Don't Miss!
- News
இதுதான் ரிஷி சுனக்.. விதியை மீறிய மூத்த அமைச்சர்.. ஒரே அடியாக தூக்கிய ரிஷி சுனக்! அதிரடி நடவடிக்கை
- Technology
பட்ஜெட் விலை Poco எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க.!
- Finance
பட்ஜெட்டுக்கு முன்பு தங்கம் விலை சரிவு.. தொடர்ந்து குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?
- Lifestyle
பிப்ரவரி மாதத்தில் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பணப் பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷாரா இருங்க...
- Travel
இனி திருப்பதி தரிசனம், ரூம் புக்கிங் செய்வது ஈசி – TTD யின் புதிய மொபைல் செயலி!
- Automobiles
2.5 கோடி இதயங்களை வென்ற மாருதி! டாடா, ஹூண்டாய் எல்லாம் பக்கத்துலகூட வர முடியாது
- Sports
3வது டி20 போட்டியிலும் இப்படியா? அகமதாபாத் பிட்ச்-ல் உள்ள சஸ்பன்ஸ்.. என்ன செய்யப்போகிறார் பாண்ட்யா??
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
டோவினோ தாமஸின் மின்னல் முரளி… ட்ரெண்டாகும் ப்ரோமோ!
கேரளா : மாலிக் போன்ற பெரிய பட்ஜெட் படங்களின் வரிசையில் அடுத்து ஓடிடியில் வெளியாகப் போகும் மலையாளப் படம் மின்னல் முரளி.
டோவினோ தாமஸ், அஜு வர்க்கீஸ், நம்மூர் குரு சோமசுந்தரம், ஹரிஸ்ரீ அசோகன் இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
நச்சுன்னு
தேவயானி
செய்த
அந்த
ஒரு
அசத்தல்
காரியம்...குவியும்
பாராட்டுக்கள்
இந்த திரைப்படம், மலையாள சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோ திரைப்படமாகும்.

சூப்பர் ஹீரோ படங்கள்
சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் ரசிப்பார்கள். இந்த திரைப்படங்களை எடுக்க அதிகம் பணம் மற்றும் அதி நவீன தொழில்நுட்பம் தேவை என்பதால் இந்தியாவில் சூப்பர் ஹீரோ படங்கள் அதிகம் எடுக்கப்படுவதில்லை. மேலும், வெளிநாடுகளிலேயே சூப்பர் ஹீரோக்களுக்கு அதிக மசுவு இருக்கிறது.

பாலிவுட் சூப்பர் ஹீரோ க்ரிஷ்
பாலிவுட்டில் ரித்திக்ரோஷன் க்ரிஷ் சூப்பர் ஹீரோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய அளவில் வெளியாகி வெற்றி பெற்றதை அடுத்து மூன்று பாகங்கள் வந்தது. நான்காம் பாகத்தை எடுக்கும் முயற்சிகளும் நடந்து வருகிறது.

எடுபடவில்லை
அதேபோல, இயக்குனர் மிஷ்கின் ஜீவாவை வைத்து முகமூடி என்ற திரைப்படத்தை எடுத்தார் அந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத் தரவில்லை. அதேபோல சிவகார்த்திகேயன் ஹீரோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிதாக வெற்றியை பெற்றுத் தரவில்லை.

மின்னல் முரளி
பாசில் ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி உள்ள படம் மின்னல் முரளி. இதில் குரு சோமசுந்தரம், அஜு வர்கீஸ், ஹரிஸ்ரீ அசோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூப்பர் ஹீரோ பாணியில் உருவாகி உள்ள மலையாளப் படம் இதுவாகும். மிகப் பொருட்செலவில் உருவாகியுள்ள இத்திரைப்படம், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி உள்ளது. இந்தப் படத்தின் டீஸர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

நெட்ஃப்ளிக்ஸில்
இத்திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதன் உரிமையைப் பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம். செப்டம்பரில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது. இதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ள நிலையில் படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு டஜன் படங்கள்
Kaanekkaane,Vazhakku,Naaradan,Ajayante Randaam Moshanam,Vaashi, Varavu, Forensic 2, Karachi 81 என ஒரு டஜன் திரைப்படங்களையும் கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார் டோவினோ தாமஸ்.
#MinnalMurali , it’s official the ttovino super hero film will stream on #Netflix in 5 languages. https://t.co/hNfOAVo0qR
— Sreedhar Pillai (sri50) September 6, 2021
அசத்தலான வில்லன்
அபியும் நானும் திரைப்படத்தில் நடித்திருந்த டோவினோ தாமஸ், தனுஷ் மற்றும் சாய்பல்லவி இணைந்து நடித்த மாரி 2 திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தி இருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இப்படத்திற்கு, ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.
-
பாதி இங்கே இருக்கு.. மீதி எங்கே.. ஜிமிக்கி பொண்ணு வீடியோ பாடல் ரிலீஸ்.. விஜய் ரசிகர்கள் விரக்தி!
-
சிம்பு பிறந்தநாளில் பத்து தல ஃபர்ஸ்ட் சிங்கிள்.. இசையில் தெறிக்கவிடப் போகும் ஏஆர் ரஹ்மான்
-
என் கனவுக் கண்ணன்.. அரவிந்த் சாமிக்கு ஹார்ட்டீன் விட்ட குஷ்பு.. டிரெண்டாகும் க்யூட் புகைப்படங்கள்!