தென்னிந்திய மொழிகளில் வெளியான போஸ்டர்கள்.. அப்போ OTT ரிலீசுக்கு சாத்தியமா!?
சென்னை: கூட்டத்தில் ஒருத்தன் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வெளிவரவுள்ள அடுத்த திரைப்படம் ஜெய் பீம்.
இந்த படத்தில் நடிகர் சூர்யா வக்கீலாக கவுரவ வேடத்தில் நடிக்கிறார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
இந்த படத்தின் போஸ்டர்கள் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்களை கவர்ந்துள்ளது.

வெற்றி பெற்றது
2017ம் ஆண்டு டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் கூட்டத்தில் ஒருத்தன். சமூக அக்கறையுடன் வந்திருக்கும் லவ் - சென்டிமென்ட் நிரம்பிய படமான இது கமர்ஷியல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

வரவேற்பு கிடைத்தது
அதன் பின்னர் டி.ஜே.ஞானவேல் இருளர் பழங்குடி மக்களை சார்ந்து ஒரு முக்கிய கதையை படமாக்க உள்ளதாகவும், அதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளார் எனவும் தகவல்கள் எழும்பின. இந்நிலையில் இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதியாகி நேற்று போஸ்டர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி வரவேற்பு கிடைத்தது.

எதிர்பாராத வகையில்
யாரும் எதிர்பாராத வகையில் தென்னிந்திய மொழிகளில் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தொடர்ந்து செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகி நல்ல ஆதரவை பெற்றது. இந்த படம் OTT யில் நேரடியாக ரிலிஸ் ஆக வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.

சினிமா வட்டாரங்கள்
தென்னிந்திய மொழிகளில் போஸ்டர்கள் வெளியாகவே இந்த படம் நேரடியாக OTT யில் வெளிவர சாத்தியம் உள்ளது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ப்ரைம் வீடியோவில் வெளிவரும் என சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











