twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Ammu Movie Review: கணவன் மனைவியை அடிக்கலாமா?..அம்மு படம் கற்றுத்தரும் பாடம்!

    |

    நடிகர்கள் : ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நவீன் சந்திரா, பாபி சிம்ஹா,

    இயக்குனர்: சாருகேஷ் சேகர்

    இசை: பரத் சங்கர்

    Rating:
    3.0/5

    இயக்குநர் சாருகேஷ் சேகர் இயக்கத்தில் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியானத் திரைப்படம் அம்மு.

    பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் தைரியம் மிகுந்த படகோட்டியாக நடித்திருந்த ஐஸ்வர்யா லெக்ஷ்மி, அம்மு படத்தில் அழகான நடிப்பை வெளிப்படுத்தி விடுகிறார்.

    அம்மு

    அம்மு

    தென்றலாக வீசும் பெண் புயலாக மாறினாள் என்னவெல்லாம் செய்வாள் என்பதுதான் அம்மு படம் கற்றுத்தரும் பாடம். அம்மு (ஐஸ்வர்யா லெக்ஷ்மி), ரவீந்திரநாத் ரோல் (நவீன் சந்திரா) ஒரு போலீஸ் அதிகாரி. இருவருக்கும் கதையில் தொடங்கத்திலேயே திருமணம் நடக்கிறது. ரொமான்ஸ், காதல் என அழகாக வாழ்க்கை செல்ல, ஒரு நாள் கணவனின் உண்மை முகம் தெரிகிறது. அடிப்பது புருஷ லட்சணம் என்ற மிதப்போடும் சுற்றும் ரவீந்திரநாத் தினமும் மனைவியை அடித்து துன்புறுத்துகிறார்.

    அம்மு படத்தின் கதை

    அம்மு படத்தின் கதை

    நாளுக்கு நாள் அதிகரிக்கும் கணவனின் அடியால் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பலவீணமான அம்மு தனது கணவனுக்கு சரியான படத்தை கற்றுக்கொடுக்க காத்திருக்கிறாள். இந்த நேரத்தில், இரண்டு கொலை செய்த குற்றவாளி பிரபு (சிம்ஹா) தனது தங்கையின் திருமணத்தை பார்க்க பரோலில் வெளியில் வர, அவருடன் நட்பு ஏற்படுத்திக்கொள்ளும் அம்மு, பரோல் கைதியை தப்பவைத்து கணவனை பழிவாங்க திட்டம் தீட்டுகிறாள். அம்முவின் திட்டம் நிறைவேறியதா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.

    பிளஸ்

    பிளஸ்

    இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் அம்மு கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லெக்ஷிமியின் நடிப்பு தான். கணவரிடத்தில் அன்பை பொழியும் போதும், கணவனிடம் அடிவாங்கி என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணீரும் கம்பளையுமா நிற்கும் போதும் ஸ்கோரை அள்ளி விடுகிறார். குறிப்பாக கணவன் மீது இருக்கும் ஆத்திரத்தை காயப்போட்ட சண்டையில் காட்டி, கத்தி அழும் காட்சியில் உண்மையில் பின்னி இருப்பார் ஐஸ்வர்யா லெக்ஷிமி.

    மைனஸ்

    மைனஸ்

    குற்றவாளியாக வரும் பாபி சிம்ஹா இடைவேளைக்கு பிறகே வந்தாலும், கதைக்கு பொருந்தி உள்ளார். இருந்தாலும் அவர் கதாபாத்திரத்திற்கு இன்னும் அழுத்தத்தை கொடுத்து இருக்கலாம். அதேபோல, இசை மனதில் பதியவில்லை. எடிட்டிங்கும் ஒளிப்பதிவிலும் இயக்குநர் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். அதே போல அகங்காரம் பிடித்த கணவராக வரும் நவீன் சந்திரா அனைத்து இடத்திலும் ஒரே லுக், அவர் இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாம்.

    மனம் கவர்ந்த வசனம்

    மனம் கவர்ந்த வசனம்

    இயக்குநர் சாருகேஷ் சேகர் சமுதாயத்திற்கு தேவையான ஒரு கதையை கொடுத்து இருக்கிறார். கல்லானாலும் கணவன்.. புல்லானாலும் புருஷன் அவன் எது செய்தாலும், அமைதியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தப்பு செய்தால் அது யாராக இருந்தாலும் துணிந்து நில் என்பது போன்ற வசனங்கள் மனதை கவரும் வகையில், சிந்திக்கும் வகையிலும் இருந்தது. மொத்தத்தில் அம்மு திரைப்படம் சமுதாயத்தில் பல பெண்கள் சந்தித்து வரும் வன்முறையை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது.

    English summary
    Aishwarya Lekshmi's Ammu is streaming on Amazon Prime Video.Ammu movie review in tamil
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X