கரூர் துயரத்துல இருந்தே மீளாத விஜய் ரசிகர்கள்.. அதுக்குள்ள அவரால் இப்படி ஒரு துயரமா?

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நேற்றுத்தான் தொடங்கினார்கள், ஆனால் அதற்குள் ஏதோ, தொடங்கி இரண்டு மூன்று வாரங்கள் ஆனதைப் போல போட்டியாளர்களுக்கு இடையே சண்டை, ஒற்றுமை, முடியலடா சாமி போன்ற எண்ணங்கள் உருவாகிவிட்டது. இப்படி இருக்கும்போது, பிக் பாஸ்க்கு கண்டெண்ட் கொடுக்கும் நபராக வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் தான் இருக்கிறார். இப்படி இருக்கும்போது அவர் ஏற்கனவே வெளியே என்னவெல்லாம் செய்து கொண்டு இருந்தாரோ, அதேபோல் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று அட்ராசிட்டி செய்து வருகிறார். ஏற்கனவே சிவாஜி, சூர்யா மற்றும் தனுஷ் ரசிகர்களை வருத்தத்திற்கு ஆளாக்கிய திவாகர், தற்போது விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்களையும் காயப்படுத்தி உள்ளார்.

அதாவது, திவாகர் பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் சென்றதுமே, கண்ணாடியைப் பார்த்து, கஜினி படக் காட்சியை நடித்தார். அதன் பின்னர் சக போட்டியாளர்கள் வந்த பின்னர், அவர்களிடத்தில் கர்ணன் படத்தில் சிவாஜி நடித்த கிளைமாக்ஸ் காட்சியை நடித்துக் காட்டினார். அதேபோல் இரண்டாவது நாள் காலையில் அவர் கஜினி படத்தில் வரும் சுற்றும் விழிச் சுடரே என்ற பாடலை ஆடுகிறேன் என்று வி.ஜே. பார்வதியுடன் சேர்ந்து ஆடினார். அதேபோல் வி.ஜே. பார்வதியிடம் 3 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தனுஷ் தற்கொ* செய்து கொள்ளும் காட்சியையும் நடித்துக் காட்டினார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது.

Vijay Fans Feel Very Bad About Watermelon Star Diwakar Acting Like Vijay At Bigg Boss

இந்நிலையில் தற்போது அவர் செய்துள்ள விஷயம் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்களை அப்செட் ஆக்கியுள்ளது. அதாவது விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த படம் மாஸ்டர். இந்த படத்தின் இடைவேளை காட்சி என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றக் காட்சி. இந்த காட்சியில் விஜய் சேதுபதிக்கும் விஜய்க்கும் சரி சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். இந்தக் காட்சியை திவாகர் நடிக்கிறேன் என்று பாத்ரூமிற்குள் குளித்துக் கொண்டு இருந்தவர். வெளியே வந்து சோப்பு நுரைகளுடன் மாஸ்டர் படத்தின் இடைவேளை காட்சியில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி பேசிய வசனங்களை அவரே பேசினார்.

விஜய் ரசிகர்களுக்கு வந்த சோதனை: இது தொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த விஜய் ரசிகர்களில் சிலர் நாங்களே இன்னும் கரூர் துயரத்தில் இருந்து இன்னும் வெளியே வர முடியாமல் தவித்து வருகிறோம். அப்படி இருக்கும்போது இந்த திவாகரை கொஞ்சம் அமைதியாக இருக்கச் சொல்லுங்கள் என்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதேபோல் விஜய் சேதுபதியின் ரசிகர்களோ, " வீட்டிற்குள் அனுப்பும்போது தான் விஜய் சேதுபதி கிளிப்பிள்ளைக்கு சொல்வதைப் போல் அறிவுரை சொல்லி அனுப்பினார். ஆனால் இந்த திவாகர் நான் திருந்த மாட்டேன், மாற மாட்டேன் எனபது போல நடந்து கொள்கிறாரே. அவர்ட்ட சொல்லி யாராவது நிறுத்துங்களேன்டா" என்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X