»   »  6 அத்தியாயம் விமர்சனம் #6AthiyayamReview

6 அத்தியாயம் விமர்சனம் #6AthiyayamReview

Posted By:
Subscribe to Oneindia Tamil
6 அத்தியாயம்.. 6 படைப்பு..!!

குறும்படங்களை ஒன்றிணைத்து ஒரு முழு படமாக வெளியிடும் ஆந்தாலஜி முயற்சிகள் தமிழ் சினிமாவிலும் சமீபகாலமாக நடக்கின்றன. கார்த்திக் சுப்புராஜைத் தொடர்ந்து ஷங்கர் தியாகராஜன் கேபிள் சங்கரும் அப்படி ஒரு முயற்சி எடுத்திருக்கிறார்கள். வெவ்வேறு ஜானர்களாக கோர்த்து ரசிகர்களை குழப்பாமல் ஹாரர் என்னும் ஒரே ஜானரில் 6 குறும்படங்களை வெவ்வேறு படக்குழு மூலம் எடுத்து இணைத்திருக்கிறார்கள். குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த முயற்சி வெற்றி அடைந்ததா? பார்ப்போம்.

சூப்பர் ஹீரோ

சூப்பர் ஹீரோ

கேபிள் ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் தமன், எஸ் எஸ் ஸ்டான்லி நடித்திருக்கிறார்கள். தன்னை சூப்பர் ஹீரோ என்று சொல்லி ஒருவன் மனநல மருத்துவரை சந்திக்கிறான். அவனைப் பரிசோதித்து உண்மையை கண்டுபிடிக்க மருத்துவர் எடுக்கும் முயற்சி நம்மை அதிர்ச்சி அடைய வைக்கிறது. எண்ட்லெஸ் முடிவு எனப்படும் முடிவை வைத்திருக்கிறார் கேபிள் ஷங்கர். ஸ்லோவாக ஆரம்பித்து முடிக்கும்போது த்ரில்லாக்கி உள்ளார். இந்த வகை படங்களில் தொடக்கத்துக்கேற்ற ஒரு படம்தான். இன்னும் கூட செலவு செய்திருக்கலாம்.

இனி தொடரும்

இனி தொடரும்

பாலியல் வன்முறைக்கு பலியான ஒரு குழந்தை ஆவியின் பழிவாங்கல். பாலியல் வன்முறையை காட்டியிருந்த விதமும், முடிவும் நன்றாக இருந்தது.


மிசை

மிசை

காதலின் தாமதத்தால் அவசரப்படும் ஒருவன் ஆவியின் கதை. படம் வேறு எதையோ பேசிக்கொண்டிருக்கிறதே என்று நினைக்கவைத்து முடிவில் வேறு ஒரு விஷயத்தைச் சொன்ன விதம் அருமை. தொடக்க காட்சியிலேயே முடிவுக்கான ட்விஸ்டை சொல்லியிருப்பதை தவிர்த்திருக்கலாம். அஜயன் பாலாவின் திரைக்கதையும் பொன் காசிராஜனின் கேமராவும் பலம்.


அனாமிகா

அனாமிகா

ஹாரராக தொடங்கி சைக்காலிஜிகல் த்ரில்லர் ஆக்கியிருக்கிறார்கள். நல்ல மேக்கிங். இயக்குநராக சுரேஷுக்கு நல்ல விசிட்டிங் கார்டு இந்தப் படம்.


சூப் பாய் சுப்ரமணி

சூப் பாய் சுப்ரமணி

ஆறு படங்களிலேயே ரசிகர்கள் கைதட்டி ரசிப்பது சுப்ரமணியை தான். சின்ன சின்ன பன்ச்களால் தனி படம் அளவுக்கு ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ். இதையே ஒரு படமாக்கியிருக்கலாம் ப்ரோ. நல்ல எதிர்காலம் இருக்கு உங்களுக்கு.


சித்திரம் கொல்லுதடி

சித்திரம் கொல்லுதடி

இந்த தொகுப்பின் புதையல். நல்ல திரைக்கதையும் நம்ப வைக்கும் மேக்கிங்கும் அசத்துகிறது. ஸ்ரீதர் வெங்கடேசனுக்கு பாராட்டுகள். இன்னும் சுவாரஸ்யமான கதைகளாகத் தேர்ந்தெடுத்து அவற்றை ஒரே க்ளைமாக்ஸில் இணைத்திருந்தால் ஒரு முழுமையான படம் பார்த்த உணர்வு இருந்திருக்கும்.


English summary
Review of 6 Athiyayam, an anthology of 6 short films directed by 6 directors.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil