Bigg Boss: ஒருவாரம் அவ கூட கூத்தடிச்ச.. இப்போ நானா.. விஜே பார்வதி- கம்ருதீன் காதலா?

சென்னை: 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் நந்தினி பிக் பாஸ் வீட்டில் இருந்து தானாக வெளியேறினார். அதைத்தொடர்ந்து முதல் வாரத்திலேயே ரட்சகன் பட இயக்குனர் பிரவீன் காந்தி குறைந்த வாக்குகளை பெற்று வெளியேற்றப்பட்டார். இரண்டாம் வாரத்தில் அப்சரா வெளியேற்றப்பட்ட நிலைகள் தற்போது. பிக் பாஸ் வீட்டில் 17 போட்டியாளர்கள் உள்ளனர்.

தற்போது தொடங்கி இருக்கும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி ஒரு மார்க்கமாகவே சென்று கொண்டு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அரோராவை சுற்றி திவாகர், துஷாரா, கம்ருதீன் ஆகியோர் சுற்று கொண்டே இருந்தனர். ஆனால், அரோரா யாரை காதலிக்கிறார் என்று தெரியாத அளவிற்கு கம்ருதீனுடனும், துஷாராவுடனும் சுற்றிக்கொண்டே இருக்கிறார். அரோரா கம்ருதீனுடன் நெருங்கி பழகியதைப் பார்த்த ஆதிரை, கம்ருதீன் பற்றியும், அவருக்கு இதற்கும் முன் இருந்த உறவு பற்றி எடுத்து சொல்லி, இதற்கு மேல் அவனுடன் நெருங்கி பழகாதே அவன் இப்படிப்பட்டவன் என கூறியதால் அரோரா, கம்ருதீனுடன் பேசுவதை குறைத்துக்கொண்டார்.

Bigg Boss VJ Parvathy Kamruddin
Photo Credit:

பிக் பாஸ் சீசன் 9: இந்த விஷயம் தெரியாத கம்ருதீன் இரண்டு நாட்களாக அரோராவிடம் ஏன் பேசவில்லை என கேட்டுவந்தார். ஒரு கட்டத்தில், அரோராவிடம் பேசுவதை கம்ருதீன் நிறுத்திவிட்ட, அரோரா கதறி கதறி அழுதார். கம்ருதீன் என்னிடம் பேசவில்லை, அதுமட்டுமில்லாமல் அவன் என்னைப்பற்றி தப்பு தப்பாக பேசுகிறான் என்று வருத்தப்பட்டு அழுதார். அரோவிற்கு ஆறுதல் கூறிய ஆதிரை, நீ வெளியில் எத்தனை பேரை பார்த்து இருப்ப, இவன் எல்லாம் உனக்கு ஒரு ஆளா, அவனுக்காக அழுதுக்கிட்டு இருக்க, தூக்கிவீசிவிட்டு வேலையை பார் என்று அறிவுரைக் கூறினார்.

விஜேபார்வதி, கம்ருதீன் காதல்: இந்நிலையில் கம்ருதீனுக்கும், வி.ஜே. பார்வதிக்கும் இடையே திடுக்கென்று காதல் மலர்ந்துள்ளது. நேற்று இரவு இருவரும் தனியாக பேசி கொண்டிருந்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில், நீ அவ கூட சேர்ந்து ஆடுன ஆட்டத்துக்கு எல்லாம் கொஞ்சம் தள்ளியே நிக்கணும்... நீ யாரு, என்ன, ஏது என்பதை நான் கொஞ்சம் ஸ்கேன் செய்யணும். ஒரு வாரம் நல்ல அவ கூட ஆடிக்கிட்டு இருந்த, இப்போ ரிவர்ஸ் கீர் போட்டு என் பக்கம் வந்து இருக்க, உடனே நான் கதவை திறந்து வைத்து வாங்க சார் உட்காருங்க என்று சொல்ல வேண்டுமா? நீ என்னை பத்தி என்ன நினைச்ச.. இனிமே நீ எப்படி நடந்துக்கிற என்பதை பொறுத்துதான் எல்லாமே இருக்கு என கம்ருதீனின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டும் வகையில் விஜே பார்வதி பேசி இருக்கிறாள். இது தான் இந்த சீசனின் முதல் காதல் ஆகும். இனி கம்ருதீன், பார்வதியின் காதல் ஆட்டம் எப்படி இருக்கப்போகிறதோ என்று தெரியவில்லை.

யார், யாரை காதலிச்சா நமக்கென்ன. பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் காதல் நிச்சயம் பிரேக்கப்பில் தான் போய் முடியும். கம்ருதீன் வெளியே சென்று வேறு ஒரு பெண்ணாக பார்த்து திருமணம் செய்து கொள்வார். பார்வதி மீண்டும் மொரட்டு சிங்கிளாகவே இருப்பார். இதனால், சும்மா, இது காதலே இல்லை என்று இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X