twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாளை நமதே - விமர்சனம்

    By Staff
    |

    Thanusha with Pradeep
    நடிப்பு: பிரதீப், சர்வானந்த், மணிவண்ணன், எம்எஸ் பாஸ்கர், ஆசிஷ் வித்யார்த்தி, ராஜன் பி தேவ், தனுஷா, கார்த்திகா மற்றும் கிரண்

    இசை: பரத்வாஜ்
    பாடல்கள்: பழனிபாரதி
    ஒளிப்பதிவு: ராஜரத்னம்
    இயக்கம்: வினயன்
    தயாரிப்பு: ஜோஸ் மாவேலி

    கல்தோன்றி முன் தோன்றா காலத்திலிருந்து தமிழ் சமூகத்திலும் சினிமாவிலும் நிலவும் குடிசைவாசி Vs கோபுரவாசி கதைதான் இதுவும்.

    நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர் ஆசிஷ் வித்யார்த்தி. ஒருநாள் திடீர் ஞானோதயம் பெற்று தனக்கு சொந்தமான ரூ.1800 கோடியை ஏழைகளுக்கு எழுதி வைப்பதாக அறிவித்து, அதை நிறைவேற்றவும் மணிவண்ணன், பிரதீப் ஆகிய இரண்டு ஏழைகளையே நியமித்துவிட்டுக் காணாமல் போகிறார்.

    இந்தப் பணத்தை அபகரிக்க தணிகலபரணி, ராஜன் பி தேவ் தலைமையிலான அரசியல்வாதிகள் முயற்சிக்கிறார்கள்.

    இடையில் மணிவண்ணனின் வளர்ப்புப் பெண்ணை சுற்றிச் சுற்றி வருகிறார் பணக்கார இளைஞர் சர்வானந்த். இதையறிந்த அவரது அரசியல்வாதி அப்பா கடுமையாக எதிர்ப்பதோடு அந்தப் பெண்ணை தனது ஆட்களை விட்டு கண்ணெதிரே கற்பழிக்க விடுகிறார்.

    சொத்துக்களை எழுதிவைத்துக் காணாமல் போன ஆசிஷ் வித்யார்த்தி என்ன ஆனார்?.

    பணம் பறிக்கும் அரசியல்வாதிகளின் முயற்சி பலித்ததா?
    கற்பை இழந்த அந்தப் பெண் என்ன ஆனார்?
    ஏழை - பணக்கார காதல் நிறைவேறியதா?

    போன்ற கேள்விகளுக்கான விடைகளை நீங்களும் திரையில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    ஆரம்பத்தில் பெரிய பணக்காரர் ஒருவர் ரூ.1800 கேடியை ஏழை மக்களுக்கு எழுதி வைப்பதாக கதை துவங்கும் போது அட, என நிமிர்ந்து உட்கார வைத்தாலும், 'இதுதான் கதை, இதற்கான சம்பவங்கள்தான் இவை' என்றில்லாமல் எக்கச்சக்கமான நிகழ்வுகளுடன் திரைக்கதை தடுமாறுவதால் சுவாரஸ்யம் குறைந்து விடுகிறது.

    ஆனால் ஆசிஷ் வித்யார்த்தி எப்படி பணக்காரர் ஆனார் என்கிற அந்த ப்ளாஷ்பேக் விறுவிறு.

    மணிவண்ணன் சிறப்பாகச் செய்துள்ளார். கிட்டத்தட்ட கதையின் நாயகன் மாதிரி வருகிறார். பிரதீப் இயல்பாக நடித்துள்ளார்.

    ஏழைக் காதலியாக வரும் தனுஷாவை பள்ளியில் படிக்கும் பெண்ணாகக் காட்டும்போது தோற்றம் அதற்கு கைகொடுக்கவில்லை. ஆனால் சாதாரண பெண்ணாக வரும்போது மனதில் பதிகிறார்.

    விலைமாதுவாக சரசுவாக வருவது யார்... அட கிரண்!.

    சர்வானந்துக்கு நடிக்க பெரிதாக வாய்ப்பில்லை. ஆனால் கொஞ்சம் முயன்றால் தமிழில் பெரிய அளவில் வர வாய்ப்புண்டு.

    ராஜன் பி தேவ், தணிகலபரணி, ஆசிஷ் வித்யார்த்தி என முப்பெரும் வில்லன்கள். தங்கள் 'தப்பான' பாத்திரங்களை சரியாகவே செய்திருக்கிறார்கள்!.

    பரத்வாஜின் இசையில் ஒரு பாடல் ஓகே. பின்னணி இசை பரவாயில்லை.

    அரசியல் சூதாட்டங்கள், பிச்சைக்காரர்களின் சோகம், ஏழை - பணக்காரன் காதல், பிச்சைக்காரர்களுக்குள்ளேயே உள்ள கயமைத்தனம்... இப்படி பல பிரச்சினைகளையும் ஒரே கதைக்குள் திணிக்க முயற்சித்ததைத் தவிர்த்திருக்கலாம் இயக்குநர் வினயன்.

    அதனால்தான் படம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் போய்விடுகிறது!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X