நீங்க தான் அசின்.. பிக் பாஸ் வீட்டிலும் சூர்யாவை விடாத திவாகர்.. கஜினி பாட்டுக்கு டான்ஸ் வேற!
சென்னை: கஜினி படத்தில் சூர்யா, அசின் நடனமாடிய "சுட்டும் விழிச்சுடரே" பாட்டுக்கு பிக் பாஸ் வீட்டில் வாட்டர்மெலான் திவாகர் மற்றும் விஜே பார்வதி நடனமாடிய காட்சிகளை தற்போது எக்ஸ் தளத்தில் பிக் பாஸ் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே சூர்யா படத்துக்கே தன்னுடைய சிக்னேச்சர் ஸ்டைல் தான் ப்ரோமோஷனுக்குத் தேவைப்படுகிறது என வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர் வாய்விட்டு செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொண்ட நிலையில், அதையெல்லாம் மறந்துவிட்டு தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டில் சூர்யா பாட்டுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.

தான் ஒரு சிறந்த நடிகன் என சொல்லிக் கொண்டு அந்நியன் விக்ரம் போல நடித்துக் காட்டி காலையிலேயே பிக் பாஸ் பக்கம் போனவர்களை காண்டாக்கிய திவாகர் இப்போ சூர்யா ரசிகர்களை செம கடுப்பாக்கியுள்ளார்.
முதல் எவிக்ஷன்: கூல் சுரேஷ், ஜிபி முத்து போலவே இந்த சீசனுக்கு ஒருவர் தேவை என பிக் பாஸ் தேடி பிடித்திருக்கும் ஆள் தான் திவாகர் என்று ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். முதல் வாரத்திலேயே திவாகரை பிக் பாஸ் வீட்டில் இருந்து அனுப்பி விட வேண்டும் என பலரும் அவரை டார்கெட் செய்து வருவதும் தெளிவாகவே தெரிகிறது. ஆனால், விஜே பார்வதி வாட்டர்மெலான் திவாகருடன் ஏகப்பட்ட கன்டென்டுகளை உருவாக்க முடியும் என அவருடன் சேர்ந்துள்ளது செம ட்விஸ்ட்டாக உள்ளது.
நீங்க சூர்யா நான் பிசின்: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின் நடிப்பில் வெளியான கஜினி படத்தில் இடம்பெற்ற தர்பூசணி சாப்பிடும் போது சூர்யா சிக்னல் செய்யும் காட்சியை அப்படியே காப்பியடித்து வாட்டர்மெலான் ஸ்டார் என வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் திவாகர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக மாறிய நிலையில், நீங்க சூர்யா, நான் பிசின் நாம டான்ஸ் ஆடுவோமா என விஜே பார்வதி சுட்டும் விழிச்சுடரே பாடலுக்கு அவருடன் சேர்ந்து ஆடியுள்ளார்.
வடிவேலுவே பெட்டர்: விஜய் நடித்த போக்கிரி படத்தில் இதே பாடலுக்கு அசினுடன் வடிவேலு ஆடுவது போல ஒரு கனவு சீன் வரும். அதில், வடிவேலு கூட பெட்டராக ஆடுவார். ஆடவும், நடிக்கவும் என எந்தவொரு திறமையும் இல்லாமல் வாட்டர்மெலான் ரொம்பவே டார்ச்சர் பண்றாரு என்றும் இது பிக் பாஸ் வீடா? இல்லை மனநல மருத்துவமனையா என ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.
நீங்க தான் அசின்: ஆரம்பத்தில் திவாகரை நீங்க சூர்யா நான் பிசின் என என பார்வதி சொன்னதும், நீங்க அசின் போல அழகாத்தானே இருக்கீங்க, அப்புறம் ஏன் பிசின் என சொல்றீங்க என பிட்டு போட ஆரம்பித்து விட்டார். விஜே பார்வதி செம என்டர்டெயின்மென்ட் கிடைத்திருக்கு என திவாகருடன் ஆடி வருகிறார். அவரை கன்னத்திலேயே அறைவது போல ஆக்ஷன் பண்ண இடமெல்லாம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறது. போன சீசனில் 24 மணி நேர எவிக்ஷன் இருந்ததை போல இந்த வாரம் மிட் வீக் எவிக்ஷன் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. என்ன ஆகிறது என்று பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











