»   »  ஆதி ஆடியோ வெளியீடு விஜய் நடிக்கும் ஆதி படத்தின் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர் விக்ரம் கேசட்டை வெளியிட நடிகைசோனியா அகர்வால் பெற்றுக் கொண்டார்.இந்த விழாவில் விக்ரம் பேசியதாவது:படத்திற்கு படம் அழகாகிக் கொண்டே போகிறார் விஜய், ஆதியில் ரொம்ப அழகாக உள்ளார். அந்த ரகசியம் என்ன வென்றுஎங்களுக்கும் சொல்ல வேண்டும். கில்லி படத்தின் ஆடியோ கேசட்டை நான் தான் வெளியிட்டேன். படம் சில்வர் ஜூப்ளிகொண்டாடியது.விஜய், விக்ரம், வித்யாசாகர் என்று மூன்று வி அந்தப் படத்தில் சேர்ந்தது போல், இந்த படத்திலும் மூன்று வி சேர்ந்திருக்கிறோம்.கில்லியை போல இந்த படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். அந்த வெற்றி விழாவில் நானும் கலந்து கொள்வேன் என்றார்விக்ரம். படத்தின் இயக்குனர் ரமணா பேசும் போது, ரீமேக் படம் இயக்க வேண்டும் என்று எஸ்.ஏ. சந்திரசேகர் சொன்னார். வளர்ந்து வரும்நடிகர் நடித்த படமே தெலுங்கில் பெரிய ஹிட்டாகி விடுகிறது. இந்த படத்தில் விஜய் நடித்தால் எவ்வளவு வரவேற்பு இருக்கும்என்பதை உணர்ந்தேன்.பிறகு இந்த படத்திற்காக புதிய பட நிறுவனத்தை எஸ்.ஏ.சி அவர்கள் தொடங்கினார். ஆதி படம் பார்த்துவிட்டு நல்லாஎடுத்திருக்கே என்று பாராட்டிய பிறகு தான் எனக்கு நிம்மதி வந்தது. இப்படம் எனக்கு ஒரு புனர் ஜென்மம். மேலும் பல புதியஇயக்குனர்களுக்கு எஸ்.ஏ.சி அவர்கள் வாய்ப்பு தர உள்ளார் என்றார் ரமணா.விழாவுக்கு பட அதிபர் ஏவி.எம். பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். எஸ்.ஏ.சந்திரசேகரன் வரவேற்றார். விஜய்யின்தாயாரும் படத்தின் தயாரிப்பாளருமான ஷோபா, பைவ் ஸ்டார் ஆடியோ கல்யாண், தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஏ.எல்.அழகப்பன், வினியோகஸ்தர் அன்புச் செழியன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.நடிகர் விஜய் தனது மனைவியோடு லண்டனில் ஓய்வில் இருப்பதால் இந்த விழாவில் பங்கேற்கவில்லை.

ஆதி ஆடியோ வெளியீடு விஜய் நடிக்கும் ஆதி படத்தின் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர் விக்ரம் கேசட்டை வெளியிட நடிகைசோனியா அகர்வால் பெற்றுக் கொண்டார்.இந்த விழாவில் விக்ரம் பேசியதாவது:படத்திற்கு படம் அழகாகிக் கொண்டே போகிறார் விஜய், ஆதியில் ரொம்ப அழகாக உள்ளார். அந்த ரகசியம் என்ன வென்றுஎங்களுக்கும் சொல்ல வேண்டும். கில்லி படத்தின் ஆடியோ கேசட்டை நான் தான் வெளியிட்டேன். படம் சில்வர் ஜூப்ளிகொண்டாடியது.விஜய், விக்ரம், வித்யாசாகர் என்று மூன்று வி அந்தப் படத்தில் சேர்ந்தது போல், இந்த படத்திலும் மூன்று வி சேர்ந்திருக்கிறோம்.கில்லியை போல இந்த படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். அந்த வெற்றி விழாவில் நானும் கலந்து கொள்வேன் என்றார்விக்ரம். படத்தின் இயக்குனர் ரமணா பேசும் போது, ரீமேக் படம் இயக்க வேண்டும் என்று எஸ்.ஏ. சந்திரசேகர் சொன்னார். வளர்ந்து வரும்நடிகர் நடித்த படமே தெலுங்கில் பெரிய ஹிட்டாகி விடுகிறது. இந்த படத்தில் விஜய் நடித்தால் எவ்வளவு வரவேற்பு இருக்கும்என்பதை உணர்ந்தேன்.பிறகு இந்த படத்திற்காக புதிய பட நிறுவனத்தை எஸ்.ஏ.சி அவர்கள் தொடங்கினார். ஆதி படம் பார்த்துவிட்டு நல்லாஎடுத்திருக்கே என்று பாராட்டிய பிறகு தான் எனக்கு நிம்மதி வந்தது. இப்படம் எனக்கு ஒரு புனர் ஜென்மம். மேலும் பல புதியஇயக்குனர்களுக்கு எஸ்.ஏ.சி அவர்கள் வாய்ப்பு தர உள்ளார் என்றார் ரமணா.விழாவுக்கு பட அதிபர் ஏவி.எம். பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். எஸ்.ஏ.சந்திரசேகரன் வரவேற்றார். விஜய்யின்தாயாரும் படத்தின் தயாரிப்பாளருமான ஷோபா, பைவ் ஸ்டார் ஆடியோ கல்யாண், தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஏ.எல்.அழகப்பன், வினியோகஸ்தர் அன்புச் செழியன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.நடிகர் விஜய் தனது மனைவியோடு லண்டனில் ஓய்வில் இருப்பதால் இந்த விழாவில் பங்கேற்கவில்லை.

