இந்த வார ஓடிடி ரிலீஸ்.. காந்தாரா, பொன்னியின் செல்வன், பிரம்மாஸ்திரம் ஆன் தி வே.. பார்க்க ரெடியா!
சென்னை: அடிக்கிற மழைக்கு தியேட்டர் பக்கம் இப்போதைக்கு தலை வைத்து படுப்பது கஷ்டம் தான். இந்த வாரம் ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ள படங்களே அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்கலாமா என யோசித்து வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் ஓடிடி முன்பாகவே உட்கார்ந்துள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. பழைய படங்கள் பார்த்து போரடித்துப் போன ரசிகர்களை உற்சாகப்படுத்த இந்த வாரம் பிரம்மாண்டமான படங்களும் தரமான படங்களும் வெளியாக காத்திருக்கின்றன.
காந்தாரா, பொன்னியின் செல்வன் மற்றும் பிரம்மாஸ்திரம் என போட்டி போட்டு இந்த வாரம் வெளியாக உள்ள நிலையில், எந்த ஓடிடியில் எந்த தேதியில் வெளியாகுது என்பது குறித்து இங்கே பார்ப்போம்..

காந்தாரா ஓடிடி ரிலீஸ்
வெறும் 16 கோடி பட்ஜெட்டில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும் என கங்கனா ரனாவத் பாராட்டி இருந்தார். நடிகர் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் மாஸ்டர்பீஸ் என காந்தாராவை புகழ்ந்திருந்தார். இந்நிலையில் வரும் நவம்பர் 4ம் தேதி தமிழ் உள்ளிட்ட மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காந்தாரா வெளியாகிறது.

பொன்னியின் செல்வன் ஓடிடி ரிலீஸ்
பொன்னியின் செல்வன் திரைப்படம் ஏற்கனவே அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 199 ரூபாய் ரென்ட் கொடுத்து பார்க்கும் விதமாக ஓடிடிக்கு வந்துவிட்டது. ஆனால், சப்ஸ்கிரைபர்கள் இலவசமாக பார்க்க ஏதுவாக வரும் நவம்பர் 4ம் தேதி பொன்னியின் செல்வன் ஸ்ட்ரீம் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. 500 கோடியை படம் நெருங்கி விட்டது என்கிற அறிவிப்பை எப்போதான் லைகா வெளியிடும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பிரம்மாஸ்திரா ஓடிடி ரிலீஸ்
ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், ஷாருக்கான், நாகார்ஜுனா மற்றும் மெளனி ராய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான பிரம்மாஸ்திரா திரைப்படம் 400 கோடி வசூல் செய்த நிலையில், வரும் நவம்பர் 4ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

கையும் களவும் ரிலீஸ்
இப்படி வரும் நவம்பர் 4ம் தேதியை டார்கெட் செய்து ஏகப்பட்ட பெரிய படங்கள் ஓடிடிக்கு வருகின்றன. இந்நிலையில், கையும் களவும் எனும் புதிய படமும் ஓடிடியில் நேரடியாக வெளியாகிறது. சோனி லைவ் ஓடிடியில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படம் வெளியாகிறது. சஞ்சனா நடராஜன், ரம்யா நம்பீசன், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











