Don't Miss!
- News
பொது கழிப்பறைகளுக்குகு QR Code! சுத்தம் இல்லாமல் உள்ளதா? அப்ப உடனே நீங்க செய்ய வேண்டியது இது தான்!
- Lifestyle
கும்பத்தில் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் பிப்ரவரியில் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க போகுது...
- Finance
என்னாது வெறும் 1300 பேர் தானா.. ஷாக்கான எலான் மஸ்க்.. அச்சச்சோ அப்படியெல்லாம் இல்லை?
- Automobiles
விலை இவ்வளவு கம்மி தானா! ஆரா ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்திய ஹூண்டாய்!
- Technology
Vijay Sales Mega Republic Day sale: ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவிகளை கம்மி விலையில் வாங்க இதுதான் சரியான நேரம்.!
- Sports
"3 தனித்தனி அணிகள்.. ஆனாலும் ஒரு சிக்கல்".. பிசிசிஐ திட்டம் குறித்து கபில் தேவ் அறிவுரை.. அடேங்கப்பா
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
இந்த வாரம் ஓடிடி ஹிட் லிஸ்ட்டில் ஐஸ்வர்யா ராஜேஷ்... ரசிகர்கள் எதிர்பார்க்கும் படங்களின் லிஸ்ட் இதோ
சென்னை: கடந்த இரு வாரங்களாக பொங்கலுக்கு வெளியான வாரிசு, துணிவு திரைப்படங்களை பார்ப்பதில் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.
விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைத்துள்ளதால் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் கிடைத்துள்ளது.
இந்நிலையில், ஓடிடி ரசிகர்கள் இந்த வாரம் என்னென்ன படங்கள் எந்தெந்த தளங்களில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
ஓடிடி ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் படங்களின் பட்டியலையும், அது வெளியாகும் தளங்கள் பற்றியும் பார்க்கலாம்.
வடிவேலு தாயார் காலமானார்.. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்.. ரசிகர்கள், பிரபலங்கள் அஞ்சலி

ஐஸ்வர்யா ராஜேஷின் டிரைவர் ஜமுனா
பொங்கல் ரேஸில் விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்கள் மாஸ் காட்டின. இதனைத் தொடர்ந்து இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி கோலிவுட் ரசிகர்களுக்கு ஐஸ்வர்யா ராஜேஷின் டிரைவர் ஜமுனா இந்த வாரம் ஆஹா ஓடிடியில் வெளியாகிறது. கடந்த மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸான டிரைவர் ஜமுனா, மூன்றே வாரங்களில் ஓடிடியில் வெளியாவது குறிப்பிடத்தக்கது. தியேட்டரில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், வாரிசு, துணிவு ரிலீஸால் உடனடியாக ஓடிடிக்கு வருகிறது டிரைவர் ஜமுனா.

மலையாள ரசிகர்களுக்கான அப்டேட்
மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்த காபா திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகிறது. ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் கமர்சியலாக உருவான இந்தப் படம் கடந்த மாதம் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது காபா. பிருத்விராஜுடன் அபர்ணா பாலமுரளி, ஆசிப் அலி, அன்னா பென் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஓடிடி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

டோலிவுட் ரசிகர்களுக்கு ட்ரிபிள் ட்ரீட்
தெலுங்கில் இந்த வாரம் இரண்டு திரைப்படங்களும் ஒரு வெப் சீரிஸ்ஸும் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. இதில் ரவிதேஜா நடித்துள்ள தமாக்கா படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படம் கடந்த மாதம் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. தற்போது நெட்பிளிஸ் ஓடிடியில் வெளியாகிறது. அதேபோல், தமன்னா நடிப்பில் திரையரங்குகளில் ரிலீஸான குர்துண்ட சீதாகாலம் இந்த வாரம் சிம்பிளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ரொமாண்டிக் ஜானரில் உருவான இந்தப் படத்துக்கும் ஓடிடி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மேலும் கேங்ஸ்டர் ஜானரில் உருவாகியுள்ள ஏடிஎம் ( ATM ) என்ற வெப் சீரிஸ் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

கொரியன் வெப் சீரிஸ்
பாலிவுட்டில் சத்ரிவாலி திரைப்படம் நேரடியாக ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது. ரகுல் ப்ரீத் சிங் லீடிங் ரோலில் நடித்துள்ள இந்தப் படம் ரொமண்டிக் காமெடி ஜானரில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் மிஷன் மஜ்னு திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. இந்தியில் வெளியாகும் இந்த இரண்டு படங்களுக்குமே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் Jung_E என்ற கொரியன் வெப் சீரிஸ் இந்த வாரம் வெளியாகிறது. சிவில் வாரை பின்னணியாக வைத்து சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகிறது. இது ஓடிடி ரசிகர்களுக்கான ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.