Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பல எதிர்மறை எண்ணங்கள் மனதில் வரலாம்...
- News
இது மோசடி! ஏமாறாதீங்க.. மின் இணைப்பு தொடர்பான மெசெஜ் பற்றி சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் அட்வைஸ்!
- Sports
தினேஷ் கார்த்திக்கிற்கு பிசிசிஐ துரோகம்.. நம்ப வைத்து ஏமாற்றம்.. மீண்டு வருவாரா DK
- Finance
இனி உங்க இஷ்டத்துக்கு வீடியோ போட முடியாது.. சமூக வலைத்தள வீடியோவுக்கு கடிவாளம்!
- Automobiles
ஹூண்டாயிடம் கவரவத்தை பறி கொடுத்த டாடா.... என்னங்க இப்படி ஆகிபோச்சு
- Technology
இனி 6 மட்டும் "இல்ல" அனைத்தும் உங்களுக்கு தான்: வாட்ஸ்அப் புது அம்சம்
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்.. வீக் எண்ட்டிற்கு சிறப்பாக ப்ளான் பண்ணுங்க!
சென்னை : ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் சிறப்பான பல படங்கள் ரிலீசாகி ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகி வருகின்றன.
அந்த வகையில் இந்த வாரமும் சிறப்பான பல படங்கள் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன.
அந்தப் படங்களின் லிஸ்ட்டை தற்போது பார்க்கலாம்.
எனக்கு நண்பன்னா அது விஜய் மட்டும்தான்... நடிகர் ராகவா லாரன்ஸ் பெருமிதம்!

ஓடிடி ரிலீஸ் படங்கள்
ஓடிடியில் படங்கள் தொடர்ந்து ரிலீசாகி மக்களின் வீக் எண்ட்டை சிறப்பாக்கி வருகின்றன. ஓடிடி தளங்கள் மூலம் வீட்டில் உள்ள அனைவரும் தங்களது வீட்டில் இருந்தபடியே பெரிய ஸ்கிரீனிலும் படங்களை பார்த்து மகிழ்கின்றனர். சிறப்பான படங்களை திரையரங்குகளிலும், மனதிற்கு பிடித்தமான படங்களை ஓடிடியிலும் பார்க்கும் மனநிலை ரசிகர்களிடையே அதிகமாகியுள்ளது.

சிறிய பட்ஜெட் படங்கள்
சிறிய பட்ஜெட் படங்களுக்கு இந்த ஓடிடி ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்து. இதன்மூலம் ரசிகர்களை சிறப்பாக சென்றடைகின்றன இந்த லோ பட்ஜெட் படங்கள். ஒவ்வொரு வாரமும் படங்கள் நேரடியாகவும், திரையரங்க ரிலீசுக்கு பின்பும் ஓடிடி தளங்களில் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

ஓ2 படம் ரிலீஸ்
இந்நிலையில் இந்த வாரமும் சிறப்பான பல படங்கள் ரிலீசாகியுள்ளன. நயன்தாராவின் நடிப்பில் ஓ2 படம் இன்றைய தினம் ஓடிடியில் நேரடியாக வெளியாகியுள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இந்தப் படத்தை ரசிகர்கள் கண்டு களிக்கலாம். தன்னுடைய 8 வயது மகனின் உயிரை காப்பாற்ற போராடும் அம்மா கேரக்டரில் நயன்தாரா இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.

சிறப்பான விமர்சனங்கள்
படத்தின் டீசர், ட்ரெயிலர், பாடல்கள் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது படம் நல்ல விமர்சனங்களையும் பெற்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. இமேஜ் பார்க்காமல் நயன்தாரா இதுபோன்ற கேரக்டர்களில் நடித்து வருவது சிறப்பானது.

சுழல் வெப் தொடர்
இதேபோல இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி கதை மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ளது சுழல் வெப் தொடர். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், பார்த்திபன் உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். த்ரில் பாணியில் இந்தத் தொடர் உருவாகியுள்ளது. இந்த தொடர் தற்போது அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.

நெஞ்சுக்கு நீதி படம்
நடிகர் உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி படம் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் ரிலீசாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றது. த்ரில்லர் கதையாக வெளியான இந்தப் படம் வரும் 23ம் தேதி சோனி லைவ்வில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிங்கர்டிப் சீசன் 2 தொடர்
சைபர் உலகத்தின் மறுபக்கத்தை கூறும் பிங்கர்டிப் சீசன் 2 வெப் தொடர் தற்போது ஜீ5 தளத்தில் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. ஷிவாகர் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த தொடர் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தற்போது வெளியாகியுள்ளது.

சோனி லைவில் சால்ட் சிட்டி
இதேபோல மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள சால்ட் சிட்டி படம் தற்போது சோனி லைவ்வில் வெளியாகியுள்ளது. ஆயுஷ்மான் குரானாவின் அடுத்தப் படமான அனெக் படம் நெட்பிளிக்சில் வெளியாகயுள்ளது. இதேபோல மார்பியஸ் படம் ஜீ 5 ஓடிடியில் ஜூன் 22ல் வெளியாகவுள்ளது.

சர்க்காரு வாரி பட்டா படம்
மகேஷ் பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பரசுராம் இயக்கியிருந்த படம் திரையரங்குகளில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் வரும் ஜூன் 23ம் தேதி சர்க்காரு வாரி பட்டா படம் அமேசான் பிரைமில் ரிலீசாக உள்ளது. இதனால் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.