This Week OTT Release: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்கள் அப்டேட்!

சென்னை: தியேட்டரில் கடந்த வாரம் தனுஷின் இட்லி கடை, ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் வெளியானது. இதில் காந்தாரா திரைப்படம் வசூலை குவித்து வரும் நிலையில், இந்த வாரம் அதாவது அக்டோபர் 13ந் தேதியில் இரந்து 19ந் தேதி ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ள திரைப்படம் மற்றும் வலைத்தொடர்கள் என்னென்ன அவை என்ன தளங்களில் வெளியாக உள்ளன என்பதை பார்க்கலாம்

Vishwas: A Mysterious Journey: இன்ஸ்பெக்டர் விஸ்வாஸ் பக்வத் காணாமல் போன பூனம் என்ற இளம் பெண்ணை தேடும் மர்ம த்ரில்லர் கதையாகும். இந்த விசாரணையின் போது, இதே போன்ற பல வழக்குகள் ஒரு விபச்சார கும்பலுடன் தொடர்புடையவை என விஸ்வாஸ் கண்டறிகிறார். அப்போது, சமீர் என்ற கல்லூரிப் பேராசிரியரை அவர் சந்திக்கிறார். ஆனால், இன்ஸ்பெக்டர் ஏன் அவரைக் கொன்றார்? இந்த கொலைக்கான காரணம் என்ன? வழக்கைக் கண்டுபிடிப்பாரா? இல்லையா போன்ற பல கேள்விகளுக்கான விடைகளை திரைப்படம் சொல்கிறது. இப்படத்தை ZEE5 ஓடிடி தளத்தில் அக்டோபர் 17ந் தேதி பார்க்கலாம்.

OTT movie

Friendship Clash: Amazon Prime Video ஓடிடி தளத்தில் அக்டோபர் 16ந் தேதி வெளியாக உள்ள படமாகும். நோவா மற்றும் நிக்கின் உறவின் ஏற்ற தாழ்வுகளைச் சொல்லும் திரைப்படத்தின் மூன்றாவது பாகம் இது. பிரிவுக்குப் பிறகு, அவர்களின் கடந்தகால நினைவுகள் மீண்டும் அவர்களைத் துரத்தும்போது, அன்பு மீண்டும் மலரத் தொடங்குகிறது. கடந்த காலத்தை மறந்து இருவரும் ஒன்று சேர்வார்களா அல்லது பழைய வெறுப்பு தொடருமா என்பதே கதை.

The Diplomat Season 3: இது மூன்றாவது சீசனாகும், முந்தைய சீசனின் இறுதியிலிருந்து இந்த தொடர் தொடங்குகிறது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின் மரணத்தைத் தொடர்ந்து, துணை ஜனாதிபதி கிரேஸ் பென் புதிய அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கிறார். அவர் தனது புதிய பதவியில் வெற்றி பெறுவாரா என்பதே இந்த சீசனின் முக்கிய சாரம். இத்தொடர்ந்து Netflix தளத்தில் அக்டோபர் 16ந் தேதி பார்க்கலாம்.

How to Train Your Dragon: வைகிங் தலைவர் ஸ்டாய்க் தி வாஸ்ட்டின் மகன் ஹிக்கப் மற்றும் நைட் ஃபியூரி டிராகன் டூத்லெஸ் ஆகிய இருவருக்கும் இடையிலான எதிர்பாராத உறவை விவரிக்கும் அமெரிக்க சாகச பேண்டஸி திரைப்படம் இது. ஹிக்கப் மற்றும் டூத்லெஸ் இருவரின் சாகச பயணங்கள், நட்பு, மற்றும் வலிமையை மையமாகக் கொண்ட படம் இது. இப்படத்தை JioHotstar ஓடிடி தளத்தில் இன்று முதல் பார்க்கலாம்.

OTT movie

The Twits: திரு. மற்றும் திருமதி. ட்விட் என்ற இரண்டு கதாபாத்திரங்களின் நகைச்சுவை அனிமேஷன் படம் இது. இவர்கள் இருவரும் ஒரு ஆபத்தான கேளிக்கை பூங்காவை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கும், இரண்டு குழந்தைகளுக்கும், மந்திர விலங்குகளின் சமூகத்திற்கும் இடையே நடக்கும் மோதலை மையமாகக் கொண்ட உருவாகி உள்ளது இத்திரைப்படம். வித்தியாசமான கதை அம்சம் கொண்ட இந்த படத்தை Netflix தளத்தில் அக்டோபர் 16ந் தேதி முதல் பார்க்கலாம்.

Final Destination 6: Bloodlines: பல ஆண்டுகளாக பாராட்டப்பட்ட இந்த திகில் திரைப்படம், ஒரு உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டது. இந்த கதை லொரைன் வாரன் மற்றும் தி நன் திரைப்படத்தில் இருந்து வந்த சிஸ்டர் ஐரீன் ஆகியோரின் தொடர்பைச் சொல்கிறது. இப்படத்தை JioHotstar ஓடிடி தளத்தில் அக்டோபர் 16ந் தேதி முதல் பார்க்கலாம்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X