twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதல் இடம் - சினிமா விமர்சனம்

    By Shankar
    |

    Vidharth and Kavitha Nair
    நடிப்பு: விசார்த், கவிதா, இளவரசு, மயில்சாமி, கிஷோர், 'யோகி' தேவராஜ்
    இசை: டி இமான்
    இயக்கம்: ஆர் குமரன்
    தயாரிப்பு: எம் சரவணன், எம் எஸ் குகன்

    ஏவிஎம் தயாரிப்பில் வந்திருக்கும் 175 வது படம் முதல் இடம். தலைப்புக்கேற்ற இடத்தைப் பிடித்திருக்கிறதா என்பதை கடைசியில் பார்ப்போம்!

    மகேஷ் என்கிற எமகுஞ்சுக்கு (விதார்த்) வாழ்க்கையில் ஒரே லட்சியம் தஞ்சை காவல் நிலையத்தில் மூன்றாவது இடத்தில் உள்ள தன் பெயர் முதலிடத்துக்கு வரவேண்டும் என்பது.

    இதற்காக அல்லும் பகலும் 'அயராது உழைக்கிறார்', தனது நண்பர்கள் மயில்சாமி, அப்புக்குட்டி துணையுடன். ஒருநாள் ப்ளஸ்டூ மாணவியான மைதிலி (கவிதா)யைச் சந்திக்கிறார். அடுத்த இரு சந்திப்புகளில் இருவரும் காதலர்களாகிவிடுகிறார்கள்.

    இதற்கிடையில் உள்ளூர் தாதா கிஷோர் (இவர் பெயர்தான் காவல் நிலையத்தில் முதலிடத்தில் உள்ளது. இந்த இடத்துக்கு வரத்தான் ஹீரோ விரும்புவதாக கதை) ஜெயிலிலிருந்து வெளியாகிறார். அரசியலில் எம்எல்ஏவாகத் துடிக்கும் இவரது தம்பி திருமுருகனுக்கும் நமோ நாராயணனுக்கும் கட்சிக்குள் கோஷ்டித் தகராறு. இந்த தகராறில் விதார்த் சிக்கிக் கொள்கிறார்.

    இந்த சிக்கலிலிருந்து அவர் எப்படி மீள்கிறார், வெறும் ரவுடியாக இருக்கும் அவர் எப்படி காதலியை கைப்பிடித்து முதல் இடத்தை அடைகிறார் என்பது மீதிக் கதை.

    கதையில் புதுமை என்று எதுவும் இல்லை. எத்தனையோ படங்களில் பார்த்த ரவுடிகள், அதில் ஒருவர் நல்லவர், உள்ளூர் அரசியல் தகராறு, இடையில் ஹீரோவுக்கு மிடில் கிளாஸ் பெண் மீது காதல்...

    நாயகன் விதார்த்துக்கு இதில் ஆல்ரவுண்டர் வேடம். அசப்பில் விக்ரமின் க்ளோன் மாதிரி தெரிகிறார். நகைச்சுவை, ஆக்ஷன், ரொமான்ஸ், செண்டிமெண்ட் என நடிப்பில் அடுத்த கட்டத்துக்குப் போயிருக்கிறார். நடிப்பைப் பொறுத்தவரை அவருக்கே இந்தப் படத்தில் முதலிடம்.

    நாயகி கவிதா சில காட்சிகளில் கவனிக்க வைக்கிறார். சில காட்சிகளில் அவரிடம் விதார்த்தை விட முதிர்ச்சி... முகத்தில்தான். இயக்குநர் கவனித்திருக்க வேண்டும்.

    மயில்சாமி, அப்புக்குட்டி காமெடி படத்துக்கு ஒன்றல்ல... டபுள் ப்ளஸ்.

    கிஷோர், யோகி தேவராஜ், திருமுருகன், நமோ நாராயணன் என அனைவரும் கதைக்குத் தேவையான நடிப்பை கச்சிதமாகக் கொடுத்திருக்கிறார்கள். இளவரசு கைதட்டல்களை அள்ளுகிறார், பெண்ணைப் பெற்ற அப்பாக்கள் சார்பில் ஒரு வசனம் பேசுவாரே, அந்த காட்சியில்!

    பார்ப்பவர்களுக்கு படம் ஜாலியாக இருந்தால் மட்டும் போதும் என முடிவு செய்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். நோக்கம் சரிதான். ஆனால், இன்னும் திருத்தமாக காட்சிகளை அமைத்திருக்கலாம். நகைச்சுவைதான் படத்தின் பிரதானம் என்றாகிவிட்ட பிறகு, அதற்குத் தோதாக காட்சிகளை அமைத்திருந்தால் நிச்சயம் முதலிடம் கிடைத்திருக்கும்!

    English summary
    Muthal Idam is the 175th film of legendary production house AVM. Vidarth plays the lead role and Kavitha plays his love interest in this time pass movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X