ஓடிடியில் வெளியான விக்ரம் படம்.. நடிகர் புகழ் என்ன அட்டகாசம் பண்றாரு பாருங்க!

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் கடந்த மாதம் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது விக்ரம் படம்.

4 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான இந்தப் படத்திற்கு சிறப்பாக எதிர்பார்ப்பு காணப்பட்டது.

அந்த எதிர்பார்ப்பை சரியாக பூர்த்தி செய்தது விக்ரம். இந்தப் படத்தை கமலின் ரசிகராக லோகேஷ் கனகராஜ் செதுக்கியிருந்தார்.

கமலின் விக்ரம் படம்

கமலின் விக்ரம் படம்

நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், சூர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மாதம் 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது விக்ரம் படம். கமல் நடிப்பில் கடந்த 1986ல் வெளியான விக்ரம் என்ற மாஸ் படத்தின் தொடர்ச்சியாக வெளியான இந்த படமும் ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தாக அமைந்தது.

சிறப்பான முயற்சி

சிறப்பான முயற்சி

படத்தின் காட்சி அமைப்புகள் மற்றும் திரைக்கதையை மிகுந்த கவனத்துடன் லோகேஷ் கனகராஜ் உருவாக்கியிருந்தார். அவரது மெனக்கெடல் ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பாக வெளிப்பட்டது. அதற்கேற்றாற்போல சிறப்பான முயற்சிகளுக்கு எப்போதும் துணை நிற்கும் ரசிகர்கள் இந்தப் படத்தை ஒரு மாதம் கடந்தும் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

ஓடிடி வெளியீடு

ஓடிடி வெளியீடு

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் இந்தப் படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஏற்கனவே படத்தை பல முறை பார்த்தவர்களும், தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தை பார்க்க முடியாதவர்களும் தற்போது இந்த ஓடிடி ரிலீசை கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் தற்போது இந்தப் படம் வெளியாகியுள்ளது. இதையடுத்து தங்களுடைய விருப்பத்திற்குரிய ஸ்டார்கள் அதிகமாக நடித்துள்ள இந்தப் படத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தப் படம் குறைந்த நாட்களில் அதிகமான வியூசை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புகழ் கொண்டாட்டம்

புகழ் கொண்டாட்டம்

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிமூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள நடிகர் புகழ் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீசை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். தகிட தத்தித்தோம் என்று விக்ரம் படத்தை பாடும் அவர், விக்ரம் என்று கூறிக்கொண்டே எட்டி விடுகிறார். யாரை என்று பார்த்தால் அதுவும் அவரேதான்.

திரையரங்குகளிலும் சிறப்பு

திரையரங்குகளிலும் சிறப்பு

தொடர்ந்து படம் இன்றைய தினம் ஓடிடியில் வெளியானதை கூறி மகிழ்கிறார். இதுபோன்ற பிரபலங்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினரும் இந்தப் படத்தின் ஓடிடி ரிலீசை தற்போது கொண்டாட்டத்துடன் எதிர்கொண்டுள்ளனர். இந்தப் படம் தற்போது 35 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிவரும் நிலையில், ஏறக்குறைய 450 கோடி ரூபாய் வசூலை படம் உலகளவில் எட்டியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X