For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பதான் முதல் மாளிகப்புரம் வரை... தியேட்டர் மற்றும் ஓடிடியில் என்ன படம் பார்க்கலாம்!

  |

  சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்கள் வெளியானது. தொடர் விடுமுறையை முன்னிட்டு அரங்கு நிறைந்த காட்சிகளுடன் இந்த பாடம் வசூலை வாரிக்குவித்தது.

  நாளை குடியரசுதினம் என்பதாலும், அடுத்ததாக வார விடுமுறை நாட்கள் வருவதாலும் ஏராளமான திரைப்படங்கள் வெளியீட்டுக்கு வரிசை கட்டி காத்திருக்கின்றன.

  இதில், தியேட்டர்கள் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப்சீரிஸ் என்னென்ன என்பதை பார்க்கலாமா?

  துணிவு பட பாணியில் வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி..பொதுமக்களிடம் தர்ம அடி.. வசமாக சிக்கிய இளைஞன்!துணிவு பட பாணியில் வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி..பொதுமக்களிடம் தர்ம அடி.. வசமாக சிக்கிய இளைஞன்!

  பதான்

  பதான்

  நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் நடிப்பில் பதான் இன்று வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு,இந்தி என ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 7500 க்கும் மேற்பட்ட திரை அரங்குகளில் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தை ஷாருக்கானின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

  பிகினிங் (தமிழ்)

  பிகினிங் (தமிழ்)

  இயக்குனர் ஜெகன் விஜயா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பிகினிங். இப்படத்தில் வினோத் கிஷன், கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆசியாவில் முதல் முறையாக 'ஸ்பிளிட் ஸ்கிரீனில்' இரண்டு கதைகளைக் காட்டும் தொழில்நுட்பம் இந்தப் படத்தில் பயனாகியிருக்கிறது. இப்படத்தில் திரையின் இடது பக்கம் ஒரு கதை விவரிக்கப்படும், வலது பக்கம் மற்றொரு கதையும் வரும். இரண்டு நிகழ்வுகளை ஒரே நேரத்தில் பார்ப்பது புது வகையான அனுபவமாக இருக்கும்.இப்படம் திரையரங்கில் நாளை வெளியாக உள்ளது.

  மெய்ப்பட செய்

  மெய்ப்பட செய்

  பி.ஆர்.தமிழ்செல்வம் தயாரிப்பில், வேலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மெய்ப்பட செய். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கண்டிக்கும் வகையில் உருவாகி உள்ள இந்த படத்தில், ஆதவ் பாலாஜி நாயகனாகவும் மது­னிகா நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன்ஆடுகளம் ஜெயபாலன், ஓ.ஏ.கே.சுந்தர், ராகுல் தாத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மெய்ப்பட செய் திரைப்படம் ஜனவரி 27ந் தேதி முதல் திரையரங்கில் வெளியாக உள்ளது.

  மாளிகப்புரம்

  மாளிகப்புரம்

  உன்னி முகுந்தன், சிறுமி தேவநந்தா, மனோஜ் கே.ஜெயன், சம்பத் ராம் உட்பட பலர் நடிப்பில் டிசம்பர் 30ந் தேதி வெளியானத் திரைப்படம் மாளிகப்புரம். 3.5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானத் இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலித்தது. இதையடுத்து, ஜனவரி 26 ஆம் தேதியான நாளை இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது.

  எங்க ஹாஸ்டல் (வெப் சீரிஸ்)

  எங்க ஹாஸ்டல் (வெப் சீரிஸ்)

  ஹிந்தியில் பிரபலமான ஹாஸ்டல் டேஸ் தொடரின் தமிழ் பதிப்பு தான் எங்க ஹாஸ்டல். சதீஷ் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவான இந்த தொடரில் மூலைக்கு மூலை முளைத்து இருக்கும் பொறியாளர் கல்லூரி பற்றியும் ஹாஸ்டல் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. இதில் சச்சின் நாச்சியப்பன், அவினாஷ் ரமேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், சரண்யா ரவிச்சந்திரன், டிராவிட் செல்வம், கௌதம் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த வெப் சீரிஸ் நாளை மறுதினம் முதல் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

  ஜான்பாஸ் (இந்தி)

  ஜான்பாஸ் (இந்தி)

  நடிகை ரெஜினா கசாண்ட்ரா லீட் ரோலில் நடித்துள்ள திரைப்படம் 'ஜான்பாஸ் ஹிந்துஸ்தான் கே' . இந்த படத்தில், ISIS வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் முதன்மை புலனாய்வாளராக நியமிக்கப்படும் ரெஜினா பல சோதனைகளை கடந்த தன் நாட்டைக் காக்க உறுதியுடன் இருக்கிறார்.இதில், பருண் சோப்தி, சுமீத் வியாஸ், மிதா வஷிஷ்ட் மற்றும் சந்தன் ராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். குடியரசு தினத்தை யொட்டி இந்த படம் நாளை ZEE5 ஒடிடியில் வெளியாக உள்ளது.

  அயலி (வெப் தொடர்)

  அயலி (வெப் தொடர்)

  இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்தொடர் அயலி. எட்டு எபிசோடுகள் கொண்ட இந்த தொடரில் அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த தொடர் ஜீ5 ஓடிடியில் ஜனவரி 26ந் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.

  English summary
  Pathaan, Malikappuram This week theatre and ott release movies full list
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X