Just In
- 11 min ago
சனம் ஷெட்டியின் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. அவங்களே சொல்லியிருக்காங்க.. என்னன்னு பாருங்க!
- 33 min ago
'கே.ஜி.எஃப்' இயக்குனரின் 'சலார்' படத்தில் .. பிரபாஸூக்கு வில்லன் ஆகிறார், நடிகர் விஜய் சேதுபதி?
- 41 min ago
ஹிப்ஹாப் ஆதியின் "அன்பறிவு" படப்பிடிப்பு ஆரம்பம்!
- 55 min ago
பிரம்மாண்ட அரங்கில் தொடங்கியது ‘கலியுகம்’ படப்பிடிப்பு.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
Don't Miss!
- Sports
உண்மையிலேயே பெரிய வெற்றியாளர்... மலிங்காவை ரொம்ப மிஸ் செய்வோம்... ரோகித் சர்மா நெகிழ்ச்சி
- Automobiles
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
- Finance
தூள் கிளப்பிய பஜாஜ் ஆட்டோ.. லாபம் 23% அதிகரிப்பு.. செம ஏற்றத்தில் பங்கு விலை..!
- News
எங்க மகளுக்கு சுகபிரசவம் ஆகாது.. சிசேரியன்தான்னு டாக்டர் சொல்லிட்டார்.. அப்புறம் தான்..!
- Lifestyle
ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை ஏன் தவிா்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நகரம் - விமர்சனம்
இசை: தமன்
ஒளிப்பதிவு: செல்லதுரை
தயாரிப்பு: குஷ்பு சுந்தர்
இயக்கம்: சுந்தர் சி
கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர் சி இயக்கியுள்ள படம் நகரம். நகைச்சுவை முலாமுடன் அதிரடி பொழுதுபோக்கைத் தருவதில், தனது பழைய டச்சை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
அவருக்கு பெரிதும் கை கொடுத்திருக்கிறது வைகைப் புயலின் காஷுவலான காமெடி!
கதைக்காக பெரிதாக மெனக்கெடவில்லை சுந்தர். ஏற்கெனவே அவர் நடித்த தலைநகரம் படத்தின் இன்னொரு வடிவம்தான் இந்தப் படம்.
கேட் செல்வம் (சுந்தர் சி) ஒரு ரவுடி. ஒரு குற்றத்துக்காக 5 வருட தண்டனையுடன் சிறைக்குப் போகும் செல்வம், தனது பழைய நண்பனும் உள்ளூர் இன்ஸ்பெக்டருமான சக்கரைப் பாண்டி (போஸ் வெங்கட்) உதவியோடு விடுதலையாகிறான்.
போதும் இந்த குற்ற வாழ்க்கை என முடிவு செய்கிறான். ஆனால் அவனை மீண்டும் குற்றங்களில் ஈடுபடுத்தவே பார்க்கிறது சமூகம். குறிப்பாக சக்கரைப் பாண்டி தனது சட்டவிரோத காரியங்களுக்கு செல்வத்தை கருவியாக்குகிறான்.
அப்போதுதான் பாரதி (அனுயா) என்ற துணை நடிகைய சந்திக்கிறான் செல்வம். அவளது நல்ல குணத்திலும் அழகிலும் மனதைப் பறிகொடுக்கிறான்.
இதற்கிடையே, செல்வத்தின் பழைய முதலாளி பாய் (ஜி சீனிவாசன்)-க்கும் சக்கரைப் பாண்டிக்கும் ஒரு டீலில் பகை முற்றுகிறது. சக்கரைப் பாண்டியைக் காக்க செல்வம் முனைகிறபோதுதான் ஒரு அதிரவைக்கும் உண்மை செல்வத்துக்குத் தெரிகிறது... அது என்ன என்பது சுவாரஸ்யமான க்ளைமாக்ஸ்.
கேட் செல்வமாக சுந்தர் சி. முந்தைய படங்களைக் காட்டிலும் வெகு இயல்பாக நடித்திருக்கிறார். பெரிய ஆக்ஷன் ஹீரோவாகவும் தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை. அடக்கி, அதேநேரம் தேவையான அளவு வேகம் காட்டி மனதைக் கவர்கிறார்.
அனுயா அசத்தியிருக்கிறார். அழகு, கிளாமர், நடிப்பு மூன்றிலும் ஸ்கோர் பண்ணுகிறார்.
போஸ் வெங்கட்டும், ஜி சீனிவாசனும் அசத்தியிருக்கிறார்கள். குறிப்பாக பழம்பெரும் நடிகரான் ஜீ சீனிவாசனின் முக பாவங்கள், இளம் வில்லன் நடிகர்களுக்கு ப்ரீ ட்யூஷன்!
படத்தின் பெரிய ப்ளஸ் வடிவேலுதான் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன... ஸ்டைல் பாண்டியாக மனிதர் கலக்கியிருக்கிறார். இன்னும் பல மாதங்களுக்கு இந்த ஸ்டைல்பாண்டிதான் டிவி சேனல்களில் நீக்கமற நிறைந்திருக்கப் போகிறார்!
படத்தில் சில இடங்களில் லாஜிக் மிஸ்ஸிங் என்றாலும், ரசிக்க அது தடையாக இல்லை. அதேபோல படத்தின் நீளத்தை சற்றே குறைக்கலாம்.
தமன் இசையில் இரண்டு பாடல்கள் இனிமை. இளம் இசையமைப்பாளர் என்றாலும், பின்னணி இசையைக் கையாள்வதில் நல்ல முதிர்ச்சி. கீப் இட் அப்!
துறைமுகத்துக்குள் இயங்கும் மாபியா உலகை படம் பிடித்துக் காட்டியதில் இயக்குநர் சுந்தருக்கு நிகரான பங்களிப்பு செல்லதுரையின் காமிராவுக்கு. ஒரிஜினலாகக் காட்ட மெனக்கெட்டிருக்கிறார்.
பழைய கதைதான்... ஆனாலும் பழக்கப்பட்ட குதிரையில் சவாரி செய்வதுபோல வெகு பத்திரமாக இலக்கைத் தொட்டிருக்கிறார் இயக்குநர்.
...நரகமல்ல!