This week OTT releases:பாக்ஸ் ஆபிசில் கலக்கிய காந்தாரா சாப்டர்1 முதல் லோதா வரை இந்தவார ஓடிடி ரிலீஸ்!
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட், மாரிசெல்வராஜ் இயக்கிய பைசன், ஹரீஷ் கல்யாண் நடித்த டீசல் போன்ற திரைப்படங்கள் வெளியாகின. இதில், டியூட், பைசன் திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த வாரம் தியேட்டரில் பெரிய திரைப்படம் எதுவும் வெளியாகாத நிலையில், இந்த வாரம் ஓடிடியில் பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளி திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

காந்தாரா சாப்டர் 1: நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் வெளியானதற்கு பின், இந்திய சினிமா உலகில் முழுவதும் பேசப்படும் நபராக மாறி உள்ளார். ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்த இந்த படம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிடப்பட்டது. ஈஸ்வரா பூந்தோட்டம் என்ற தெய்வ சக்தி கொண்ட இடத்தை அடைய பல குழுக்கள் முயற்சி செய்கின்றனர். அ இதனால், நடக்கும் போரில் காந்தாரா மக்களை அந்த தெய்வம் காப்பாற்றுகிறது என்பதை வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்ட இப்படம் 800 கோடிக்கும் மேல் வசூலை அள்ளி சாதனைப்படைத்தது. இப்படம் அமேசான் பிரைம் வீடியோ அக்டோபர் 31ந் தேதி இத்திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தேதிகளில் வெளியாக உள்ளது.
லோகா சாப்டர் 1: ஓணம் பண்டிகையை முன்னிட்டு தியேட்டரில் வெளியான லோகா சாப்டர் 1 திரைப்படம் உலகம் முழுவதும் 'பாக்ஸ் ஆஃபிஸ்' மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்ற. .டொமினிக் அருண் இயக்கத்தில் நஸ்லேன் - கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான இத்திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷினி பெண் சூப்பர் ஹீரோவாக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதே போல, நடன இயக்குநர் சாண்டி, வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தியேட்டரில் வசூலை அள்ளிய இத்திரைப்டம் 31ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இட்லிகடை: தனுஷ் இயக்கி நடித்த திரைப்படம் இட்லிகடை. இப்படத்தில் தனுஷ், நித்யா மேனன், சமுத்திரக்கனி, சத்யராஜ், அருண் விஜய், ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்டோபர் 29-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.
பேட் கேர்ள்: இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநரான இருந்த வர்ஷா பரத் இயக்கிய உருவாகியத் திரைப்படம் பேட் கேர்ள். இப்படத்தில் அஞ்சலி சிவராமன் சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண் ஆகியோர் நடித்துள்ளன. இப்படத்தின் டீசர் வெளியான போதே, இந்த பிராமணர் சமுதாயத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த இளம் தலைமுறை பெண்களை, மிகவும் கேவலமாக சித்தரித்திருப்பதாக கூறி தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலியுறுத்தி இருந்தது. இப்படி பல சர்ச்சைகளை கடந்து இப்படம் செப்டம்பர் 5ந் தேதி தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகிற நவம்பர் மாதம் 4ந் தேதி வெளியாக உள்ளது.
பிளாக் மெயில்: இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே படங்களை இயக்கிய மு. மாறன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார், தேஜு அஸ்வினி நடித்த திரைப்படம் பிளாக்மெயில். இதில்,ஸ்ரீகாந்த், ரமேஷ் திலக், தேஜு அஸ்வினி, பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். இப்படம் செப்டம்பர் 12ந் தேதி தியேட்டரில் வெளியாகி கலவை விமர்சனங்களைப் பெற்றது. இப்படம் அக்டோபர் 30 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











