ்சம் காதல், எமோஷனலை சேர்ந்து கமர்ஷியல் படத்தை கொடுக்க முயன்றிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இத்திரைப்படம் அக்டோபர் 1ந் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் இயக்கி நடித்துள்ள 'இட்லி கடை' அக்டோபர் 1ந் தேதி அன்று வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு போட்டியாக நடிகர் சிவகார்த்திகேயன் 'மதராஸி' படத்தை ஓ.டி.டி.யில் அன்றைய தேதியில் வெளியிட்டு தனுஷை குறிவைக்கிறாரா என இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











