For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அன்பானவன் அசராதவன் அடங்காதவன் – ஒய் திஸ் கொலவெறி?

  By Shankar
  |

  மன்மதன் படம் வந்து ஒரு வருஷம் கழிச்சி டி.ஆர் ஒரு பேட்டில "மன்மதன் படம் ஹிட்டு.. ஆனா ஏன் ஏஜே முருகனக் கூப்டு யாரும் அடுத்த படம் எடுக்கல? ஏன்னா அந்தப் படத்த எடுத்தது சிம்புன்னு எல்லாருக்குமே தெரியும்," அப்டின்னு சொன்னாரு. என்னதான் அவரு பையன்ந்தான் அந்தப் படத்த எடுத்தாருன்னு வச்சிக்கிட்டாலும், இயக்குநர்னு ஒருத்தர் வேலை பாத்துருக்காரு. அதுக்கு கொஞ்சம் கூட மரியாதையே குடுக்காம, மீடியா முன்னால பேசுறோமேங்குற ஒரு இங்கிதமும் இல்லாம அப்படி ஓப்பனா சொன்னாரு.

  அதே அடுத்து அவரோட மகனோட இயக்கத்துல வல்லவன்னு ஒரு முழு நீநீநீ.........ளப் படம் வந்துச்சி. அப்ப விஜய் டிவில அந்தப் படத்த விமர்சனம் பண்ண மதன் சிம்புவ அந்த நிகழ்ச்சிக்கு கூப்டு ஒரே ஒரு கேள்வி கேட்டாரு. "இந்தப் படத்த எடுத்து முடிச்சப்புறம் நீங்க அத முழுசா ஒருதடவயாச்சும் பாத்தீங்களா?"ன்னு. ஒரு இயக்குநர இதைவிட ஒருத்தரால அசிங்கப்படுத்த முடியுமான்னு எனக்குத் தெரியல. மேல சொல்லப்பட்ட டி.ஆரோட பேச்சுக்கு மதனோட இந்தக் கேள்விதான் மிகச் சரியான பதிலாக் கூட இருக்கலாம். அந்தக் கேள்விய விடுங்க. அதுக்கு சிம்பு என்ன பதில் சொல்லிருப்பாருன்னு நினைக்கிறீங்க? "ஒர்க் டென்சன்ல ஃபுல்லா பாக்குறதுக்கு எனக்கு டைம் கிடைக்கல!"

  Anbanavan Adangathavan Asarathavan readers review

  இப்ப டி.ஆர நா ஒரு கேள்வி கேக்குறேன். "உங்க பையந்தான் மன்மதன எடுத்தாருன்னு நீங்க நினைச்சீங்கன்னா... வல்லவன் படத்துக்கப்புறம் ஏன் இன்னும் ஒரு படம் கூட உங்க மகனால இயக்க முடியல? இயக்கத்த விடுங்க... இன்னும் ஏன் ஒரு சுமார் ஹிட்டு கூட குடுக்க முடியல?" அடுத்தவன் நம்மளப் பத்தி பெருமையா பேசுறதுல தப்பில்லை. ஆனா நமக்கு நாமே தற்பெருமை பேசிக்கிறது கிட்டத்தட்ட ஒரு வியாதி மாதிரி.

  சரி... இப்ப அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் எப்டி இருக்குன்னு பாப்போம்.

  படத்தப் பத்தி சுருக்கமா சொல்லிடுறேன். தமிழ் சினிமாவோட ஒட்டுமொத்த தீய சக்திகளும் ஒண்ணா சேர்ந்து ஒரு படம் எடுத்தா எப்டி இருக்குமோ அதுதான் இந்த AAA.

  Anbanavan Adangathavan Asarathavan readers review

  இதுல படத்துக்கு விளம்பரம் 'From the director of திரிசா இல்லன்னா நயந்தாரா'ன்னு. அப்டியே 500 நாள் ஓடுன ப்ளாக் பஸ்டர எடுத்து தள்ளிட்டாய்ங்க பாருங்க. ஷகிலா படத்துல பிட்டுங்கள கட் பன்னிட்டு சென்சார் போர்டுல சர்டிஃபிகேட் வாங்கி ரிலீஸ் பண்ண மாதிரி ஒரு படத்த எடுத்துட்டு 'From the director of திரிசா இல்லைன்னா நயந்தாராவாம்'.. மேய்ச்சது எறுமை.. இதுல என்ன பெருமை.. அந்தப் படத்தை எடுத்த குற்றத்துக்காகவே ஆதிக் ரவிச்சந்திரனுக்கு இ.பி.கோல ஏதாவது ஒரு செக்‌ஷன் படி அதிகபட்ச தண்டனை குடுக்கனும். இப்ப AAA வேற.. இந்த க்ரைமுக்கெல்லாம் புதுசாத்தான் தண்டனை கண்டுபுடிக்கணும்.

  படத்தோட ஆரம்பத்துல கஸ்தூரி மார்டன் ட்ரஸ்லாம் போட்டுக்கிட்டு துபாய்ல ஒரு பார்ல உக்காந்து ஒருத்தனப் பாத்து ரொமாண்டிக் லுக்கு விட்டுக்கிட்டு இருக்கு. கால பின்னுது...கண்ண சுருக்குது... உதட்ட சுழிக்குது..ரொமான்ஸ் பண்ற வயசா? அதுகூடப் பரவால்ல. அவன் கஸ்தூரியப் பாத்து திரும்ப ரொமாண்டிக் லுக் விடுறான். ரொம்ப மோசமான கண்டிஷன்ல இருப்பான் போல. கட் பண்ணி ஓப்பன் பண்ணா கஸ்தூரி துபாய்ல ஒரு இண்டர்போல் ஆப்பீசர். அவங்க துபாய் சிட்டியவே கலக்குன ஒரு மிகப்பெரிய தாதாவ தேடிக்கிட்டு இருக்காங்க..

  அந்தப் பக்கம் கட் பண்ணா மதுரை மைக்கேல்னு ஒரு ரவுடி. எல்லாரும் அவரை மதுரை மதுரைன்னு கூப்டுறாங்க. செம்மையான ஒரு இண்ட்ரோ.. சிம்பு வாழ்க்கையில இதுவரைக்கும் இப்டி ஒரு இண்ட்ரோ வந்ததில்லை. யுவன் BGM க்கும் அதுக்கும் தெறிக்குது.

  Anbanavan Adangathavan Asarathavan readers review

  ஆளுங்கள மட்டை பண்றதுதான் (கொல்றது) மைக்கேலோட வேலை.. சிம்வுவோட கூட கொலை பண்ணப் போறது யாருன்னா மங்காத்தா மஹத்தும், விடிவி கணேஷும். விடிவி கணேஷும் அவர் ஹேர் ஸ்டைலும் அபாரம்.

  சரி சிம்பு கொலை பண்றாப்ள.. அதையாச்சும் கொஞ்சம் சீரியஸா காமிக்கிறாங்களான்னா அதுவும் இல்லை. ரொம்ப கேஷுவலா காட்றாங்க. "நீ இனிமே இந்த மாதிரியெல்லாம் பண்ணக்கூடாது"ன்னு ஸ்ரேயா சிம்புட்ட சொல்றாங்க. என்னம்மா இது? வீட்டுப்பாடம் எழுதிட்டு வராதா புள்ளைக்கிட்ட மிஸ்ஸு சொல்ற மாதிரி சொல்லிக்கிட்டு இருக்க? கொலை பன்னிருக்காம்மா.. கொஞ்சம் சீரியஸா பேசுங்கம்மான்னு கமென்ட் பறக்குது! அடப்பாவிகளா படம் பாக்குற எங்களுக்குள்ள சீரியஸ்னஸ் கூட உங்களுக்கு இல்லையேன்னு வருத்தமா இருந்துச்சி.

  சிம்பு அந்த கெட்டப்புல சூப்பரா இருந்தார்.. குறிப்பா வசனம் பேசாத காட்சிகள் அருமை. ஒய்ஜி மகேந்திரனோட ஒரு காமெடி ட்ராக் வச்சிருக்காங்க பாருங்க. ஷ்ஷப்பா... மிடில!

  Anbanavan Adangathavan Asarathavan readers review

  யுவன் சங்கர் ராஜாவ வச்சி முதல் பாதிய ஓரளவுக்கு நகர்த்திருக்காங்க. ஒரே BGM தான்.. மங்காத்தா, வேல், அறிந்தும் அறியாமலும் படத்துல போட்ட தீமையெல்லாம் கலந்தா மாதிரி ஒரு செம்ம BGM போட்டுருக்காjd. இந்த மொக்கை குரூப்புல யுவன் மட்டும் டீ ஆத்திட்டு இருக்காரு. ஒரு வழியா இண்டர்வல் வந்துச்சி.

  இண்டர்வல்ல பக்கத்துல இருந்தவரு "ச்ச...என்ன ஒரு துடிப்பு.. என்ன ஒரு நடிப்பு... இந்த வயசுலயும் இப்டி ஆக்டிவ்வா இருக்காரே.. டி.ஆர்... டி.ஆர் தாம்ப்பா"ன்னாரு.

  "என்னது டி.ஆரா? அடப்பாவி இவ்வளவு நேரமd டி.ஆருன்னு நினைச்சிதான் பாத்துக்கிட்டு இருந்தியா? இது அவரு பையன் STR ய்யா," ன்னேன்.

  "அட போப்பா.. டி.ஆரா எனக்குத் தெரியாதா.. அதே தாடி.. அதே ஹேர் ஸ்டைல் நா சின்ன வயசுலருந்து டி.ஆர் ஃபேன்.. என்னை யாரும் ஏமாத்த முடியாது," அப்டின்னுட்டு எழுந்து பாத்ரூம் பக்கம் போனாரு.

