25வது நாள் கொண்டாட்டத்தில் வலிமை...அடுத்து என்ன பண்ண போறாங்க?

சென்னை : நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படமும் வெற்றி பெற்றுள்ளது. ஹெச்.வினோத்-அஜித்-போனி கபூர் கூட்டணி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது.

பிப்ரவரி 24 ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்ட வலிமை படம் இன்றுடன் தியேட்டரில் ரிலீசாகி 25வது நாளை நிறைவு செய்துள்ளது. 25வது நாள் கொண்டாட்டமாக தமிழகம் முழுவதும் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது. வார இறுதி நாள் என்பதால் ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகவே காணப்படுகிறது.

பவர்ஃபுல் பிளாக்பஸ்டர்

பவர்ஃபுல் பிளாக்பஸ்டர்

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எடுக்கப்பட்டு வந்த வலிமை, 100 சதவீதம் பார்வையாளர்களுடன் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. கலவையான விமர்சனங்களையே வலிமை பெற்றுள்ளது. இருந்தாலும் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்தியாவை விட வெளிநாடுகளில் வலிமை படம் பவர்ஃபுல் பிளாக்பஸ்டர் படமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

வலிமை கலெக்ஷன் எவ்வளவு

வலிமை கலெக்ஷன் எவ்வளவு

வலிமை படம் முதல் வாரத்திலேயே 100 கோடி வசூலை எட்டியது. இது வரை கிடைத்த தகவலின்படி ரிலீசாகி 22 நாட்களில் வலிமை படம் 224.80 கோடிகளை வசூல் செய்துள்ளது. இதுவரை வெளியான படங்களிலேயே ரிலீசான முதல் நாளே அதிக தொகையை வசூலித்து சாதனை படைத்த படம் வலிமை தான்.

வலிமை 25வது நாள் கொண்டாட்டம்

வலிமை 25வது நாள் கொண்டாட்டம்

வலிமை ரிலீசான நாளை வலிமை டே என சொல்லி திருவிழா போல் ரசிகர்கள் கொண்டாடினர். தற்போது 25வது நாளையும் அதே போல் போஸ்டர் அடித்தும், அஜித்தின் கட்அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்தும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்களுடன் சேர்ந்து பல தியேட்டர்களும் வலிமை படத்தின் பிரம்மாண்ட வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

வலிமை ஓடிடி ரிலீஸ் எப்போ

வலிமை ஓடிடி ரிலீஸ் எப்போ

இந்நிலையில் அடுத்ததாக வலிமை படத்தை ஓடிடி.,யில் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வலிமை படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமத்தை ஜீ 5 பெற்றுள்ளது. மார்ச் 25 ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளிலும் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். வலிமை ஓடிடி ரிலீஸ் பற்றிய மிக முக்கியமான அறிவிப்பு ஒன்று இன்று வெளியிடப்பட உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X