Subscribe to Oneindia Tamil

விஜய் நடிக்கும் ஆதி படத்தின் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர் விக்ரம் கேசட்டை வெளியிட நடிகைசோனியா அகர்வால் பெற்றுக் கொண்டார்.

இந்த விழாவில் விக்ரம் பேசியதாவது:

படத்திற்கு படம் அழகாகிக் கொண்டே போகிறார் விஜய், ஆதியில் ரொம்ப அழகாக உள்ளார். அந்த ரகசியம் என்ன வென்றுஎங்களுக்கும் சொல்ல வேண்டும். கில்லி படத்தின் ஆடியோ கேசட்டை நான் தான் வெளியிட்டேன். படம் சில்வர் ஜூப்ளிகொண்டாடியது.


விஜய், விக்ரம், வித்யாசாகர் என்று மூன்று வி அந்தப் படத்தில் சேர்ந்தது போல், இந்த படத்திலும் மூன்று வி சேர்ந்திருக்கிறோம்.கில்லியை போல இந்த படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். அந்த வெற்றி விழாவில் நானும் கலந்து கொள்வேன் என்றார்விக்ரம்.

படத்தின் இயக்குனர் ரமணா பேசும் போது, ரீமேக் படம் இயக்க வேண்டும் என்று எஸ்.ஏ. சந்திரசேகர் சொன்னார். வளர்ந்து வரும்நடிகர் நடித்த படமே தெலுங்கில் பெரிய ஹிட்டாகி விடுகிறது. இந்த படத்தில் விஜய் நடித்தால் எவ்வளவு வரவேற்பு இருக்கும்என்பதை உணர்ந்தேன்.

பிறகு இந்த படத்திற்காக புதிய பட நிறுவனத்தை எஸ்.ஏ.சி அவர்கள் தொடங்கினார். ஆதி படம் பார்த்துவிட்டு நல்லாஎடுத்திருக்கே என்று பாராட்டிய பிறகு தான் எனக்கு நிம்மதி வந்தது. இப்படம் எனக்கு ஒரு புனர் ஜென்மம். மேலும் பல புதியஇயக்குனர்களுக்கு எஸ்.ஏ.சி அவர்கள் வாய்ப்பு தர உள்ளார் என்றார் ரமணா.


விழாவுக்கு பட அதிபர் ஏவி.எம். பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். எஸ்.ஏ.சந்திரசேகரன் வரவேற்றார். விஜய்யின்தாயாரும் படத்தின் தயாரிப்பாளருமான ஷோபா, பைவ் ஸ்டார் ஆடியோ கல்யாண், தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஏ.எல்.அழகப்பன், வினியோகஸ்தர் அன்புச் செழியன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

நடிகர் விஜய் தனது மனைவியோடு லண்டனில் ஓய்வில் இருப்பதால் இந்த விழாவில் பங்கேற்கவில்லை.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil