Bad Girl OTT: ஓடிடியில் வெளியாகும் ‘பேட் கேர்ள்‘.. எந்த தளத்தில் எப்போது தெரியுமா?

சென்னை: இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநரான இருந்த வர்ஷா பரத் இயக்கிய திரைப்படம் தான் பேட் கேர்ள். இப்படத்தில் அஞ்சலி சிவராமன் சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண் ஆகியோர் நடித்துள்ளனர் .செப்டம்பர் 5ந் தேதி தியேட்டரில் வெளியான இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

பேட் கேர்ள் திரைப்படத்தின் டீசர் வெளியான போதே இப்படம் பலவிதமான விமர்சனங்களை சந்தித்தது. இப்படத்தின் ஹீரோயினான அஞ்சலி சிவராமன் ரம்யா என்கிற ரோலில் நடிததிருந்தார். அவருக்கு படிப்பு வரவில்லை. ஆனால் படிப்பிற்கு பதிலாக பள்ளி பருவத்திலேயே தன்னுடம் படிக்கும் சக மாணவரான நலனின் மீது காதல் வருகிறது. ஆரம்பத்தில் நன்றாக சென்ற இவர்களின் காதல், பெற்றோர்களுக்கு தெரிய வர, ஆத்திரப்பட்ட பெற்றோர், வழக்கம் போல் காதலுக்கு முட்டுக்கட்டை போட்டு, ரம்யாவை வேறு ஒரு பள்ளியில் சேர்க்கின்றனர். அதுமட்டுமில்லாமல் பள்ளியில் விடுவது மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருவது என பல கெடுபிடிகளை விதிக்கின்றனர்.

Bad Girl collection
Photo Credit:

பேட் கேர்ள்: அம்மா, ரம்யாவை ஸ்கூல் விடுவதற்காக செல்லும் போதே இந்த ஸ்கூல் வரைக்கு தான் உன் பேச்சை கேட்பேன், கல்லூருக்கு சென்றுவிட்டால், என் இஷ்டத்திற்கு இருப்பேன். எனக்கு பிடித்ததை செய்வேன், உனக்கு பிடிக்காததையும் செய்வேன் என்று செல்கிறாள். அதற்கு தகுந்தது போல கல்லூரிக்கு சென்றதும் ஒருவன் மீது காதல் வந்து, அந்த காதல் கட்டில் வரை செல்கிறது. ஆனால், அவன், படிப்பு முடிந்ததும் ரம்யாவை கழட்டி விட்டுவிடுகிறான். இது பற்றி எதுவுமே தெரியாத ரம்யா, அவனையே சுற்றி சுற்றி காதலிக்கிறாள். நாளடைவில் இதை தெரிந்து கொண்ட ரம்யா அவனுடன் சண்டை போட்டு, பிரிந்து வருகிறாள். அதன் பின் ரம்யாவின் வாழ்க்கையில் என்ன நடந்தது... அவள் சரியான காதலை கண்டுப்பிடித்தாளா என்பதே பேட் கேர்ள் படத்தின் கதை.

ஓடிடி ரிலீஸ் தேதி: இந்த காலத்து பெண்களோ, ஆண்களோ தங்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி சுதந்திரமாக இருக்க வேண்டும் என நினைத்து வாழ்க்கைக்கு தேவையில்லாததை செய்து வாழ்க்கையை கெடுத்துக்கொள்கிறார்கள். அதைத்தான் இந்த படத்தின் இயக்குநர் வர்ஷா துணிச்சலுடன் சொல்லி இருக்கிறார். படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த அஞ்சலி சிவராமன் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இருந்த போதும் இந்த படம் எதிர்பார்க்கை வெற்றியை பெறமுடியாமல் போனது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகிற நவம்பர் மாதம் 4ந் தேதி வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X