Don't Miss!
- News
செவ்வாய் பெயர்ச்சி 2022: இனி இந்த ராசிக்காரர்களின் காட்டில் பணமழைதான்!..என்ஜாய்!!
- Finance
Langya virus: இந்தியர்களும், இந்திய முதலீட்டாளர்களும் பயப்பட வேண்டுமா..?
- Sports
என்ன கொடுமை சார் இது ? நியூசி வீரர் டிரெண்ட் பவுல்ட் எடுத்த வினோத முடிவு..கிரிக்கெட் உலகிற்கு சோகம்
- Lifestyle
நீங்க சாப்பிடும் இந்த உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதாம்... இது மாரடைப்பை ஏற்படுத்துமாம்!
- Technology
Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
வெற்றிமுகம் காட்டும் விக்ரம்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள், வெப்சீரீஸ்கள் இதுதான்!
சென்னை : இந்த வாரம் யானை, டி பிளாக், ராக்கெட்ரி என சிறப்பான படங்கள் நேற்றைய தினம் ரிலீசாகியுள்ளன.
இந்தப் படங்கள் சிறப்பான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகின்றன.
இந்த வாரம் ஓடிடியில் தமிழ்ப்படம் எதுவும் ரிலீசாகவில்லை. ஆங்கிலம், கன்னடம் என சில படங்கள் மட்டுமே ஓடிடியில் ரிலீசாகியுள்ளன.
இந்த வார ரிலீஸ்.. வசூலில் ராக்கெட்ரி, டி ப்ளாக் படங்களை தட்டித் தூக்கிய யானை.. முதல் நாள் நிலவரம்!

கொரோனா கட்டுப்பாடுகள்
கொரோனா ஒருபக்கம் தன்னுடைய எல்லைகளை விரிவுப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் அதனுடன் இணைந்து பயணிக்க மக்கள் கற்றுக் கொண்டதாகத்தான் தெரிகிறது. சமீப நாட்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்திலும் மாஸ்க் அணிவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த வார ரிலீஸ் படங்கள்
ஆனாலும் திரையில் 100 சதவிகித ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ரசிகர்கள் தங்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்த வாரமும் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் சிறப்பான பல படங்கள் ரிலீசாகியுள்ளன. நேற்றைய தினம் தமிழில் ராக்கெட்ரி, யானை மற்றும் டி பிளாக் ஆகிய படங்கள் ரிலீசாகியுள்ளன.

ரசிகர்கள் வரவேற்பு
இந்தப் படங்கள் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளன. திரையரங்குகளில் வெற்றிகரமான துவக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. இந்நிலையில் மினியன்ஸ்: தி ரைஸ் ஆஃப் க்ரூ என்ற ஹாலிவுட் படம், பக்கா கமெர்ஷியல் என்ற தெலுங்குப்படம் மற்றும் சாண்டாகர்ஸ் என்ற மலையாளப்படம், ரஷ்த்ரா கவச்: ஓம் என்ற இந்திப்படமும் ரிலீசாகியுள்ளன.

ஓடிடி ரிலீஸ் படங்கள்
இதனிடையே இந்த வாரம் தமிழ்ப்படம் எதுவும் ஓடிடியில் வெளியாகவில்லை. மாறாக ப்ளாஸ்டட், ப்யூட்டி ஆகிய ஹாலிவுட் படங்கள் நெட்பிளிக்சில் வெளியாகியுள்ளன. இதேபோல வீ, பெண்டேட்டா போன்ற பிரெஞ்ச் படங்களும் ஓடிடியில் வெளியாகியுள்ளன. டியர் விக்ரம் என்ற கன்னட படம் வூட் தளத்தில் வெளியாகியுள்ளது.

வெப் தொடர்கள் ரிலீஸ்
இதனிடையே ஓடிடியில் சில வெப் தொடர்களும் வெளியாகி பட்டையை கிளப்ப தயாராகியுள்ளன. தி சிஎஸ்.5, வெஸ்ட்வார்ல்ட் ஆடாப்ட் ஆர் டை, ஒன்லி மர்டர்ஸ் ஆன் தி பில்டிங் எஸ் 2, பேமேக்ஸ், தி டெர்மினல் லிஸ்ட், ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் எஸ்.4 வால்யூம் 2 ஆகிய தொடர்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகியுள்ளன.

கொரியன் படங்கள்
இதனிடையே கஃபே மின்மடங், எக்ஸ்ட்ராடினரி அடோர்னே போன்ற கொரியன் மொழி வெப் தொடர்களும் இந்த வாரம் வெளியாகியுள்ளன. மியா பிபி அவுர் மர்டர் என்ற இந்தி தொடரும், அன்யா'ஸ் டுடோரியல் என்ற தெலுங்கு சீரிசும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகியுள்ளன.

ஓடிடியில் வெளியான வாய்தா
திரையரங்குகளின் ரிலீசுக்கு பிந்தைய படங்களில் இந்த வாரம் வாய்தா என்ற தமிழ்ப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இதேபோல அனெக், சாம்ராட் பிரித்விராஜ், தக்கட், ஆபரேஷன் ரோமியோ உள்ளிட்ட இந்திப் படங்களும் ஓடிடியில் ரிலீசாகியுள்ளன. விரட்ட பர்வம் என்ற தெலுங்குப்படம், கீடம் என்ற மலையாளப்படமும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகியுள்ளன.

மாற்றத்தை ஏற்படுத்துமா?
தமிழில் விக்ரம் படம் சோலோவாக வெற்றிநடைப் போட்டுக் கொண்டிருந்த நிலையில், கடந்த வாரம் வெளியான மாமனிதன், பட்டாம்பூச்சி, வேழம் படங்கள் அதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் இந்தவாரம் ராக்கெட்ரி, யானை, டி பிளாக் படங்கள் வெளியாகியுள்ளன. இவை எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.