ஓடிடி.,யில் ரசிகர்களை மகிழ்விக்கும் 5 புதிய படங்கள் இது தான்

சென்னை : சமீப காலமாக ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் படங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவிற்கு பிறகு ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் படங்கள் மட்டுமின்றி, ஓடிடி தளங்களுக்கான ரசிகர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்த போதும் தொடர்ந்து பல படங்கள் ஓடிடி.,யிலேயே ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி, பெரிய ஸ்டார்கள் நடிக்கும் மெகா பட்ஜெட் படங்களும் கூட ஓடிடி தளங்களை நாடி வருகின்றன.

இந்நிலையில் தெலுங்கில் இந்த வாரம் அதிகம் எதிர்பார்க்கப்படும் 5 படங்கள் ஓடிடி.,யில் வெளியிட உள்ளன. இதில் இரண்டு படங்கள் நேரடியாக ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்படுகின்றன. ஒன்று, தியேட்டர் ரிலீசிற்கு பிறகு வெளியாகும் பெரிய நடிகர் நடித்த பெரிய பட்ஜெட் படம் ஆகும்.

த்ரிஷ்யம் 2

த்ரிஷ்யம் 2

தெலுங்கு த்ரிஷ்யம் 2 படம் அமேசான் பிரைம் வீடியோவில் டிசம்பர் 24 ம் தேதி இரவு நேரடியாக வெளியிடப்பட உள்ளது. வெங்கடேஷ், சம்பத் ராஜ், மீனா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த த்ரில்லர் படத்தை ஜீத்து ஜோசப் இயக்கி உள்ளார். த்ரிஷ்யம் படம் மலையாளம், தமிழ், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆன படமாகும்.

ப்ரோ

ப்ரோ

#BRO படம் இந்த வாரம் ஓடிடி.,யில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது. நவீன் சந்திரா, அவிகா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் சோனி லைவில் வெளியில் வெளியிடப்பட உள்ளது. இதுவும் ரீமேக் படம் தான். த்ரிஷ்யம் 2 படத்தை போல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் இது.

பெத்தன்னா

பெத்தன்னா

ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தின் தெலுங்கு ரீமேக் தான் பெத்தன்னா. இது நெட்ஃபிளிக்சில் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கிய இந்த படம் சன்நெக்ஸ்டிலும் வெளியிடப்பட்டுள்ளது. பிரம்மாண்டமாக தியேட்டரில் வெளியிடப்பட்ட இந்த படம் வசூல் சாதனையும் படைத்துள்ளது.

ரிபப்ளிக்

ரிபப்ளிக்

சாய் தரம் தேஜ் நடிப்பில், தேவே கட்டா இயக்கி உள்ள ரிபப்ளிக் படம் ஜீ 5 தளத்தில் நவம்பர் 26 ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. ரம்யா கிருஷ்ணன், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளதால் இந்த படம் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

Recommended Video

OTT னா ஒட்டி ஒட்டி பாப்பாங்க நமக்கு தியேட்டர் தான் முக்கியம் | Hiphop Thamizha | Filmibeat Tamil
ரொமான்டிக்

ரொமான்டிக்

புரி ஜெகந்நாத் எழுதி உள்ள ரொமான்டிக் படம் ஆஹா தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆகாஷ் புரி, கேடிகா சர்மா நடித்துள்ள இந்த படம் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படமாகவும் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X