நேத்து ஹரி ஹர வீரமல்லு.. நாளை தலைவன் தலைவி.. நெட்பிளிக்ஸை ஓரங்கட்டிய அமேசான் பிரைம்!

சென்னை: சில மாதங்களாக நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்தின் ஆதிக்கம் அதிகமாக இருந்த நிலையில், தற்போது மீண்டும் அமேசான் பிரைம் தொடர்ந்து நல்ல நல்ல படங்களாக இறக்கி வருகிறது. அமேசான் பிரைமில் வெளியான 3பிஹெச்கே படத்தை இந்த மாதம் பலரும் பார்த்து ரசித்தனர். இந்நிலையில், இந்த வாரம் அடுத்தடுத்து பெரிய படங்களை ஓடிடியில் வெளியிட்டு வருகிறது அமேசான் பிரைம்.

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் கடந்த மாதம் ஜூலை 25ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. டூரிஸ்ட் ஃபேமிலி படத்தைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி நிறைய லாபத்தை கொடுக்கும் படமாக மாறியது.

Vijay Sethupathi s Thalaivan Thalaivi will stream from Tommorrow on Amazon Prime

மகாராஜா படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி நடித்த ஏஸ் திரைப்படம் தோல்விப் படமாக மாறிய நிலையில், அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை இந்த படம் கொடுத்து மீண்டும் அவரை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

பாலியல் புகார்: விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடத் தொடங்கிய உடனே அவர் குறித்து பாலியல் தொல்லை புகார் ஒன்று கிளம்பி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ரம்யா மோகன் என்கிற பெண் எக்ஸ் தளத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் கேரவனுக்கு வர 2 லட்சம் கொடுப்பார் என்றும் ஒரு பெண்ணை நீண்ட வருடங்களாக பாலியல் தொல்லைக் கொடுத்து பயன்படுத்தி வந்தார். தற்போது அவர் மறுவாழ்வு மையத்தில் இருக்கிறார் என பதிவிட்டு இருந்தார். இந்த பகீர் குற்றச்சாட்டு வைரலான நிலையில், அதெல்லாம் சுத்தப் பொய் என்றும் தன்னை பற்றி தெரிந்தவர்களுக்கு இது வெறும் பொய் என்பது தெரியும் என்றும் தனது படத்தை ஓடவிடாமல் தடுக்க நடக்கும் சதி என்றும் சட்டப்படி இதை எதிர்கொள்வேன் என்றும் கூறியிருந்தார்.

தலைவன் தலைவி வசூல்: சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், ஆர்.கே. சுரேஷ், தீபா, சரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தலைவன் தலைவி திரைப்படம் அதிகபட்சமாக உலகளவில் 83.6 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சாக்னிக் வெப்சைட் தெரிவித்துள்ளது. டூரிஸ்ட் ஃபேமிலி வசூலை தலைவன் தலைவி முந்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஓடிடி ரிலீஸ்: அமேசான் பிரைமில் நேற்று பவன் கல்யாண் நடித்த ஹரிஹர வீர மல்லு படம் வெளியாகி உள்ள நிலையில், ஆகஸ்ட் 22ம் தேதியான நாளை விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்த குடும்ப படமான தலைவன் தலைவி திரைப்படம் வெளியாகிறது. ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான மாமன் படத்தை போல தலைவன் தலைவி படமும் ஓடிடியில் நிறைய ரசிகர்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஜா திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி கொடுத்த நிலையில், இந்த படம் அமேசான் பிரைமுக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி நடித்த பிசாசு 2, ட்ரெயின் உள்ளிட்ட படங்கள் எப்போது வெளியாகும் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. பூரி ஜெகநாத் இயக்கத்தில் புதிய படத்தில் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X