Don't Miss!
- Automobiles
இந்த காருக்கு வெயில்தான் எரிபொருள்.. கரண்ட், பெட்ரோல், டீசல்னு எதுமே தேவையில்ல! காச சூப்பரா மிச்சப்படுத்தலாம்!
- Finance
மீண்டும் இந்தியா.. டெஸ்லா-வுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் 3 மாநிலங்கள்..!
- News
பொது கழிப்பறைகளுக்குகு QR Code! சுத்தம் இல்லாமல் உள்ளதா? அப்ப உடனே நீங்க செய்ய வேண்டியது இது தான்!
- Lifestyle
கும்பத்தில் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் பிப்ரவரியில் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க போகுது...
- Technology
Vijay Sales Mega Republic Day sale: ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவிகளை கம்மி விலையில் வாங்க இதுதான் சரியான நேரம்.!
- Sports
"3 தனித்தனி அணிகள்.. ஆனாலும் ஒரு சிக்கல்".. பிசிசிஐ திட்டம் குறித்து கபில் தேவ் அறிவுரை.. அடேங்கப்பா
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
Thunivu Review: அடேங்கப்பா.. இப்படியொரு ஸ்பீடில் அஜித் படமா? துணிவு விமர்சனம் இதோ!
நடிகர்கள்: அஜித் குமார், மஞ்சு வாரியர், சமுத்திரகனி
இசை: ஜிப்ரான்
இயக்கம்: எச். வினோத்
சென்னை: வலிமை படம் ரொம்பவே ஸ்லோவாக பல இடங்களில் சென்றது தான் அந்த படத்தின் மீது விழுந்த விமர்சனங்களுக்கு காரணமாக அமைந்தது. அதே போல நடிகர் அஜித்தின் க்ளீன் ஷேவ் லுக்கும் விமர்சிக்கப்பட்டது.
ஆனால், இங்கே துணிவு படத்தில் டெரர் லுக்கில் படம் முழுக்க பட்டாசாய் நடித்து அசத்தி தனது ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு ஒரு என்டர்டெயின் மென்ட் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு மனுஷன் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்.
ஷங்கர் ஸ்டைல் கதையை வைத்துக் கொண்டு போனி கபூரின் கம்மி பட்ஜெட்டில் இயக்குநர் எச். வினோத் எந்த அளவுக்கு துணிவு படத்தை முழுமையான படமாக மாற்றி உள்ளார் என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..
Thunivu Twitter Review: தூள் கிளப்பியதா துணிவு? அஜித்தின் நம்பிக்கையை காப்பாற்றினாரா எச். வினோத்?

துணிவு கதை
எல்லாரும் அஜித் தான் ஒரு கேங்கை வைத்துக் கொண்டு வங்கியை கொள்ளையடிக்கிறார் என ட்ரெய்லரை பார்த்து விட்டு நினைத்து இருப்பார்கள். ஆரம்பத்திலேயே சர்ப்ரைஸ் ட்விஸ்ட்டாக நடிகர் வீராவின் கேங் ஒரு வங்கியை கொள்ளையடிக்க செல்ல அங்கே ஏற்கனவே அந்த வங்கி மிஸ்ட்ரி மேன் அஜித் குமாரால் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். வங்கியில் நடக்கும் மோசடிகளை எதிர்த்து மக்களுக்கான விழிப்புணர்வை கொடுக்கும் விதமாக வில்லனாக மாறி உள்ளார் அஜித்குமார். முதல் பாதி முழுக்கவே தோட்டாக்கள் தெறிக்க 1.5x ஸ்பீடில் படம் நகர்கிறது. இரண்டாம் பாதியில் எதற்காக இந்த வங்கிக் கொள்ளையில் அஜித் ஈடுபடுகிறார் என்கிற கருத்தை முன் வைத்து பட்டாசான கிளைமேக்ஸ் உடன் முடித்திருக்கிறார் இயக்குநர் எச். வினோத்.

