OTT: பரபரப்பான அரசியல், ஆக்ஷன் திரைப்படம்.. விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் ஓடிடி ரிலீஸ் தேதி!
சென்னை: விஜய் ஆண்டனி நடித்த சக்தித் திருமகன் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. அருவி, வாழ் படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கிய இப்படத்தில் கிருபலாணி, திருப்தி ரவீந்திரா, கிருஷ்ண ஹசன், வாகை சந்திரசேகர் மற்றும் செல் முருகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய விஜய் ஆண்டனி, . நான் திரைப்படத்தின் மூலம் நடிகராக மாறினார். அதைத்தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், கோடியில் ஒருவன், ரத்தினம், திமிருபிடிச்சவன், கொலை, ஹிட்லர் என அடுத்தடுத்து வெற்றிப்படத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்த படங்கள் மினிமம் கேரண்டி என்பதால் இவர் படத்திற்கு என்றே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன்: அருண் இயக்கத்தில், விஜய் ஆண்டனியின் மனைவி ஃபாதீமா விஜய் ஆண்டனியின் தயாரிப்பில் செப்டம்பர் மாதம் 5ந் தேதி தியேட்டரில் வெளியானது சக்தித் திருமகன். படத்தின் வில்லன் அரசியல்வாதிகளிடமும், அரசு அதிகாரிகளிடம் செல்வாக்கு படைத்தவராக இருக்கிறார். அந்த செல்வாக்கை பயன்படுத்தி, நினைத்ததை சாதித்து வருகிறார். இவரிடம் பயிற்சி எடுத்தவர் தான் படத்தின் ஹீரோ விஜய் ஆண்டனி. வில்லன் பெரிய அளவில் செய்து வரும் தொழிலை, ஹீரோ விஜய் ஆண்டனி சிறிய அளவில் செய்து வருகிறார். அதாவது, அரசு வேலை வாங்கி தருவது முதல் கமிஷன் தொலையை பெற்றுத்தருவது வரை, எதுவாக இருந்தாலும், ஒரே போன் காலில் முடித்து, அதற்கான கமிஷனை எடுத்துக்கொள்கிறாள். அப்போது தான், ஹீரோவான விஜய் ஆண்டனிக்கு ஒரு பெரிய டீலை முடித்துக்கொடுக்கும் வேலை வருகிறது. இதை கச்சிதமாக விஜய் ஆண்டனி செய்து முடித்து ரூ 6000 கோடிகளுக்கு மேல் சம்பாதிக்கிறார். இந்த விஷயம் வில்லனின் காதுக்கு போக, விஜய் ஆண்டனிக்கு எதிராக வில்லன் திரும்புகிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் சக்தித் திருமகன் திரைப்படத்தின் கதை.
ஓடிடி ரிலீஸ் தேதி: விஜய் ஆண்டனி இந்த மாதிரியான அண்டர்ப்ளே செய்து தன் காரியத்தை சாதிக்கும் கேரக்டர் என்றாலே அல்வா சாப்பிடுவது போல, அசத்திவிடும் விஜய் ஆண்டனி இந்த படத்திலும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரசியம் குறையாமல் ரசிக்கும்படி இருந்ததால் படம் ரூ.10 கோடியை வசூலித்தது. தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ்தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இத்திரைப்படம் ஜிஹாட்ஸ்டாரில் அக்டோபர் 24ந் தேதி வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











