This Week OTT Release: சர்ச்சையை சந்தித்த Bad Girl முதல் கவினின் கிஸ்வரை.. இந்த வார ஓடிடி ரிலீஸ் தெரியுமா?
சென்னை: திரையரங்குகளில் வெளியாகி குறிப்பிட்ட கால அளவுக்கு பிறகு ஓடிடியில் படங்கள் வெளியாகின்றன. அதேபோல் வெப் சீரிஸ்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் களமிறங்குகின்றன. இந்நிலையில் இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்கள் பற்றிய லிஸ்ட்டை பார்க்கலாம்.
திரையரங்குகளில் படம் பார்ப்பது தனி அனுபவம்தான் என்றாலும் கடந்த சில வருடங்களாக ஓடிடியில் படங்கள் பார்ப்பதை ரசிகர்கள் அதிகப்படுத்தியிருக்கிறார்கள். தியேட்டர்களுக்கு குடும்பத்தோடு சென்று படம் பார்த்தால் வரும் செலவு அதிக அளவு இருக்கிறது. அந்தப் பணத்தை ஓடிடி சப்ஸ்க்ரைபில் முதலீடு செய்தால் மாத கணக்கில் குடும்பத்தோடு அமர்ந்து நிம்மதியாக படம் பார்க்கலாம் என்ற எண்ணம் அதிகரித்திருப்பதுதான் இதற்கு காரணம்.
இந்த வார ஓடிடி ரிலீஸ்: தியேட்டர்களில் படம் வெளியாகி குறிப்பிட்ட கால அளவுக்கு பிறகுதான் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற விதி இருக்கிறது. அதேசமயம் வெப் சீரிஸ்கள் எல்லாம் நேரடியாக ஓடிடியில் களமிறங்கிவருகின்றன. இந்நிலையில் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் பற்றி இதில் பார்க்கலாம். தமிழை பொறுத்தவரை இரண்டு படங்கள் மட்டுமே ரிலீஸாகின்றன.

Bad Girl: வெற்றிமாறனின் உதவி இயக்குநரான வர்ஷா பரத் இயக்கியிருந்த படம்தான் bad girl. இதில் அஞ்சலி சிவராமன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். வெற்றிமாறனும் அனுராக் காஷ்யப்பும் இணைந்து தயாரித்திருந்த இந்தப் படம் கடந்த செப்டம்பர் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இப்படத்தின் ட்ரெய்லர் வந்தபோதே ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்தது. படம் வெளியாகி சுமாரான வரவேற்பையே பெற்றது. இந்நிலையில் ஜியோ ஹாட் ஸ்டாரில் இப்படம் இன்று முதல் ஸ்ட்ரீம் ஆக ஆரம்பித்திருக்கிறது.
கவினின் கிஸ்: பிரபல நடன அமைப்பாளரான சதீஷ் இயக்கியிருக்கும் படம் கிஸ். இதில் கவின், ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். டாடா படத்துக்கு பிறகு பெரிய வெற்றியை எதுவும் பெறாமல் திணறிவரும் கவின் இந்தப் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். ஆனால் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான கிஸ் யாரையும் கவரவில்லை. இந்நிலையில் நவம்பர் 7ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. இதிலாவது பெரிய ரெஸ்பான்ஸை பெறுமா என்று படக்குழுவினர் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.
மற்ற மொழி படங்கள்: இது ஒருபக்கம் இருக்க சிரஞ்சீவா என்ற தெலுங்கு படம் ஆஹாவில் நவம்பர் 7ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகவிருக்கிறது. அதேபோல் பிரமுல்லா, Frankenstein ஆகிய படங்கள் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் ஏழாம் தேதி முதல் ஸ்ட்ரீமாகிறது. தி பேட் காய்ஸ் படம் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் நெட்ஃப்ளிக்ஸில் ஆறாம் தேதியும், மேலும் Thode Door Thode Paas படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் ஏழாம் தேதியும் ஸ்ட்ரீமாகின்றன.
The Fantastic Four: பலரிடம் வரவேற்பை பெற்ற The Fantastic Four: First Steps, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ஜியோ ஹாட் ஸ்டாரில் நவம்பர் ஐந்திலிருந்து ஸ்ட்ரீமாகிறது. வெப் சீரிஸை பொறுத்தவரை மகாராணி நான்காவது சீசன் ஜீ 5லும், All Her Falt ஜியோ ஹாட் ஸ்டாரிலும், Groom and Two Brides நெட்ஃப்ளிக்ஸிலும் ஏழாம் தேதி வருகின்றன. இதுமட்டுமின்றி ப்ளீடிங் டைகர் என்ற திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் 8ஆம் தேதி வருகிறது.


Click it and Unblock the Notifications











