ப்பா.. ப்ரீ ரிலீஸ் பிசினஸில் துணிவை பின்னுக்குத் தள்ளிய வாரிசு.. ஓடிடி உரிமமும் பல கோடிக்கு விற்பனை!

சென்னை: வாரிசு மற்றும் துணிவு படங்களின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் சாதனைகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், நடிகர் அஜித்தின் துணிவு படத்தை நடிகர் விஜய்யின் வாரிசு படம் பெரிய மார்ஜினில் முந்தி இருக்கிறது.

படம் வெளியாவதற்கு முன்பே பல நூறு கோடிகளுக்கு வாரிசு படத்தின் வியாபாரம் அமோகமாக நடைபெற்று இருப்பது திரைத்துறையினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஓடிடி பிசினஸிலும் துணிவு படத்தை விட வாரிசு திரைப்படம் அதிக தொகைக்கு விற்கப்பட்டு முந்தி உள்ளது. இரண்டு படங்களின் ப்ரீ ரிலீஸ் மற்றும் ஓடிடி உரிமம் பற்றிய முழு விவரத்தை இங்கே அலசுவோம் வாருங்கள்..

480 தியேட்டர்கள்

480 தியேட்டர்கள்

தமிழ்நாட்டில் வாரிசு படத்துக்கும் துணிவு படத்துக்கும் தலா 480 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் நாளை பொறுத்தவரை வாரிசு படத்தை விட துணிவு படம் நள்ளிரவு ஒரு மணிக்கே பல திரையரங்குகளில் முதல் காட்சி போடப்படும் நிலையில், அதிக காட்சிகள் முதல் நாளில் திரையிடப்படும் என தெரிகிறது. வாரிசு படம் அதிகாலை 4 மணி முதல் திரையிடப்பட உள்ளது.

வாரிசு விற்பனை உரிமம்

வாரிசு விற்பனை உரிமம்

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு படத்தின் தமிழ்நாடு விற்பனை உரிமம் 70 கோடி ரூபாய்க்கும் கேரள விற்பனை உரிமம் 6.5 கோடிக்கும் கர்நாடக விற்பனை உரிமம் 8 கோடிக்கும் ஆந்திரா மற்றும் தெலங்கானா விற்பனை உரிமம் 25 கோடி ரூபாய்க்கும், இந்தி பெல்ட்டின் விற்பனை உரிமம் 34 கோடி ரூபாயாகவும் ஓவர்சீஸ் உரிமம் 35 கோடி ரூபாயாகவும் உள்ளது.

துணிவு விற்பனை உரிமம்

துணிவு விற்பனை உரிமம்

அதே சமயம் அஜித் குமார், மஞ்சு வாரியர் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கி உள்ள துணிவு படத்தின் தமிழ்நாடு விற்பனை உரிமம் 60 கோடி ரூபாயாகவும் கேரளா உரிமம் 2.5 கோடியாகவும் கர்நாடக உரிமம் 3.6 கோடியாகவும் தெலுங்கு உரிமம் 3 கோடி ரூபாயாகவும் வெளிநாட்டு உரிமம் 14 கோடி ரூபாயாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வாரிசு ஓடிடி

வாரிசு ஓடிடி

நடிகர் விஜய்யின் வாரிசு ஓடிடி உரிமம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்துக்கு 5 ஆண்டுகளுக்கு மட்டும் 75 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வாரிசு படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து அமேசான் பிரைமில் அந்த படம் ஸ்ட்ரீமிங் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெட்பிளிக்ஸில் துணிவு

நெட்பிளிக்ஸில் துணிவு

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அஜித்தின் துணிவு திரைப்படம் அதிக பட்சமாக 65 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நெட்பிளிக்ஸில் துணிவு திரைப்படம் ரிலீஸுக்கு பிறகு 4 வாரங்கள் கழித்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துணிவை முந்திய வாரிசு

துணிவை முந்திய வாரிசு

இதன் மூலம் ரிலீஸுக்கு முன்பே நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் 295.5 கோடி ரூபாயாகவும் அஜித்தின் துணிவு திரைப்படம் 193.6 கோடி ரூபாயாகவும் உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றால் இரு படங்களின் வசூல் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X