தியேட்டரை தொடர்ந்து அசத்தலாக ஓடிடி.,யில் ரிலீசாகும் வலிமை...எப்போ தெரியுமா?

சென்னை : கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்து விட்டதால் ஓடிடி.,யில் வலிமை ரிலீசாவதும் உறுதியாகி விட்டது. எந்த தளத்தில், எப்போது ரிலீசாக உள்ளது என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் செம உற்சாகமாகி உள்ளனர்.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு ஹெச்.வினோத், போனி கபூர், அஜித் கூட்டணியில் உருவாகி உள்ள படம் வலிமை. அதிரடி ஆக்ஷன் படமான வலிமை படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்திரா, ராஜ் ஐயப்பா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பல தடைகள், பிரச்சனைகளை கடந்து பிப்ரவரி 24 ம் தேதி தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களுடன் ரிலீஸ் செய்யப்பட்டது.

200 கோடி கிளப்பில் வலிமை

200 கோடி கிளப்பில் வலிமை

உலகம் முழுவதும் மிக அதிகமான தியேட்டர்களில் திரையிடப்பட்ட வலிமை படம் பல நெகடிவ் விமர்சனங்களை சந்தித்தது. இந்த படத்திற்கு எதிராக போலீசிலும் புகார் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அனைத்தையும் கடந்து வலிமை படம் வசூல் சாதனை படைத்தது. ரிலீசான முதல் வாரத்திலேயே 100 கோடி கிளப்பில் இணைந்தது வலிமை. சமீபத்தில் 200 கோடி கிளப்பினும் இணைந்துள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ஓடிடி.,க்கு தடை கேட்டு வழக்கு

ஓடிடி.,க்கு தடை கேட்டு வழக்கு

தியேட்டர்களை தொடர்ந்து ஓடிடி.,யிலும் வலிமை படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. வலிமை படத்தின் ஓடிடி உரிமத்தை ஜீ5 வாங்கி இருந்தது. இந்நிலையில் வலிமை படம், 2016 ம் ஆண்டு தான் தயாரித்த மெட்ரோ படத்தின் காப்பி என்றும், அந்த படத்தை ஓடிடி.,யில் ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டு தயாரிப்பாளர் ஜெய கிருஷ்ணா, சென்னை ஐகோர்ட்டில் மார்ச் 12 ம் தேதி வழக்கு தொடர்ந்தார். அதோடு, தனக்கு நஷ்ட ஈடாக ஒரு கோடி தர வேண்டும் என கேட்டிருந்தார்.

வினோத்தின் பதிலுக்கு பதில்

வினோத்தின் பதிலுக்கு பதில்

இந்த வழக்கை நேற்று விசாரித்த சென்னை ஐகோர்ட், வலிமை படத்தில் கதை திருடப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனக்கூறியதுடன், வலிமை ஓடிடி ரிலீசுக்கு தடை விதிக்கவும் மறுத்து விட்டது. இதில் பதில் மனு தாக்கல் செய்திருந்த ஹெச்.வினோத், தினமும் செய்திகளில் வரும் செயின் பணிப்பு, பைக் கேங்க் அட்டகாசம் ஆகியவற்றை வைத்து தான் வலிமை படத்தின் கதையை உருவாக்கினேன். இப்படி காப்பி ரைட்ஸ் வழக்கை போட்டு தனது பெயரை கெடுக்க முயற்சித்ததற்காக ஜெய கிருஷ்ணாவிடம் 10 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர போவதாகவும் கூறி இருந்தார்.

வலிமை ஓடிடி ரிலீஸ் எப்போ

வலிமை ஓடிடி ரிலீஸ் எப்போ

கோர்ட் வழக்கு முடிவுக்கு வந்து விட்டதால் வலிமை படத்தை ஓடிடி.,யில் ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. அதன் படி இன்று நள்ளிரவு 12 மணிக்கு, அதாவது மார்ச் 25 ம் தேதி வலிமை படத்தை ஜீ 5 தளத்தில் வெளியிட உள்ளனர். சமீபத்தில் இதே போல் 83 படத்தின் ஓடிடி., ரிலீசுக்கு தடை கேட்ட வழக்கிலும், கோர்ட் தடை விதிக்க மறுத்ததால் அன்று இரவு சரியாக 12 மணிக்கு 83 படத்தை ஓடிடி.,யில் வெளியிட்டனர். அதே போல் தற்போது வலிமை படத்தையும் ரிலீஸ் செய்ய போகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X