  செகண்ட் ஹாஃப் ஆரம்பிச்சிது. அஷ்வின் தாத்தா வந்தாரு.. தமன்னாவ லவ் பண்றேன்னு ஒரு லவ் பாட்டுப் பாடுனாரு பாருங்க.. வடிவேலு கொசு மருந்து அடிக்கும்போது பொத்து பொத்துன்னு எல்லாம் மயங்கி விழுவாயங்களே அந்த மாதிரி தியேட்டர்ல body விழுக ஆரம்பிச்சிருச்சி. யப்பா சாமி... நாடி நரம்பு, ரத்தம், சதை புத்தி எல்லாத்துலயும் மொக்கை வெறி ஊறிப்போன ஒருத்தனாலதான் இப்படி ஒரு செகண்ட் ஹாஃப எடுக்க முடியும்.

  படம் முடியப் போற சமயத்துல கெஸ்ட் அப்பியரன்ஸ் G.V.ப்ரகாஷ். சிம்புவும் ஜிவியும் மாத்தி மாத்தி "பொண்ணுங்க அப்டி பாஸ்.. பொண்ணுங்க இப்டி பாஸ்"ன்னு பேசிக்கிட்டு இருக்க, என் பக்கத்து சீட்டு ஆடுற மாதிரி இருந்துச்சி. திரும்பிப்பாத்தா பக்கத்துல உக்காந்துருக்கு வாயில நுறை தள்ளுகிட்டு இருக்கு. உங்களுக்கும் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். உசாரைய்யா உசாரு.. ஓரஞ்சாரம் உசாரு.

  தமிழ்ல எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல்லாம் கணக்கில்லாத ஹிட்டுங்கள குடுத்துருக்காங்க. ரஜினி, கமல்லாம் மிஞ்சி மிஞ்சிப் போனா ஒண்ணு ரெண்டு படங்கள்ல அவங்களோட பழைய ஹிட் படங்களோட காட்சிகளை மறுபடியும் பயன்படுத்தியிருப்பாங்க. ஆனா ஒரே ஒரு படத்த எடுத்த ஆதிக்கு சுத்தி சுத்தி அதே படத்தப் பத்தி பேசிக்கிட்டு வெறுப்பேத்திட்டு இருக்காரு. படம் முழுக்க திணிக்கப்பட்ட ரெட்டை அர்த்த வசனங்கள். இருக்குற தொல்லை பத்தாதுன்னு ரெண்டாவது பாதில காமெடி பன்றேங்குற பேர்ல ஓவர் ஆக்டிங் கோவை சரளாவ வேற உள்ள கொண்டு வந்துருக்காங்க. கேக்கவா வேணும். தமன்னாவை இந்தப் படம் அளவுக்கு எந்தப் படத்துலயும் வெறுத்ததில்லை.

  படத்துல வாய் விட்டு சிரிச்சது ரெண்டு இடத்துலதான். ஒண்ணு படம் போடுறதுக்கு முன்னால போடுற Health Advisory ல மொட்டை ராஜேந்திரன் குரல் வந்தப்போ. இன்னொன்னு சிம்பு சீரியஸா காதலப் பத்தி வசனம் பேசிக்கிட்டு இருந்தப்போ தியேட்டர்ல ஒருத்தன் சத்தமா கெட்டவார்த்தையில திட்டுனப்போ.

  இப்ப இருக்க ஹீரோக்களெல்லாம் என்னென்னவோ புதுப் புது கான்செப்ட் புடிச்சி படம் குடுக்குறாங்க. பெரிய ஹீரோக்களெல்லாம் விவசாயத்த அடிப்படையா வச்ச கதைகள எடுத்து மக்கள கவர் பண்ணப் பாக்குறாங்க. ஆனா சிம்பு மட்டும் இன்னும் அதே லவ், லவ் பண்ண பொண்ணு ஏமாத்திருச்சி, லவ் பெயிலியர் சாங்குன்னு குண்டுச் சட்டிக்குள்ளயே எறுமை மாடு மேய்ச்சிட்டு இருக்காரு. பொண்ணுங்களயும், லவ்வயும் தவற வேற எந்த கான்செப்டுமே தோணாது போல அவருக்கு.

  இதுல கொடுமை என்னன்னா இந்தப் படத்துக்கு ரெண்டாவது பகுதி வேற இருக்காம்.

  ஆக அன்பானவன் அசராதவன் அடங்காதவன் பாத்தப்புறம் நா சொல்றது என்னன்னா காற்று வெளியிடை ஒரு அருமையான படம்.

  - முத்து சிவா

  English summary
  Readers review for Simbu's Anbanavan Adangathavan Asarathavan movie
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X