twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாயகன்- பட விமர்சனம்

    By Staff
    |

    Nayagan
    சொதப்பலாக இருக்கப் போகிறது என எதிர்பார்த்துக்கொண்டு போகும் ஒரு கிரிக்கெட் ஆட்டம் எதிர்பாராத விறுவிறுப்புடன் அமைந்துவிட்டால் எப்படி இருக்கும்... நாயகன் படமும் அப்படித்தான்!

    நட்சத்திர நடிகர்களின் அதிரடி ஆக்ஷன் படங்களுக்கு இணையாக கலக்கி இருக்கிறார்கள் படத்தின் இரண்டு நாயகர்களான ஜே.கே.ரித்தீஷும் ரமணாவும். இரண்டு ஹீரோக்களுக்குமே சரியான சமமான வாய்ப்பு.

    ஆங்கிலப் படமான செல்லுலர் கதையை தமிழுக்கேற்ற காரம்-மணம் சேர்த்து அதிரடி மசாலாவாக்கி இருக்கிறார்கள். (ஏற்கெனவே வேகம் என்ற பெயரில் எஸ்.வி. சேகரின் மகன் அஸ்வின் சேகர் நடித்த கதைதான்)

    குரு (ரித்தீஷ்) ஒரு அதிரடி போலீஸ் அதிகாரி. டிஜிபியின் வளர்ப்பு மகன். அந்த தைரியமும் கடமை உணர்வும் எந்த அநியாயத்தையும் துணிச்சலாகத் தட்டிக் கேட்க வைக்கிறது அவரை. நகரில் திடீர் திடீரென்று இளம் பெண்கள் காணாமல் போகும் மர்மத்தையும், போதை மருந்து கடத்தும் கும்பலையும் கண்டுபிடிக்க சபதமேற்கிறார்.

    இன்னொரு பக்கம் சக்தி (ரமணா) என்ற இளைஞர் தன் காதலியோடு ஊரைவிட்டே தப்பியோடி வரும்போது, அவருக்கு ஒரு போன்கால் வருகிறது. அதில் டாக்டர் சந்தியா என்பவர் தன்னை யாரோ கடத்தி வைத்திருப்பதாகத் தகவல் கூறி காப்பாற்ற வேண்டுகிறார். ஒரு உடைந்த போனிலிருந்து பேசுவதால், மீண்டும் போன்காலை கட் பண்ணிவிட்டு தொடர முடியாத நிலை. எனவே சந்தியாவைக் காப்பாற்ற ஓடிக்கொண்டே இருக்கிறார் சக்தி.

    அதிரடி குருவும், ஆக்ஷன் சக்தியும் எப்படி இந்த சமூக விரோத கும்பலை வெளியுலகுக்குத் தெரிய வைக்கிறார்கள், சந்தியாவை மீட்கிறார்கள் என்பது கிளைமாக்ஸ்.

    ஆரம்பக் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை நல்ல விறுவிறுப்புடன் திரைக்கதை அமைத்திருக்கிறார் புது இயக்குநர் சரவண சக்தி.

    போலீஸ் அதிகாரி வேடம் என்பதற்காக ஓவராக அலட்டிக் கொள்ளாமல் கட்டுப்பட்டுடன் ரித்தீஷ் நடித்திருப்பதுதான் அந்த பாத்திரத்தின் மீதான மதிப்பைக் கூட்டுகிறது. தன்னைக் கிண்டலடித்து வந்த மீடியாக்களுக்கு தனக்கு நடிக்கவும் தெரியும் என காட்டியிருக்கிறார்.

    இன்னொரு நாயகன் ரமணாவும் துடிப்புடன் நடித்துள்ளார்.

    அவரது ஜோடியாக வரும் கீர்த்தி சாவ்லாவுக்கு பெரிய வேலையில்லை. டாக்டர் சந்தியாவாக வரும் சங்கீதா இயல்பாகச் செய்திருக்கிறார்.

    ஆனந்தராஜ் சரியான வில்லன். இரட்டை வேடம் வேறு. கலக்கியிருக்கிறார். ஸ்ரீமன், ராதாரவி, விஜயபாபு அனைவருமே படத்துக்கான தங்கள் பங்களிப்பை சரியாகச் செய்துள்ளனர்.

    அதிரடி கதைக்கேற்ப கலக்கல் இசை, குத்து பாடல்கள்.

    ரித்தீஷ்-ரமணாவின் இந்த நாயகன் ஒரிஜினல் நாயகன் படத்தின் பெயரைக் கெடுக்காமலிருந்ததே பெரிய விஷயம்!.

    இரண்டரை மணிநேர பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் தந்திருக்கிறார்கள்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X