The Rings Of Power Season 1 Review: செம ட்விஸ்ட்.. கடைசியா அந்த வில்லன் சவுரான் யாரு தெரியுமா?

நடிகர்கள்: மார்ஃபிட் கிளார்க், ராபர்ட் அராமயோ

ஓடிடி: அமேசான் பிரைம்

இயக்கம்: ஜேடி பெயலாஸ்

{rating}

ஏஞ்சல்ஸ்: அமேசான் பிரைமில் ஒட்டுமொத்தமாக 5 ஆயிரம் கோடி பட்ஜெட் உடன் பல சீசன்களாக தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: ரிங்ஸ் ஆஃப் பவர் வெப்சீரிஸ் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகின.

8 எபிசோடுகளுடன் அதன் முதல் சீசன் வெற்றிகரமாக முடிவடைந்து விட்டது. வில்லன் சவுரானுக்கு ஏகப்பட்ட பில்டப்புகள் கொடுக்கப்பட்ட வந்த நிலையில், கடைசியில் சவுரான் யார் என்பதை 8வது சீசனில் ரிவீல் செய்த விதம் ரசிகர்களை பிரம்மிக்க வைத்தது.

ஆனால், அடுத்த சீசனையும் இவ்ளோ ஸ்லோவாக எடுத்து வைக்காதீங்க பாஸ் என ஏகப்பட்ட ரசிகர்கள் இயக்குநர் ஜேடி பெய்னேவுக்கு (JD Payne) கேட்கும் படியே கூறி வருகின்றனர்.

ரிங்ஸ் ஆஃப் பவர் வெப்சீரிஸ்

ரிங்ஸ் ஆஃப் பவர் வெப்சீரிஸ்

எல்வ்ஸ், மனிதர்கள், ட்வார்ஃப்ஸ், ஹார்ஃபூட்ஸ் என ஷனாரா வெப்சிரீஸில் வருவது போல அதே கதை தான் இங்கேயும் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆர்ட் வொர்க்கையும் சிஜி வொர்க்கையும் ஒவ்வொரு விஷுவலிலும் பிரம்மித்துப் பார்க்க வைக்கும் இந்த வெப்சீரிஸ் முதல் சீசன் முடிந்த நிலையில், ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதே மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

வில்லனுக்கான பில்டப்

வில்லனுக்கான பில்டப்

பல ஆயிரம் ஆண்டுகளாக மற்ற இனங்களை அடிமைப்படுத்தி தனது அசுர ஆட்சியை நிலைநாட்ட விரும்பும் சவுரான் யார் என்பதை காட்டாமல் 7 எபிசோடுகளிலும் அவனுக்கான பில்டப்பை ரொம்பவே ஸ்லோ அண்ட் ஸ்டெடியாக வைத்த நிலையில், சவுரான் யார் என்பதை 8வது எபிசோடில் காட்டி முதல் சீசன் அவ்ளோ தான் போங்க.. போங்க.. அடுத்த சீசன் வர வரைக்கும் காத்திருங்க என முடித்து விட்டனர்.

அது சவுரானே இல்லை

அது சவுரானே இல்லை

நட்சத்திரத்தில் இருந்து ஒரு பிரம்மாண்ட மனிதன் விழுகிறான். அவனை சில ஹார்ஃபூட் இன பெண்கள் காப்பாற்றி தங்களுடன் கூட்டிச் செல்கின்றனர். அவன் தான் சவுரானாக இருக்க வேண்டும் என சூனியக்கார கிழவிகள் எல்லாம் பின் தொடர்ந்து வந்து அவனுக்கு பழசை நினைவூட்ட நினைக்கையில் அவன் சவுரான் இல்லை ஐ ஸ்டார் (istar) என்கிற புதுக்கதை உருவாகிறது.

செம ட்விஸ்ட்

செம ட்விஸ்ட்

கப்பலில் இருந்து கடலில் குதித்த கலாட்ரியலை பாய்மரக் கப்பலில் யார் காப்பாற்றினாரோ, கலாட்ரியல் தெற்கு பூமியின் அரசன் ஹால் பிராண்ட் என நினைத்துக் கொண்டு இதுவரை அவனுடன் இணைந்து போரிட்டானோ, கடைசியில் அவன் தான் சவுரான் என்கிற செம ட்விஸ்ட்டை 8வது எபிசோடில் வைத்து இயக்குநர் மரண மாஸ் காட்டி விட்டார். சவுரானை அறிந்து கொண்ட நிலையிலும், கலாட்ரியலால் அவனை கொல்ல முடியாத காட்சிகள் மிரட்டல். இது வெறும் அறிமுகம் தான் அடுத்த சீசனில் தான் சம்பவம் இருக்கு என டைட்டிலுக்கான 3 ரிங்ஸ் உருவாக்கியதும் முதல் சீசனை முடித்து விட்டனர்.

பார்க்கலாமா

பார்க்கலாமா

ராஜமெளலியின் பாகுபலியை பார்த்து விட்டு, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் அப்படி கூஸ்பம்ப்ஸ் காட்சிகள் இல்லையே என குறை சொல்லும் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இந்த ஹாலிவுட் பிரம்மாண்ட வெப்சீரிஸ் புடிக்காது. ஆனால், ஸ்லோவாக போனாலும், ஸ்டெடியாக நகரும் பிரம்மாண்ட கதையை பார்க்க புடிக்கும் என நினைப்பவர்கள் தாராளமாக ரிங்ஸ் ஆஃப் பவர் முதல் சீசனை கண்டு ரசிக்கலாம். ஆனால், ரசிகர்களின் பொன்னான நேரத்தையும் வெப்சீரிஸ் இயக்குநர் கவனத்தில் கொண்டு பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத அளவுக்கு அடுத்த சீசனை நகர்த்தினால் நன்றாக இருக்கும்.

ஹவுஸ் ஆஃப் தி டிராகன்ஸுக்கு

ஹவுஸ் ஆஃப் தி டிராகன்ஸுக்கு

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ள ஹவுஸ் ஆஃப் தி டிராகன்ஸ் வெப்சீரிஸுக்கு இது எவ்வளோவோ பரவாயில்லை என்கின்றனர். தமிழ் டப்பிங்கில் வெளியாகி உள்ள வெப்சீரிஸில் ஆபாசக் காட்சிகள் இல்லாத நிலையில், குடும்பத்துடன் தாராளமாக ரசிகர்கள் பார்த்து ரசிக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X