»   »  பாட்டு எப்படி?

பாட்டு எப்படி?

Subscribe to Oneindia Tamil

எத்தனை நாட்களாகிறது, இப்படி ஒரு இசையைக் கேட்டு. ரோஜாவில் நாம் பார்த்த பழைய ரஹ்மான், மீண்டும்வந்திருக்கிறார்.

கொஞ்ச நாட்களாக அதிரடியாக இசைத்து கொண்டிருந்த ரஹ்மான், அவற்றை ஓரம் கட்டி விட்டு, மென்மையால்நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறார்.

எஸ்.பி.பி.சரண் குரலில் "காதல் சடுகுடு நமக்கு குளிரூட்டுகிறது. ஐஸ்கட்டி போல அப்படி ஒரு குரல். அப்பாவுக்குத்தப்பாமல் பாடுகிறார்.

ஊத்துக்காடு வேங்கடசுப்பைய்யரின் "அலைபாயுதே வித்தியாசமான பின்னணி இசையில், ஒரிஜினல் பாடலாகவருகிறது. கானடா ராகத்தில் கல்யாணி மேனன், ஹரினி, நெய்வேலி ராமலஷ்மி ஆகியோர் பாடியுள்ளஇப்பாடலுக்கு பின்னணியில் அதிராத, மென்மையான இசை.

முன்பு இதுபோன்ற பாடலை இளையராஜாதான் அருமையாக கொடுப்பார். அந்த இடத்தில் இப்போது ரஹ்மான்.

ரட்சகனில் நம் நெஞ்சம் கவர்ந்த சாதனா சர்கம், மீண்டும் நம்மைக் கொள்ளை கொள்ள வந்திருக்கிறார்,"ஸ்நேகிதனே பாடலில். சாரங்கிக் கலைஞர் உஸ்தாத் சுல்தான் கானுடனும், ஸ்ரீனிவாஸுடனும் இணைந்துஇப்பாடலைப் பாடியுள்ளார் சாதனா. அன்பை குழைத்தும், தோழமையை இழைத்தும் இப்பாடலுக்குஇசையமைத்திருக்கிறார் ரஹ்மான். உயிர்ப்புடன் பாடியிருக்கிறார் சாதனா. உங்கள் மனைவி அல்லது காதலியைமனதில் நினைத்துக் கொண்டு பாட்டைக் கேட்டுப் பாருங்கள் புரியும்.

ஸ்வர்னலதா ரொம்ப நாளைக்குப் பிறகு வந்திருக்கிறார். "எவனோ ஒருவன் வாசிக்கிறான்" பாடலால் நம்மைநிலைகுலைய வைக்கிறார், தேசிய விருது தரப் பாடல்.

கிளிண்டன் கூட ஒரு பாடல் பாடியுள்ளார். ஒரு நிமிஷம்..இவர் பில் கிளிண்டன் அல்ல. நம்ம ஊர் கிளிண்டன்.அவரும், ஹரிஹரனும் இணைந்து "பச்சை

நிறமே பாடலில் நம்மை கிரங்க வைக்கிறார்கள்.

மும்பைக்காரர்களான ஆஷா போன்ஸ்லே, சங்கர் மகாதேவனும் இணைந்து செப்டம்பர் மாதம் பாடலைப்பாடியுள்ளனர். இப்படி ஒரு பாடல் தேவையா ரஹ்மான்?

ரஹ்மானின் பலம் அவரது இசை என்றால், அதற்கு உயிர் கொடுப்பது வைரத்துவின் வார்த்தைகள். வழக்கம் போலசொல் வளம்.

சுல்தான் கானின் சாரங்கியும், பண்டிட் விஸ்வ மோகன் பட்டின் மோகன வீணையும், பாடல்களுக்கு புதியபொலிவைக் கொடுக்கின்றன.

நல்ல நல்ல வார்த்தைகள், அழகான இசை, அருமையான குரல்கள் என வித்தியாசமான, அதே சமயம், பழையரஹ்மானை

நினைவூட்டும் நல்ல பாடல்கள்.

அலைபாயுதே.... கேட்பவர் மனதை அலைபாய வைக்கும்.

Read more about: alaipayuthey, arrahman, cinema, review, songs
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil