twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அச்சம் என்பது மடமையடா விமர்சனம்

    By Shankar
    |

    Rating:
    2.0/5
    Star Cast: சிம்பு, மஞ்சிமா மோகன், டேனியல் பாலாஜி
    Director: கவுதம் மேனன்

    எஸ் ஷங்கர்

    நடிகர்கள்: சிம்பு எனும் எஸ்டிஆர், மஞ்சிமா மோகன்

    ஒளிப்பதிவு: டான் மெக்ஆர்தர்

    இசை: ஏஆர் ரஹ்மான்

    தயாரிப்பு: ??

    இயக்கம்: கவுதம் மேனன்

    'ரொம்ப கஷ்டப்பட்டு சினிமா எடுக்கறோம்... ஆனா நீங்கள்லாம் கேக்கறதப் பார்த்தா ஏன்டா எடுத்தோம்னு கஷ்டமா இருக்கு' என்று சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் கவுதம் மேனன் பேசியிருந்தார்.

    சரியான திட்டமிடல், பக்காவான திரைக்கதை, பொருத்தமான நட்சத்திரங்கள் என அனைத்தையும் ஒருமுகப்படுத்தி படம் எடுத்து, சரியான காலத்தில் வெளியிடுவது இன்றைக்கு யாருக்குமே பெரும் சவால்தான்.

    Achcham yenbadhu Madaimayada Review

    ஆனால் அதற்கான வாய்ப்புகள் கிடைத்தும் சொதப்புவதைத்தான் பொறுக்க முடிவதில்லை. அச்சம் என்பது மடமையடா படம் அப்படியான சொதப்பல்களில் ஒன்று.

    வழக்கம்போல தங்கையின் தோழி மஞ்சிமாவைப் பார்த்தவுடன் பிடித்துப்போய் உருகி உருகி காதலிக்கிறார் சிம்பு. ஆனால் வெளிப்படையாகச் சொல்ல தைரியமில்லாமல் சும்மா பேசிக் கொண்டே இருக்கிறார். நண்பனுடன் பைக் டூர் கிளம்பத் திட்டமிட்டு, அதை மஞ்சிமாவிடம் சொல்கிறார். எதிர்ப்பார்த்த மாதிரியே, அந்த பைக் டூரில் நண்பனுக்கு பதில் மஞ்சிமா. அப்புறமென்ன... புதுப் புது இடங்கள்... பெண் தோழியுடன் பைக் ட்ரிப் என அப்படியே இடைவேளை வரை மிதப்பாகப் போகிறது கதை. அப்படியே கோலாப்பூர் பக்கம் பைக் போய்க் கொண்டிருக்கும்போது, (எதிர்ப்பார்த்த மாதிரியே) ஒரு லாரி வந்து மோதுகிறது பைக் மீது. மரண விளிம்புக்குப் போகும் தருவாயில் மஞ்சிமாவிடம் காதலைச் சொல்கிறார்.

    Achcham yenbadhu Madaimayada Review

    கோலாப்பூரில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் சிம்பு விழித்துப் பார்த்தால் தோழியைக் காணவில்லை. திடீரென்று ஒரு நாள் தோழியிடமிருந்து போன். அவர் குடும்பத்தையே கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சிப்பதாக. உடனடியாக நண்பனை வரவழைத்து, மஞ்சிமா குடும்பம் தங்கியுள்ள மருத்துவமனைக்குப் போய்....

    அதற்குப் பிறகு அவர்கள் காதல் என்ன ஆனது? சிம்பு என்ன செய்கிறார்? மஞ்சிமா குடும்பம் என்ன கதியானது? அதற்கான காரணம் என்ன? என்பதெல்லாம் வழக்கமான கௌதம் மேனன் படம்.

