For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  777 Charlie Review: நாய்க்கு நன்றியுணர்ச்சி மட்டுமில்ல.. நட்பும் இருக்கும்.. 777 சார்லி விமர்சனம்!

  |

  Rating:
  3.5/5

  நடிகர்கள்: ரக்‌ஷித் ஷெட்டி, சார்லி

  இசை: நுபின் பால்

  இயக்கம்: கிரண் ராஜ்

  சென்னை: கிட்டத்தட்ட சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருவி பட இயக்குநர் அருண் பிரபு இயக்கிய வாழ் படத்தின் கதை தான் இந்த 777 சார்லி.

  Recommended Video

  777 Charlie Movie Review| Rakshit Shetty | Yessa ? Bussa ?*Hollywood

  ஒரு சிறுவனுடன் உலகின் பல அற்புதமான இடங்களுக்கு அவர் டிராவல் செய்வார். அதே போல இந்த படத்தில் ஒரு நாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற நாயகன் செல்லும் பயணம் தான் படத்தின் கதை.

  ஆனால், நாய்க்கும் மனிதனுக்கும் இடையே இருக்கும் நட்பை காட்டிய விதத்தில் இயக்குநர் மெய்சிலிர்க்க வைத்து விட்டார்.

  Suzhal Review: யாரையும் சந்தேகிக்காதே.. யாரையும் நம்பாதே.. புஷ்கர் - காயத்ரியின் சுழல் விமர்சனம்! Suzhal Review: யாரையும் சந்தேகிக்காதே.. யாரையும் நம்பாதே.. புஷ்கர் - காயத்ரியின் சுழல் விமர்சனம்!

  என்ன கதை

  என்ன கதை

  சிறு வயதிலேயே விபத்து ஒன்றில் பெற்றோரையும் குடும்பத்தையும் இழந்து விடுகிறார் நாயகன் தர்மா (ரக்‌ஷித் ஷெட்டி). தனிமையில் தன் போக்கில் வளர்ந்து வரும் தர்மாவிடம் வந்து ஒட்டிக் கொள்கிறது ஒரு குட்டி பெண் நாய். ஆனால், அவனுக்கு அது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. ஆனாலும், அவனை விடாமல் அவன் கூடவே பழக ஆரம்பிக்க அவனும் அதை தன்னுடன் இருக்க அனுமதிக்கிறான். ஒரு கட்டத்தில் அந்த நாய்க்கு புற்றுநோய் என்பது தெரியவர அதன் கடைசி ஆசையை நிறைவேற்ற நாயகன் மேற்கொள்ளும் பயணம் தான் இந்த 777 சார்லி படத்தின் கதை.

  நாய் படங்கள்

  நாய் படங்கள்

  பொதுவாகவே செல்லப்பிராணிகளை குறிப்பாக நாய்களை வைத்து இயக்கும் படங்கள் லோ பட்ஜெட்டில் உருவாக்கப்படும். ஆனால், ஹாலிவுட் படங்களுக்கு இணையாக அதற்கான பட்ஜெட்டை ஒதுக்கி பிரம்மாண்டமாக காட்சிப்படுத்திய நிலையில், தான் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையையே இந்த படம் கண் கலங்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் கிரண்ராஜும் கண்டிப்பாக ஒரு டாக் லவ்வராகத்தான் இருப்பார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். லாபரடார் வகை நாய்க்கு பயிற்சியளித்த பிரமோத்த்க்கும் பாராட்டுக்கள் குவிந்துள்ளன.

  டிராவல் படம்

  டிராவல் படம்

  புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது செல்லப்பிராணியின் கடைசி ஆசையை நிறைவேற்ற பனி பிரேதசங்களுக்கு அழைத்துச் சென்று சாகசங்களை செய்யும் காட்சிகள் எல்லாம் நாமும் அவர்களுடன் டிராவல் செய்வது போன்ற உணர்வை கடத்திச் செல்கிறது. ஒளிப்பதிவாளார் அரவிந்த் கஷ்யப் அட்டகாசப்படுத்தி உள்ளார்.

  பிளஸ்

  பிளஸ்

  ஹீரோ ரக்‌ஷித் ஷெட்டியுடன் நட்பாக பழகும் அந்த நாய் ஒரு காட்சியில் கூட அது ஏதோ செய்வதை வைத்து படம் எடுத்திருக்கிறார்கள் என்கிற உணர்வையே தராமல் தேர்ச்சி பெற்ற நடிகர்கள் கதாபாத்திரமாகவே வாழும் உணர்வை ரசிகர்களுக்கு கொடுத்து, தங்களின் செல்லப் பிராணிகளை நினைத்து கலங்க வைத்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. பின்னணி இசை, புரொடக்‌ஷன் டீம் என பலரும் நேர்த்தியாக பணியாற்றி உள்ளது தெரிகிறது. கன்னட திரையுலகில் கேஜிஎஃப் 2 படத்திற்கு பிறகு இந்த ஆண்டு இன்னுமொரு தரமான படமாக 777 சார்லி தலை நிமிர்ந்து நிற்கிறது என தாராளமாக சொல்லலாம்.

  மைனஸ்

  இந்த படத்திற்கு வில்லன் வைக்க வேண்டும் என்கிற ரீதியில், பேராசையுடன் நாய்களை ப்ரீட் செய்யும் ஒரு சினிமாத்தனமான வில்லன் வரும் காட்சிகள் அந்த அளவுக்கு ஒட்டவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும், படத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருந்தால் க்ரிஸ்ப்பாக அமைந்திருக்கும். மற்றபடி, நாய்க்குட்டி பிரியர்களை மட்டுமின்றி வெகுஜன ரசிகர்களையும் இந்த படம் நிச்சயம் என்டர்டெயின் செய்யும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

  English summary
  777 Charlie Review in Tamil (777 சார்லி விமர்சனம்): Hero go for a beautiful journey for his pet dog who was suffered by cancer.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X