Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பல எதிர்மறை எண்ணங்கள் மனதில் வரலாம்...
- News
இது மோசடி! ஏமாறாதீங்க.. மின் இணைப்பு தொடர்பான மெசெஜ் பற்றி சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் அட்வைஸ்!
- Sports
தினேஷ் கார்த்திக்கிற்கு பிசிசிஐ துரோகம்.. நம்ப வைத்து ஏமாற்றம்.. மீண்டு வருவாரா DK
- Finance
இனி உங்க இஷ்டத்துக்கு வீடியோ போட முடியாது.. சமூக வலைத்தள வீடியோவுக்கு கடிவாளம்!
- Automobiles
ஹூண்டாயிடம் கவரவத்தை பறி கொடுத்த டாடா.... என்னங்க இப்படி ஆகிபோச்சு
- Technology
இனி 6 மட்டும் "இல்ல" அனைத்தும் உங்களுக்கு தான்: வாட்ஸ்அப் புது அம்சம்
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இந்த வாரம் வெளியாகும் ஓடிடி படங்கள் குறித்து பார்க்கலாமா.. உதயநிதி படம் சோனி லைவ்வில் வெளியாகுதுங்க!
சென்னை : ஒவ்வொரு வாரமும் சிறப்பான படங்கள் நேரடியாகவும் திரையரங்குகளில் வெளியாகி சில வாரங்கள் கழித்தும் ஓடிடியில் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் இந்த வாரமும் சிறப்பான பல படங்கள் பல ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன.
வாரயிறுதியில் இந்தப் படங்களை பார்க்க தற்போதே ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
சமந்தாவை
தொடர்ந்து
கேஜிஎஃப்
ஹீரோயின்
உடன்
ஜக்கி
வாசுதேவ்..
டிரெண்டாகும்
Save
Soil
புகைப்படங்கள்!

அடுத்தக்கட்ட நகர்வு
தகவல் தொழில்நுட்பத்தின் சிறப்பான மற்றும் அடுத்தக்கட்ட நகர்வாக ஓடிடி தளங்கள் பார்க்கப்படுகின்றன. திரையரங்குகளில் சென்று அனைத்து புதியப் படங்களையும் பார்க்க முடியாத ஆனால் பார்க்கும் ஆர்வம் கொண்ட சினிமா காதலர்களுக்கு இவை வரப்பிரசாதமாக அமைந்துள்ளன.

குறைவான கட்டணத்தில் நிறைவான படங்கள்
குறைந்தக் கட்டணத்தில் இத்தகைய படங்களை பார்த்துக் கொள்ளும் வசதி இந்த ஓடிடி தளங்களில் காணப்படுகிறது. மேலும் தங்களது விருப்பத்திற்குரிய ஹீரோக்களின் எவர்கிரீன் படங்களையும் இந்த தளங்களின் மூலம் இளையத் தலைமுறையினர் பார்க்கும் வசதியும் உள்ளதால் இவற்றிற்கு தொடர்ந்து அதிகமான வரவேற்பு காணப்படுகிறது.

மனநிறைவான தருணங்கள்
மேலும் பழைய கிளாசிக் படங்களை, வெப் தொடர்கள், புதிய மற்றும் பழைய சீரியல்கள் ஆகியவற்றையும் இந்த தளங்களின்மூலம் காணலாம். இவை மட்டுமில்லாமல் குறைந்த பட்ஜெட்டில் நிறைவாக எடுக்கப்பட்ட படங்களையும் இந்த ஓடிடி தளங்கள் கையிலெடுப்பதால் இவற்றையும் மனநிறைவாக பார்க்கும் தருணங்களை ரசிகர்கள் அனுபவித்து வருகின்றனர்.

நிறைவான படங்கள்
மேலும் ஒரு குடும்பத்தினர் திரையரங்குகளில் சென்று படம் பார்ப்பதற்கு ஆயிரங்களை செலவிட வேண்டிய கட்டாயத்தில் அதை பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் குடும்பத் தலைவர்கள் ஓடிடி தளங்கள் மூலம் தவிர்க்க முடிகிறது. தன்னுடைய குடும்பத்தினருக்கு வீட்டிலேயே நிறைவான படங்களை சில தினங்களில் பரிசளிக்க முடிகிறது.

சோனி லைவ்வில் நெஞ்சுக்கு நீதி
இந்நிலையில் இந்த வாரமும் சிறப்பான பல படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளது. அவற்றில் முக்கியமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான நெஞ்சுக்கு நீதி படம் தற்போது சோனி லைவ்வில் வெளியாகியுள்ளது.

கதிர் படம்
இதேபோல வெங்கடேஷ் அப்பாதுரை, சந்தோஷ் பிரதாப், பவ்யா கதிர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசான கதிர் படமும் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. வேலையில்லாமல் தவிக்கும் நாயகனை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

அமேசான் பிரைமில் சர்க்காரு வாரி பட்டா
இந்த இரு படங்கள் தான் இந்த வாரத்தில் ஓடிடியில் வெளியாகவுள்ள தமிழ் படங்கள். இதனிடையே மலையாளத்தில் குட்டாவும் சிக்ஷையும் தெலுங்கில் மகேஷ் பாபுவின் சர்க்காரு வாரி பட்டா, பெல்லி சந்தா டீ போன்ற படங்கள் வெளியாகவுள்ளன. இவை முறையே ஜீ 5 மற்றும் அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளன.

ஹாலிவுட் படங்கள்
இதேபோல ஹாலிவுட்டில் மேன் vs பீ படம் நெட்பிளிக்சிலும் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் 2 டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும் வெளியாகவுள்ளன. இதனிடையே லவ் அண்ட் கெலாட்டோ என்ற இத்தாலிய படமும் நெட்பிளிக்சில் வெளியாகவுள்ளது. இந்தப் படங்களும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரையரங்குகளில் வரிசைகட்டும் படங்கள்
இந்த வாரத்தில் விஜய் சேதுபதியின் மாமனிதன், பட்டாம்பூச்சி, மாயோன், வேழம், போலாமா ஊர்கோலம் போன்ற படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இவற்றில் மாமனிதன், பட்டாம்பூச்சி, மாயோன் போன்ற படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்போது திரையரங்குகளில் சிறப்பாக ஓடிவரும் விக்ரம் படத்தின் வசூலை இந்தப்படங்கள் முறியடிக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.