twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காசுக்கு ஏத்த தோசை இல்லை.. இதுதான் நெட்பிளிக்ஸ் இந்தியாவில் சாதிக்க முடியாததற்கு காரணமா?

    |

    சென்னை: உலகளவில் மார்க்கெட்டில் முதல் இடத்தை பிடித்துள்ள ஒடிடி தளமான நெட்பிளிக்ஸ் இந்தியாவில் முதலிடத்தை பிடிக்க பல முயற்சிகள் செய்தும் சொதப்பி வர காரணம் சரியான கன்டென்ட் இல்லை என்பது தான் என சினிமா நிபுணர்கள் அடித்து சொல்கின்றனர்.

    இந்தியாவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் 4.6 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களுடன் முதலிடத்தில் உள்ளது.

    2 கோடி சப்ஸ்கிரைபர்களை நெருங்கி விட்டது அமேசான் பிரைம். ஆனால், நெட்பிளிக்ஸ் இன்னமும் 50 லட்சம் பேருடன் தத்தளிக்க என்ன என்ன காரணங்கள் என்பது பற்றி சின்னதா ஒரு அலசல் செய்வோம்.

    என்னது...போலியா டிரைலரே ரெடி பண்ணுறாங்களா? சாந்தனு சொன்ன பகீர் தகவல் என்னது...போலியா டிரைலரே ரெடி பண்ணுறாங்களா? சாந்தனு சொன்ன பகீர் தகவல்

    உலகளவில் 20 கோடி கஸ்டமர்கள்

    உலகளவில் 20 கோடி கஸ்டமர்கள்

    கொரோனா காலத்தில் உலகம் முழுவதும் பல திரையரங்குகள் ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் நிலையில், ஒடிடி தளங்கள் தான் கஜானாவை நிரப்பி வருகின்றன. ஒடிடி தளத்தில் உலகளவில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் உலகளவில் சுமார் 20 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

    இந்தியாவில் சொதப்பல்

    இந்தியாவில் சொதப்பல்

    ஆனால், இந்தியாவில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தால் தலை தூக்கவே முடியவில்லை. கடந்த 2018ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் சிஇஓ ரீட் ஹேஷ்டிங்ஸ் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது, அடுத்த 10 கோடி கஸ்டமர்களை இந்தியாவில் இருந்து பெறப் போகிறோம் என கெத்தாக பேசினார். ஆனால், 3 ஆண்டுகள் கடந்தும் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை என சமீபத்தில் அளித்த பேட்டியில் அவரே மனம் நொந்து கூறியிருந்தார்.

    மணி ஹெய்ஸ்ட் டு ஸ்குயிட் கேம்

    மணி ஹெய்ஸ்ட் டு ஸ்குயிட் கேம்

    மணி ஹெய்ஸ்ட், நார்காஸ், ஸ்குயிட் கேம் என உலக ரசிகர்களையே கட்டி இழுத்து வந்து ஒடிடி முன் நிறுத்திய பெரிய படைப்புகளால் தான் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளம் ரசிகர்களின் ஃபேவரைட் ஆனது. ஆனால், இந்தியாவில் ஆரம்பத்தில் வெளியான சேக்ரட் கேம்ஸ் வெப் தொடரை தவிர்த்து கவனம் ஈர்க்கும் விதமான ஒரு படைப்பும் வெளியாகாததே இந்த தோல்விக்கு காரணம் என்கின்றனர்.

    ஃபிளாப் கன்டென்ட்டுகள்

    ஃபிளாப் கன்டென்ட்டுகள்

    ஜகமே தந்திரம், நவரசா என படு ஃபிளாப் ஆன தமிழ் கன்டெண்ட்டுகளும் நெட்பிளிக்ஸின் கனவை நசுக்கி விட்டன. மாதவனின் டீகப்புள்ட் தொடர் மீது குவிந்த எதிர்மரை விமர்சனங்கள் காரணமாக அந்த தொடரும் ஃபிளாப் ஆனது. மற்ற ஒடிடி நிறுவனங்களை விட அதிகமாக காசு வசூலித்தால் மட்டும் போதுமா? அதற்கான கன்டென்ட் இருக்க வேண்டாமா? அதுதான் நெட்பிளிக்ஸ் அதிகளவிலான சந்தாதாரர்களை இந்திய மார்க்கெட்டில் பெற முடியாமல் போனதற்கு காரணம் என்கின்றனர்.

    கைகொடுக்கும் படங்கள்

    கைகொடுக்கும் படங்கள்

    சமீப காலமாக நெட்பிளிக்ஸில் வெளியான தென்னிந்திய படங்களான மின்னல் முரளி, ஷியாம் சிங்கா ராய், டாக்டர் உள்ளிட்ட படங்கள் தான் ஓரளவுக்கு அந்த ஒடிடி தளத்தையே இந்தியாவில் காப்பாற்றி வருவதாகவும் கூறுகின்றனர். நல்ல கன்டென்ட்டுக்கு முதலீடு செய்தால் மட்டுமே உலக நாடுகளை கவர்ந்ததை போல இந்தியாவிலும் முன்னிலையை பெற முடியும் என்பது சினிமா நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

    சந்தாவை குறைக்கணும்

    சந்தாவை குறைக்கணும்

    சமீபத்தில் வெறும் 149 ரூபாய்க்கு மொபைலிலும் மற்றும் 199 ரூபாய்க்கு டிவியிலும் பார்க்கும் அளவுக்கு சந்தாவை குறைத்தாலும், இன்னமும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் உடன் ஒப்பிட்டுப் பார்த்தால் பல மடங்கு இதன் சந்தா அதிகமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பிக் பாஸ், ஐபிஎல் என ரியாலிட்டி ஷோக்களை கவர் செய்வது போல நெட்பிளிக்ஸும் இந்திய ரசிகர்களை கவரும் நிகழ்ச்சிகளில் முதலீடு செய்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.

    English summary
    Netflix struggling in India to grab his top market because of lack of good content to cover Indian audience. Disney Plus Hotstar and Amazon Prime top OTT platforms in India.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X