For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா ‘‘புஷ்பா“ … படம் எப்படி இருக்கு ?

  |

  சென்னை : அல்லு அர்ஜூனின் மிரட்டலா நடிப்பில் இன்று வெளியான புஷ்பா திரைப்படம் எப்படி இருக்குனு பார்க்கலாம்.

  Recommended Video

  Pushpa Movie Audience Opinion | Allu Arjun, Rashmika Mandanna, Pushpa Public Review

  செம்மரக் கடத்தலை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகிள்ள இப்படத்தின் முதல் பாகம் இன்று வெளியாகியுள்ளது.

  பாவனியை விடாது துரத்தும் அமீர்.. பிக் பாஸ் வீட்டுக்குள் ஒரு காதல் கதையை உருவாக்கும் பிரியங்கா!பாவனியை விடாது துரத்தும் அமீர்.. பிக் பாஸ் வீட்டுக்குள் ஒரு காதல் கதையை உருவாக்கும் பிரியங்கா!

  இந்தப் படத்தில் புஷ்பராஜ் என்ற கதாப்பாத்திரத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ளார். போலீஸ் அதிகாரியாக பன்வார் சிங் ஷெகாவத் என்ற கதாப்பாத்திரத்தில் வில்லன் ரோலில் ஃபகத் பாசில் நடித்துள்ளார்.

  புஷ்பா தி ரைஸ்

  புஷ்பா தி ரைஸ்

  சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன்நடிப்பில் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் புஷ்பா தி ரைஸ் பார்ட் 1. ஆந்திர காட்டுப்பகுதியில் மட்டுமே வளரக்கூடிய விளைமதிப்பில்லாத செம்மரங்களை சட்டத்திற்கு புறம்பாக வெட்டி கடத்துபவர் தான் புஷ்பா ராஜ்(அல்லு அர்ஜூன்). செம்மரங்களை போலீஸாருக்கு தெரியாமல் லாவகமாக கடத்திச் செல்வதில் கைதேர்ந்தவராக இருக்கிறார் புஷ்பா. கூலிக்கு செம்மரங்களை கடத்தும் அல்லு அர்ஜூன், பின்னாளில் டானுக்கே டானாக எப்படி மாறுகிறார் என்பது தான் புஷ்பா திரைப்படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.

  மாஸ்

  மாஸ்

  நாயகனாக அல்லு அர்ஜுனின் பாடிலேங்வேஜ், வசன உச்சரிப்பு, சண்டை காட்சியில் மிரட்டுவது, காதல் காட்சியில் உருகுவது என பல பரிமாணங்களில் அல்லு அர்ஜுனின் நடிப்பு மிளிர்கிறது. பல காட்சிகளில் புஷ்பராஜ் என்கிற அந்த கதாபாத்திரமாகவே மாறியுள்ளார் அல்லு அர்ஜூன்.

  பான் இந்திய படம்

  பான் இந்திய படம்

  இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகி உள்ள ஓர் பான் இந்தியா திரைப்படமாகும். இதனால் அனைத்துத் தரப்பு மக்களையு ம் கவரும் வகையில் காட்சிக்கு காட்சி மிரட்டலாக உள்ளது.

  தேவி ஸ்ரீ பிரசாத்

  தேவி ஸ்ரீ பிரசாத்

  புஷ்பா திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருப்பது தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை தான். இன்னும் இரண்டு பாட்டு இருந்தா கூட நல்லா இருக்குமேனு நினைக்க வைத்து கைதட்டலை அள்ளி உள்ளார் இசையமைப்பாளர். குறிப்பாக இணையத்தில் ஹிட்டடித்த ஊ சொல்றியா பாடலுக்கும்... சாமி சாமி பாடலுக்கும் அரங்கமே அதிர்ந்தது.

  குத்தாட்டம்

  குத்தாட்டம்

  ஊ சொல்றியா ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார். அவர் கவர்ச்சியாக ஐட்டம் பாடலுக்கு நடனமாடுவது இதுவே முதன்முறை. தமிழில் இப்பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடி உள்ளார். சமந்தா பாடல் வந்ததும் ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று குத்தாட்டம் போட்டனர்.

  சற்று அலுப்பு

  சற்று அலுப்பு

  புஷ்பா படம் இரண்டு பாகம் என்பதால், ஒவ்வொரு கதாபாத்திரம் பற்றி அழுத்தமாக கூறுவதாக நினைத்து சற்று இழுத்ததால் முதல் பாதி இழுவையாக இருந்தது. இடைவேளைக்கு பிறகு சூடுபிடித்து காட்சிகள் விறுவிறுப்பாக இருந்தது. இருப்பினும் படம் ரயில் வண்டி போல இழுத்துக்கொண்டு ஓடி சுவாரசியத்தை குறைத்துள்ளது. படத்தை சற்று குறைத்து இருந்தால் அலுப்பு தட்டாமல் இருந்து இருக்கும்

  சுவாரசியம் குறைவு

  சுவாரசியம் குறைவு

  இந்த முதல் பாகத்தில் சிறிய வில்லன்களை வைத்துக் கொள்வோம், இரண்டாம் பாகத்தில் ஒரே ஒரு முக்கிய வில்லனை வைத்துக் கொள்வோம் என இடையில் முடிவு செய்தது போலத் தெரிகிறது. எந்த வில்லன் கதாபாத்திரமும் பயந்து நடுக்கும் அளவுக்கு இல்லை.

  மாஸ்

  மாஸ்

  இந்த படத்துனுடைய கதை நமக்கு ஏற்கனவே பழக்கமானது தான். நாசர், முரளி நடித்த அதர்மம் திரைப்படமும் காட்டுக்குள் சந்தன மரக்கடத்தலை அடிப்படையாகக் கொண்டே உருவான திரைப்படம்தான். ஸோ புஷ்பா கதை தமிழிக்கு புதுசு இல்ல பழசுதான். ஆனால், இடை இடையே சண்டை ,பாடல் என படம் மாஸாக உள்ளது.

  English summary
  Allu arjuns pushpa movie Review
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X