விமர்சனங்களுக்கு பதிலடி
நடிகர் அஜித் படம் முழுக்க கண்ணாடியை அணிந்து கொண்டு நடப்பதை தவிர வேறு எதையும் செய்ய மாட்டார் என்றும் டான்ஸ் ஆடத் தெரியாது, காமெடி பண்ண தெரியாது, ஆக்ஷன் காட்சிகளில் வேகம் இருக்காது, பஜன்லால் சேட் என ஏகப்பட்ட விமர்சனங்கள் வலிமை படத்தில் எழுந்த நிலையில், அதற்கெல்லாம் ஒரு மரண அடி கொடுத்து மீண்டும் தான் யார் என்பதை ரசிகர்களுக்காக நிரூபித்துக் காட்டி இருக்கிறார் அஜித்.

மின்னல் வேக முதல் பாதி
வாரிசு படத்தை விட துணிவு படத்தின் நீளம் குறைவு தான். இந்த வேகத்தில் கதை செல்லவில்லை என்றால் லேக் அடித்து விடும் என்பதால் எடிட்டர் விஜய் வேலுக்குட்டி ஒவ்வொரு இடத்திலும் தேவையில்லாத காட்சிகளே வேண்டாம் என மனசாட்சியே இல்லாமல் வெட்டித் தள்ளியிருப்பது தெளிவாக தெரிகிறது. முதல் பாதியில் அந்த வங்கி செட்டில் நடக்கும் அந்த டபுள் ஹெய்ஸ்ட் காட்சி அதனை கட்டுப்படுத்த போராடும் கமிஷ்னர் சமுத்திரகனியின் நடிப்பு அபாரம்.

மினி பட்ஜெட்டில் ஷங்கர் படம்
ஜெண்டில்மேன் படத்தில் ஷங்கர் தொட்ட வலிமையான கருத்தை போலவே இயக்குநர் எச். வினோத் வங்கிகள் செய்யும் மோசடியால் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எப்படி பாதிக்கப்படுகின்றனர் என்பதை இரண்டாம் பாதியில் வசனங்கள் மற்றும் காட்சிகளின் வழியாக உணர்த்தி உள்ளார். ஆனால், மினி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி உள்ள நிலையில், சில இடங்களில் சிஜி சொதப்பல்கள், சில கதாபாத்திரங்களுக்கான பின்னணி உள்ளிட்ட பல விஷயங்கள் தெளிவாக ரசிகர்களுக்கு உணர்த்துவதை தவற விட்டுள்ளது.

பலம்
ஒன் மேன் ஷோவாக நடிகர் அஜித் துணிவு படத்தை தன் தோளில் சுமந்து சென்றுள்ளார். அவரை இப்படி பார்க்க ரொம்ப நாட்களாக ஏங்கித் தவித்த ரசிகர்களுக்கு சரியான ட்ரீட்டை இயக்குநர் எச். வினோத் கொடுத்துள்ளார். நாயகியாக நடித்துள்ள மஞ்சு வாரியருக்கு செம மாஸ் சீன்ஸ் வைத்து கிளைமேக்ஸில் தெறிக்கவிட்டுள்ளனர். மோசமான வங்கி அதிகாரியாக ஜிஎம் சுந்தர் சகுனி நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். பிஜிஎம் மூலமாக படத்தை பிரம்மாண்டமாக காட்டி உள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

பலவீனம்
துணிவு படமே பணத்தை பற்றிய கதை என்றாலும், மேக்கிங்கிற்கு செலவு செய்யப்பட்டதில் செட் போட்டதுக்குத்தான் அதிகம் செலவாகியிருக்கும் என தெரிகிறது. அதுவும் பல இடங்களில் செட் என்று தெரிவது குறைவாகவே உள்ளன. ஹெலிகாப்டர் வெடிப்பது, பாம் பிளாஸ்ட் காட்சிகளில் சிஜி குளறுபடிகள் உள்ளன. இரண்டாம் பாதியில் கருத்து சொல்ல நினைத்த இயக்குநர் மீண்டும் படத்தை கொஞ்சம் ஸ்லோ டவுன் செய்துள்ளது படத்தின் பலவீனமாக மாறி உள்ளது. ஆனால், அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களும் இந்த படத்தை தாராளமாக ஒரு முறை பார்க்கும் அளவுக்கும் தரமான சம்பவத்தை செய்துள்ளனர்.