This Week OTT Release: செப்டம்பர் முதல் வார ஓடிடி.. தரமான படங்கள் இறங்குது.. செக் பண்ணிக்காங்க!

சென்னை: ஓடிடி தளங்கள் தற்போது திரையுலகில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறி விட்டன. சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு ஓடிடி குறித்து கமல்ஹாசன் சொன்னபோது யாரும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது ஓடிடி வணிகம் இல்லாமல் திரைப்படங்களை வெளியிடுவது சாத்தியமில்லை என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். பெரிய பட்ஜெட் படங்கள் கூட விரைவாக ஓடிடிக்கு வருகின்றன. இந்த வாரம் திரையரங்குகளில் சிவகார்த்திகேயனின் மதராஸி. வெற்றிமாறன் தயாரிப்பில் பேட் கேர்ள் மற்றும் கே.பி.ஒய் பாலாவின் காந்தி கண்ணாடி என சுவாரஸ்யமான படங்கள் வெளியாகவுள்ள நிலையில், ஓடிடி தளங்களிலும் சில புதிய படங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

1. சு ஃப்ரம் சோ

கன்னட சூப்பர் ஹிட் படமான 'சு ஃப்ரம் சோ' இந்த வார இறுதியில் ஓடிடிக்கு வரவுள்ளது. செப்டம்பர் 5 அல்லது 8 ஆம் தேதிகளில் திரைப்படம் டிஜிட்டல் முறையில் வெளியாகும் என்று நடிகர் ராஜ் பி ஷெட்டி உறுதிப்படுத்தியுள்ளார். ஜியோ ஹாட்ஸ்டாரில் இந்த படம் வெளியாகும். மேலும், வரும் நாட்களில் கலர்ஸ் கன்னட தொலைக்காட்சியிலும் இந்த படம் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. ஜெ.பி. தும்மினாட் இயக்கத்தில் உருவான இந்த காமெடி திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரசிகர்களை கவர்ந்தது. உலகளவில் ரூபாய் 120 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

2. கண்ணப்பா

தெலுங்கு பக்தி திரைப்படமான 'கண்ணப்பா' நாளை மறுநாள் அதாவது வியாழக்கிழமை (செப்டம்பர் 4) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. நடிகர் மஞ்சு விஷ்ணு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். பான் இந்தியா படமாக கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியான இந்த படத்தில் பிரபாஸ் மற்றும் மோகன்லால் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

This Week OTT Release Details September First Week Kannappa Footage Movie

மறைந்த நடிகர் ராஜ்குமார் நடித்த 'பேடர கண்ணப்பா' மற்றும் சிவராஜ்குமார் நடித்த 'சிவ மெச்சிதா கண்ணப்பா' ஆகிய படங்களின் கதைக்கரு இந்த படத்திலும் இடம்பெற்றுள்ளது. பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தை ஓடிடி நிறுவனங்கள் வாங்க முதலில் தயங்கின. சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு, இந்த படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இந்த படம் கன்னடத்திலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.

3. சரண்டர்

பிக் பாஸ் தர்ஷன் மற்றும் சுஜித் சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் படமான 'சரண்டர்' செப்டம்பர் 4 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. போலீஸ் விசாரணையை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தை கௌதமன் கணபதி இயக்கியுள்ளார். ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம், ஒரு மாத இடைவெளியில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.

This Week OTT Release Details September First Week Kannappa Footage Movie

4. ஃபுட்டேஜ்

மஞ்சு வாரியர் நடித்துள்ள மலையாள த்ரில்லர் படமான 'ஃபுட்டேஜ்' ஓடிடியில் வெளியாக தயாராக உள்ளது. செப்டம்பர் 5 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் தளத்தில் இந்த படம் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த படம் திரையரங்குகளில் வெளியானது. ஒரு ஆண்டுக்குப் பின்னர் படம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது. சைஜு ஸ்ரீதரன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இது தவிர, நெட்ஃபிக்ஸில் 'இன்ஸ்பெக்டர் செண்டே' (இந்தி) மற்றும் 'தி ஃபால் கை' (ஆங்கிலம்) ஆகிய படங்கள் இந்த வார இறுதியில் ஓடிடிக்கு வருகின்றன. ஜீ5 தளத்தில் 'ஆன்கோ கி குஸ்தாக்கியான்' (இந்தி) மற்றும் 'கம்மட்டம்' (மலையாளம் வெப் சீரிஸ்) ஆகியவை வெளியாகவுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X