twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    19(1)(a) Movie review : புரட்சி எழுத்தாளராக விஜய்சேதுபதி..19(1)(a) படம் எப்படி இருக்கு?

    |

    Rating:
    3.0/5

    நடிகர்கள்: விஜய்சேதுபதி, நித்யாமேனன்,இந்திரஜித்

    இயக்குநர் : வி.எஸ் இந்து

    இசை : கோவிந்த் வசந்தா

    சென்னை : மலையாளத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள 19(1)(a) திரைப்படம் இன்று டிஸ்னி பிளஸ் ஹாஸ்டாரில் வெளியாகி உள்ளது. விஜய்சேதுபதி இதற்கு முன் 2019 ஆம் ஆண்டு, மார்க்கோனி மத்தாய் என்னும் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். இது இவரின் இரண்டாவது படமாகும்.

    இப்படத்தில் நித்யா மேனன், இந்திரஜித் சுகுமாரன், இந்திரன்ஸ் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். இந்திய அரசியலமைப்பில் உள்ள 19(1)(a) என்கிற பிரிவு, இந்த படத்தின் டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது.

    தனிமனிதன் கருத்து சுதந்திரத்தை மேற்கொள்காட்டி இயக்குநர் இந்து கதையை அழகான நகர்த்தி இருக்கிறார். ஓடிடியில் இன்று வெளியாகி உள்ள19(1)(a) திரைப்படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாமா?

    தி க்ரே மேன் படத்தோட மேக்கிங் வீடியோ வெளியீடு.. என்னமா மிரட்டறாரு தனுஷ்! தி க்ரே மேன் படத்தோட மேக்கிங் வீடியோ வெளியீடு.. என்னமா மிரட்டறாரு தனுஷ்!

    புரட்சி எழுத்தாளர்

    புரட்சி எழுத்தாளர்

    தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு புரட்சி எழுத்தாளராக கௌரி சங்கர் என்ற கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். தனிமனிதனின் கருத்து சுதந்திரத்தில் அரசும், அரசியல் கட்சிகளும் எப்படி சீரழித்து நாட்டை குட்டிசுவராக்கி வருகிறார்கள் என்பதை கௌரிசங்கர் (விஜய் சேதுபதி) நெற்றிபொட்டில் அடிப்பது போல தனது புத்தகத்தில் எழுதிசர்ச்சையில் சிக்குகிறார். இதையடுத்து,கருப்பினத்தவருக்கு எதிராக நடந்த கொலைகள் குறித்து 'கருப்பு' என்ற பெயரில் ஓர் புத்தகத்தை எழுதிவருகிறார். இந்த புத்தகம் வெளியாகக்கூடாது என அவரை சுற்றிபல சதிநடக்கிறது.

    சாதாரண பெண்

    சாதாரண பெண்

    வாழ்க்கையை வெறுமையுடன் போராடும் ஒரு சாதாரண குடும்ப பெண் கதாபாத்திரத்தில் நித்யாமேனன் நடித்துள்ளார். அவருக்கு என்று சொந்தமாக இருப்பது ஒரு ஸ்கூட்டரும், ஒரு DTP சென்டர் கடையும் தான். இந்த கடைக்கு வரும் விஜய்சேதுபதி, தன்னுடைய 'கருப்பு' கதையை பிரிண்ட் செய்துவைக்கும்படி கூறிவிட்டு செல்கிறார். ஆனால், அவர் திரும்பவரவில்லை. அப்போது தான் செய்தியில் எழுத்தாளர் கௌரிசங்கர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி நித்யா மேனனுக்கு தெரிகிறது.

    இறுதியில் என்ன ஆனது

    இறுதியில் என்ன ஆனது

    இதனால், நித்யா மேனன் அதிர்ச்சி அடைகிறார். கௌரிசங்கர் ஏன் கொல்லப்பட்டார் அதற்கான காரணம் என்ன என்பதை தேடித்தேடி அலைகிறார். மேலும் கௌரியின் புத்தகங்களை படித்து அவரின் தீவிர ரசிகையாகவே மாறிவிடுகிறார் நித்யா மேனன். எழுத்தாளர் கௌரிசங்கரின் கனவை நிறைவேற்ற "கருப்பு" புத்தகம் வெளியில் வர முயற்சி செய்கிறார் நித்யா மேனம். இறுதியில் அந்த புத்தகம் வெளியில் வந்ததா? இல்லை என்பது தான் கதை ?

    சலனம் இல்லாத நதிபோல

    சலனம் இல்லாத நதிபோல

    விஜய்சேதுபதி மற்றும் நித்யா மேனன் இருவருமே தங்களின் கதாபாத்திரத்தின் தன்மையை உயர்ந்து நேர்த்தியாக நடித்துள்ளனர். படத்தை பார்த்த பிறகு பார்வையாளர்களின் மனதை நிரப்பும் அளவுக்கு அந்த கதாபாத்திரத்தை ஆழமாக சித்தரித்து இருக்கிறார் இயக்குநர் இந்து. அதே போல கதை தொடக்கம் முதல் இறுதிவரை எந்தவிதமான சலனமும் இல்லாமல் அழகான நதிபோல செல்கிறது.

    பிளஸ்

    பிளஸ்

    இந்திரஜி,இந்திரன்ஸ், ஸ்ரீகாந்த் முரளி,பகத் மானுவல், தீபக் ஆகியோர் நடத்தில் குறைந்த நேரமே வந்தாலும்,அழுத்தமான ரோல். முதல் படத்திலேயே ஒரு வித்தியாசமான சப்ஜெட்டை கையில் எடுத்து துணிச்சலுடன் கையாண்டுள்ளார் இயக்குநர். மனேஷ் மாதவின் ஒளிப்பதிவுட், கோவிந்த் வசந்தாவின் இசையும் படத்திற்கு பிளஸ்ஸாக அமைந்துள்ளது.

    English summary
    Versatile actor Vijay Sethupathi, who did movies in almost all languages is now playing a main lead in the Malayalam movie titled “19(1)(a)”. Malayalam movie 19(1)(a) tamil review
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X