    கதை விண்ணைத் தாண்டி வருவாயா ஸ்டைலில்தான் ஆரம்பிக்கிறது. மெல்ல மெல்ல அது மகாராஷ்ட்ரா பார்டர் வரை போய், தாதாக்கள், போலீஸ் வில்லன்கள், துப்பாக்கிச் சண்டை, சிம்புவின் இரண்டரை வருட தலைமறைவு வாழ்க்கை, மொத்த க்ளைமாக்ஸையும் சிம்புவின் வாய்ஸ் ஓவரிலேயே முடித்துவிட்டிருக்கிறார் கவுதம் மேனன். சிம்புவிடம் கால்ஷீட் பெறுவதில் அவர் பட்ட கஷ்டம் புரிகிறது. கவுதம் மேனன் படங்களிலேயே இப்படியொரு மொக்கையான க்ளைமாக்ஸைப் பார்த்ததே இல்லை.

    சிம்புவை கொஞ்சம் அல்ல, ரொம்பவே அடக்கி வாசிக்க வைத்திருக்கிறார் கவுதம். அதற்காகவே அவரைப் பாராட்ட வேண்டும். மற்ற படங்களை விட இதில் அவர் நன்றாகவே நடித்திருக்கிறார். ஆனால் ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் அவரது சைஸ் மாறிக் கொண்டே இருப்பதுதான் பெரும் உறுத்தல்.

    மஞ்சிமா மோகன், கொஞ்சம் அனுஷ்கா சர்மாவின் சாயல். காற்றில் கூந்தல் அலைய சிரித்துக் கொண்டே இருக்கிறார் ஆரம்பத்தில். பின்னர் முகத்தில் ரத்தத் தீற்றல்களுடன் செயற்கையான பயத்தைக் காட்டுகிறார். அது நடிப்பு என்பது எளிதாகத் தெரிந்துவிடுகிறது.

    ஒரு காட்சியில் மருத்துவமனையிலிருந்து சாதாரண சுடிதாரில் வெளியில் வருவார் மஞ்சிமா. அதற்கு பார்வையாளர்களின் கமெண்ட்... 'இவ ஹீரோயினா... ஆஸ்பத்திரி ஆயாவா...' கவுண்டரை விட ஆபத்தான 'கமெண்டர்கள்' இந்த ரசிகர்கள்!

    ஹீரோ ஹீரோயின் தவிர்த்து வேறு யாரும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. வேண்டுமானால் அந்த கோலாப்பூர் ஏரியா டாக்டரின் தவிப்பான நடிப்பைக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். மொட்டைத் தலை வில்லன் (பாபா செகல்), எத்தனை முறை சுட்டாலும் எழுந்து வந்து கொண்டேருக்கும் டேனியல், நண்பனுக்காக உயிரை விட அந்த நண்பன்... யாரும் மனசில் நிற்கவில்லை. இன்னும் நன்றாக காட்சிகளைச் சிந்தித்திருக்கலாம்.

    டான் மெக்ஆர்தரின் ஒளிப்பதிவு சில இடங்களில் பளிச். குறிப்பாக அந்த கன்னியாகுமரி, கேரளா காட்சிகள். சில இடங்களில் ஏகத்துக்கும் டல்... இடைவேளைக்குப் பிறகு பாதி நேரம் இருட்டு. அந்த ரயில் சண்டை பொறுமைக்கு ஒரு சோதனை!

    ஆரம்பத்தில் அந்த பைக் ரோட் ட்ரிப் காட்சிகளில் கொஞ்சம் கவிதையும் காதலும் வழிகின்றன. அதில் ஏ ஆர் ரஹ்மானுக்கும் பங்குண்டு. ஆனால் பிந்தைய காட்சிகளில் ரஹ்மானும் அம்பேல்!

    ரஹ்மானின் இசையில் அவளும் நானும், தள்ளிப் போகாதே பாடல்கள் கேட்க வைக்கின்றன. அவளும் நானும் பார்க்கவும் வைக்கிறது!

    பாவம் ரஜினிகாந்த். அவர் பெயரை எதற்கு இந்த மாதிரி படங்களிலெல்லாம் பயன்படுத்தி சங்கடப்பட வைக்கிறார்களோ... மிடில!

    அழகாக துவங்கும் பைக் ரோட் ட்ரிப் ஜவ்வாக இழுத்து நம்மை எரிச்சல் அடைய வைக்கிறது.

    English summary
    Achcham Yenbathu Madamaiyada is Goutham Menon's another unimpressive attempt with lots of cleshes
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X