For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  OTT Release this week: இந்த வாரமும் ஓடிடியில் படையெடுக்கும் படங்கள்..முழு விபரம் இதோ!

  |

  சென்னை : திரையரங்குகளில் சென்று பார்க்க முடியாத சினிமா பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது ஓடிடி தளங்கள்.

  வேலை பளுவால் திரையரங்கு சென்று படம் பார்க்க முடியாதவர்கள், தங்களது தேவைக்கு ஏற்ப எப்போது வேண்டுமானாலும் ஜாலியாக குடும்பத்துடன் படம் பார்த்துக்கொள்ளலாம். தியேட்டரை விட இதற்கு ஆகும் செலவும் குறைவுதான் என்பதால் பலர் ஓடிடியில் வெளிவரும் படத்தை பார்க்கவே விரும்புகின்றனர்.

  இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன படங்கள் வெளியாகின்றன என்பதை பார்ப்போம்.

  சமமான திரையரங்குகளில் வெளியாகும் அஜித் -விஜய் படங்கள்.. ரசிகர்களை எந்தப் படம் கவரும்? சமமான திரையரங்குகளில் வெளியாகும் அஜித் -விஜய் படங்கள்.. ரசிகர்களை எந்தப் படம் கவரும்?

  லவ் டுடே

  லவ் டுடே

  பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் லவ் டுடே. இளசுகளின் மனதில் இடம் பிடித்த இத்திரைப்படம் வசூலை வாரிக்குவித்தது. இத்திரைப்படம் டிசம்பர் 2-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் லவ் டுடே திரைப்படம் ரிலீசாக உள்ளது.

  மிரள்

  மிரள்

  எம்.சக்திவேல் இயக்கத்தில் பரத் மற்றும் வாணி போஜன் நடிப்பில் கடந்த நவம்பர் 11-ந் தேதி ரிலீசான திரைப்படம் மிரள். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை ராட்சசன் பட தயாரிப்பாளர் தில்லி பாபு தயாரித்திருந்தார். இப்படம் வருகிற டிசம்பர் 2-ந் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

  கோச்சல் (மலையாளம்)

  கோச்சல் (மலையாளம்)

  ஷியாம் மோகன் இயக்கத்தில், எஸ்.வி. கிருஷ்ணா ஷங்கர் முக்கிய வேடத்தில் நடித்த 'கோச்சல்' ஒரு மலையாள நகைச்சுவை திரைப்படமாகும். தந்தை இறந்தவுடன், குள்ளமாக இருப்பதால் கேலி செய்யப்படும் ஸ்ரீகுட்டனுக்கு தந்தை இறந்த பிறகு போலீஸ் கான்ஸ்டபிளாகிறான். தன்னை ஒரு திறமையான அதிகாரியாக நிரூபிக்க பல முயற்சிகளை மேற்கொள்கிறார். இப்படத்தில் முரளி கோபி, ஷைன் டாம் சாக்கோ, இந்திரன்ஸ், விஜயராகவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

  ட்ரோல் (ஆங்கிலம்)

  ட்ரோல் (ஆங்கிலம்)

  ரோர் உதாக் இயக்கிய திரைப்படம் 'ட்ரோல்' அதிரடி சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமான இப்படத்தில் இனே மேரி வில்மேன், கிம் பால்க், கார்ட் பி ஈட்ஸ்வோல்ட் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நார்வே மலைப்பகுதியில் ஒரு பூதம் அட்டகாசத்தை செய்துவருகிறது. பூதத்தின் அழிவில் இருந்து மக்களை காப்பாற்ற ஒரு அச்சமற்ற பழங்காலவியல் நிபுணர் நியமிக்கப்படுகிறார். அவர் அந்த பூதத்தை அழித்தாரா இல்லையா என்பதுதான் கதை. இத்திரைப்படம் நெட்பிளிக்ஸில் நாளை வெளியாக உள்ளது.

  குட்பை (இந்தி)

  குட்பை (இந்தி)

  அமிதாப் பச்சன், ராஷ்மிகா மந்தனா, நீனா குப்தா, சுனில் குரோவர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நகைச்சுவை திரைப்படம் குட்பை. தாய் எதிர்பாராதவிதமாக இறந்தபோது, தந்தையின் அரவணைப்பில் வளரும் குழந்தைகளின் உணர்வு பற்றிய திரைப்படமாகும். இப்படம் நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 2ந் தேதி முதல் பார்க்கலாம்.

  ரிபீட் (தெலுங்கு)

  ரிபீட் (தெலுங்கு)

  அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில், நவீன் சந்திரா, மதுபாலா, சத்யம் ராஜேஷ், ஸ்ம்ருதி வெங்கட் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள தெலுங்கு திரைப்படம் ரிபீட். போலீஸ் உயர் அதிகாரின் மகள் கடத்தப்படுவதைக் மையமாக வைத்து மொத்த கதையும் நகர்கிறது. க்ரைம், த்ரில்லர் திரைப்படமான இப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் நாளை முதல் பார்க்கலாம்.

  ஏஞ்சல் ஃபால்ஸ் கிறிஸ்மஸ் (ஆங்கிலம்)

  ஏஞ்சல் ஃபால்ஸ் கிறிஸ்மஸ் (ஆங்கிலம்)

  "ஏஞ்சல் ஃபால்ஸ் கிறிஸ்மஸ்"ஜெர்ரி சிக்கோரிட்டி இயக்கிய காதல் திரைப்படமாகும். இதில், சாட் மைக்கேல் முர்ரே, ஜெசிகா லோண்டஸ் ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். ஒரு பிஸியான மருத்துவர், கொலை வெறிப்பிடித்தவராக மாறுகிறார். இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 1ந் தேதி வெளியாக உள்ளது.

  வதந்தி (வெப் தொடர்)

  வதந்தி (வெப் தொடர்)

  கொலைகாரன் படத்தின் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள வதந்தி வெப் தொடர், வருகிற டிசம்பர் 2-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீசாக உள்ளது. இந்த வெப் தொடரை விக்ரம் வேதா படத்தின் இயக்குநர்களான புஷ்கர் காயத்ரி தயாரித்துள்ளார்.

  English summary
  Love day, Vadhandhi webseries, Good bye This week OTT and theatre release movies full list,
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X