ஓடிடியில் வரிசைகட்டி வெளியாகி உள்ள படங்கள்...படம் பாருங்க..ஜாலியா இருங்க!
சென்னை : கொரோனாவுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களில் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவிட்டன. திரையரங்குகளில் சென்று பார்க்க முடியாத சினிமா பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது ஓடிடி தளங்கள்.
எந்த அளவுக்கு தியேட்டரில் திரைப்படங்கள் வரிசை காட்டி வெளியாகிறதோ. அதேபோல டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார், ஆஹா தமிழ்,நெட்பிளிக்ஸ், அமேசான், சோலி லிப் போன் ஓடிடி தளங்களில் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
இந்த வாரம் ஓடிடி என்னென்ன புதுப் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் வெளியாகின்றன என்பதை பார்ப்போம்.

சர்தார் (தமிழ்)
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் சர்தார். இப்படத்தில் சங்கி பாண்டே, ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா ஆகியோர் லீட்ரோலில் நடித்துள்ளனர். இப்படத்தை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

காட் ஃபாதர்(தெலுங்கு)
நடிகர் பிருத்விராஜ் இயக்கி, மோகன்லால் நடித்த லூசிபர் திரைப்படம் கேரளா மட்டுமின்றி, தென்னிந்தியாவின் பல இடங்களிலும் ஹிட் அடித்தது. இந்த திரைப்படத்தின் ரீமேக் தான் காட் ஃபாதர். சிரஞ்ஜீவி மற்றும் நயன்தாரா நடிப்பில் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியான இப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களின் ஆதரவோடு 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இப்படத்தை ஓடிடி தளத்தில் பார்க்கலாம்

அனல் மேலே பனித்துளி ( தமிழ்)
நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் நேரடியாக சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் அனல் மேலே பனித்துளி. பாலியல் பலாத்காரம் செயப்பட்டு அவதிக்கு ஆளாகும் பெண்ணாக ஆண்ட்ரியா இப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கெய்சர் ஆனந்த் இயக்க, இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ளார்.

வொண்டர் வுமன் (மலையாளம்)
அஞ்சலி மேனன் இயக்கத்தில் நதியா, பத்மப்ரியா, நித்யா மேனன், சயனோரா பிலிப், அம்ருதா சுபாஷ், பார்வதி திருவோடு, அர்ச்சனா பத்மினி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் வொண்டர் வுமன். சோனி லவில் இத்திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

1899 வெப் தொடர்
'1899' என்ற வெப் சீரிஸ் 8 எபிசோடுகளைக் கொண்ட தொடராகும். இதில் 1899ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டனில் இருந்து அமெரிக்காவிற்கு ஒரு நீராவி கப்பல் பயணிக்கிறது. ஆனால், அதில் பயணித்த கடலில் தொலைந்து போக, அவர்களை தேடி மற்றொரு கப்பல் செல்கிறது. தொலைந்து போன கப்பல் என்னானது, அதன் பயணிகள் என்ன ஆனார்கள் என்பதை 1899 வெப் சீரிஸ் அழகாக சொல்லி உள்ளது. இந்த வெப் தொடரை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.

ஐராவதம் (தெலுங்கு)
தெலுங்குத் திரைப்படமான ஐராவதம் மே மாதம் திரையரங்கில் வெளியானது. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து இப்படம் ஆன்லைன் பார்வையாளர்களுக்காக டிஸ்னி பிளாஸ் ஹாட் ஸ்டாரில் நவம்பர்17ந் தேதி முதல் வெளியாகி உள்ளது. த்ரில்லர் ஜனரில் உருவான இப்படத்தில் மர்மம் திகில் சம்பங்கள் அனைத்தும் இருக்கும்.

காந்தாரா
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள 'காந்தாரா' திரைப்படம் வரும் நவம்பர் 24-ம் தேதி ஓடிடியில் வெளியிடப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் இப்படத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கிஷோர், நாயகியாக சப்தமி கவுடா என பலர் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











