Don't Miss!
- Finance
SBI வங்கி சேவை 2 நாள் பாதிப்பு.. மக்களே உஷார்..!
- Sports
2022ஆம் ஆண்டின் ஐசிசி சிறந்த டி20 கிரிக்கெட் வீரர்.. சூர்யகுமார் யாதவ்க்கு கிடைத்த கவுரவம்.. விவரம்
- News
குறிச்சு வச்சுக்கோங்க.. 2024 நாடாளுமன்றத் தேர்தல்.. எனது ஆட்டத்தைப் பாருங்கள்.. எச்சரிக்கும் சீமான்!
- Automobiles
கார் ஓட்டும்போது ஏன் கழுத்து வலிக்குது தெரியுமா? இந்த விஷயங்களை செஞ்சா வலி இருந்த இடமே தெரியாம பறந்து போயிரும்
- Lifestyle
நீங்க நினைத்ததை விட எடையை வேகமாக குறைக்க இந்த பழங்கள் அல்லது காய்கறி சாறுகளில் ஒன்றை தினமும் குடித்தால் போதும்
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
இந்த வாரம் ஓடிடியில்... உதயநிதியின் கலகத் தலைவன் முதல் ஹாலிவுட்டின் அந்தப் படம் வரை
சென்னை: திரையரங்குகளைத் தொடர்ந்து இந்த வாரம் ஏராளமான படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளன.
ஆனாலும் தமிழில் இந்த வாரம் இரண்டு திரைப்படங்கள் மட்டுமே ஓடிடியில் வெளியாகின்றன.
ஓடிடி ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பில் உள்ள படங்களில் இந்த வாரம் வெளியாகும் பட்டியலை தற்போது பார்க்கலாம்.
திரையரங்குகளில் 25 நாட்கள் சக்சஸ்... அமேசானில் சமந்தாவின் யசோதா: ஓடிடி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

உதயநிதியின் கலகத் தலைவன்
சினிமா, அரசியல் என பயணித்து வந்த உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இதனால் சமீபத்தில் நடித்து முடித்துள்ள 'மாமன்னன்' தான் தனது இறுதித் திரைப்படம் என உதயநிதி தெரிவித்துள்ளார். அதேநேரம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திரையரங்குகளில் வெளியான 'கலகத் தலைவன்' ஓடிடி ரிலீஸுக்கு தயாராக உள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதியுடன் நிதி அகர்வால், ஆரவ், கலையரசன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

டிசம்பர் 16ம் தேதி ரிலீஸ்
நவம்பர் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியான 'கலகத் தலைவன்' கலவையான விமர்சனங்களைப் பெற்றது. உதயநிதி - நிதி அகர்வால் இடையேயான் காதல் காட்சிகள் அதிகம் வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில், கலகத் தலைவன் திரைப்படம் வரும் 16ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிற்து. திரையரங்குகளில் இந்தப் படத்தை மிஸ் செய்த ரசிகர்கள், இப்போது ஓடிடியில் பார்க்க ரெடியாகிவிட்டனர். அடுத்ததாக உதயநிதியின் நடிப்பில் மாமன்னன் படம் மட்டுமே வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கதிர், நரேன் நடிப்பில் யூகி
கலகத் தலைவனை தொடர்ந்து தமிழில் யூகி திரைப்படமும் ஓடிடியில் வெளியாகிறது. கதிர், நரேன், கயல் ஆனந்தி, பவித்ரா, நட்டி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகியிருந்தது. சில தினங்களுக்கு முன்னர் திரையரங்குகளில் வெளியான 'யூகி', வரும் 16ம் தேதி சிம்பிளி சவுத் என்ற ஓடிடியில் ஸ்டிரீமிங் ஆகிறது.

மற்ற மொழி திரைப்படங்கள்
ம்லையாளத்தில் 'அரிப்பு' திரைப்படமும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. மகேஷ் நாரயணன் இயக்கத்தில் குஞ்சாக்கா போபன், ஃபைசல் மாலிக், டேனிஷ் ஹுசைன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வரும் 16ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிற்து. இந்தியில் Code Name: Tiranga திரைப்படம் வரும் 16ம் தேதி நெட்பிளிக்ஸில் ரிலீஸாகிற்து. பிரணிதி சோப்ரா நடித்துள்ள இந்தப் படத்தை ரிபு தாஸ்குப்தா இயக்கியுள்ளார். தெலுங்கில் இந்திண்டி ராமாயணம் திரைப்படம், வரும் 16ம் தேதி ஆஹா ஓடிடியில் வெளியாகிறது.

ஹாலிவுட் ரசிகர்களுக்கு
ஹாலிவுட் ரசிகர்களுக்கும் இந்த வாரம் தரமான படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன. Who Killed Santa? திரைப்படம் வரும் 16ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. அதேபோல் பிரைவேட் லெஸன் ( Private Lesson ) என்ற ரொமாண்டிக் திரைப்படமும் நெட்பிளிக்ஸில் வெளியாகிற்து. குறிப்பாக ஹாரர் திரில்லர் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த Don't Breathe 2 திரைப்படம் சோனி லிவ் ஓடிடியில் வரும் 16ம் தேதி வெளியாகிறது. அதேபோல், இந்தோனேஷியாவில் ஹிட் அடித்த The Big Four மூவி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.